கோடை விடுமுறை நிறைவு: 1,300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடைக்கால விடுமுறை முடிந்து, வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

இதனால் வார இறுதி நாட்களில் கூடுதல் பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழகத்தின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து பெங்களூரு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு 1,300 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 2,200 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் (ஜூன் 2) நாளை வரை (ஜூன் 4) இயக்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்