ஒடிசாவிலிருந்து சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை: மருத்துவத் துறை செயலாளர் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கி சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மருத்துவத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார்.

ஒடிசாவில் இருந்து 250 பயணிகள் நாளை காலை சிறப்பு ரயில் மூலம் சென்னை வர உள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "6 மருத்துவக் குழுக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் உள்ளது.

ஒடிசாவில் இருந்து வருபவர்களுக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவில் 40 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சிறிய காயம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஸ்டான்லி, ஓமந்தூரார், கீழ்பாக்கம் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. தேவைப்பாட்டால் புறநகர் மருத்துவமனையில் கூட சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஒடிசா செல்ல மருத்துவர்களின் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE