சரியான எண்ணங்களைத் தேர்வு செய்யுங்கள் | சக்ஸஸ் ஃபார்முலா - 24

By நஸீமா ரஸாக்

ஆபிஸிலிருந்து விடுதி வந்தவுடன் சச்சு படபடப்புடன் என்னிடம் வந்தார்.

“நஸீ, நாளைக்கு ஆன் சைட்க்குத் யார் யார் எல்லாம் போகப் போறாங்கனு தெரிஞ்சிடும். இன்னைக்குத் தூக்கம் போச்சு போ.”

“நீ என்ன யோசிச்சிட்டு இருக்கன்னு தெரியும். ஆனா அதை எப்படி யோசிக்கிறன்னு தெரியல.”

“புதிர் போடாம சொல்லு நஸீ.”

“கண்ணை மூடு. இப்ப நீ குரங்கைப் பத்தி ஒண்ணும் யோச்சிக்காத. அது கையில் இருக்கும் வாழைப்பழத்தைப் பத்தியும் நினைக்காத. இப்ப கண்ணைத் திற.”

“பல ஆண்டுகளா நான் யோசிக்காத குரங்கு என் கண்முன் வந்தடுச்சு. இதெப்படி நஸீ?”

”இதைத் தெரிந்து கொண்டால், எண்ணங்களைத் தேர்வு செய்யும் சூட்சுமம் தெரிந்துவிடும். ஒரு விஷயம் அல்லது ஒரு செயல் நடக்கக் கூடாது என்று எண்ணும் போது அது நிச்சயமாக நடக்கும். குழந்தைகளிடம், ’கண்ணா, அம்மா கடை வரைக்கும் போயிட்டு வரேன். நீ டிவி பார்க்காம உட்கார்ந்து படி’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டால், அந்தக் குழந்தை படிக்குமா, டிவி பார்க்குமா? சந்தேகமின்றி டிவிதான் பார்க்கும். குழந்தையின் அம்மா, ’கண்ணா ஒழுங்கா படி’ என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தால். அவன் மனம் படிப்பில் மட்டும் இருந்து இருக்கும்.

இதில் ஒரு உளவியல் இருக்கிறது. எதை நினைக்கக் கூடாது என்று சொல்கிறோமோ மனம் அதைத்தான் நினைக்கும். சரியான எண்ணங்கள் இருந்தால், அதுவும் சரியாக வேலை செய்யும். எது வேண்டாம் என்று யோசிப்பதற்குப் பதில், எது வேண்டுமோ அதை யோசிக்க வேண்டும். எதை நாம் நினைக்கிறோமோ அது நடக்கும். எப்படி நினைக்கிறோமோ அதன் வீச்சில் அதன் வேகம் கூடும்.

ஆழ் மனதிற்கு எது நல்லது, எது கெட்டது என்று எல்லாம் பிரித்துப் பார்க்கத் தெரியாது. நாம் எதை ஆழமாக நம்புகிறோமோ, பயப்படுகிறோமோ அது நிகழப் பெரும்பாடுபடும். அதனால்தான் மனம் ஒரு மந்திரக் கோல் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

நம் மனத்தில் ஓராயிரம் எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கும். எல்லாமும் ஆழ் மனத்திற்குச் செல்வதில்லை. பல எண்ணங்கள் நொடியில் காணாமல் போய்விடும். ஆனால் சில எண்ணங்கள் ஆழ் மனதிற்குச் செல்லக் காத்துக் கொண்டிருக்கும். அதைத் தெரிந்து கொண்டால், மிகச் சுலபமாக அதை நாம் மாற்ற முடியும்.

மேலே சொன்ன உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். குழந்தை என்ன செய்யக் கூடாது என்று சொல்வதற்கும், என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கும் உள்ள முறையைப் பாருங்கள். எண்ணுவது அல்ல விஷயம், எப்படி எண்ணுகிறோம், எதை எண்ணுகிறோம் என்பதுதான் முக்கியம். தெளிவான எண்ணங்களைத் தேர்வு செய்ய 10 வழிகளைப் பார்க்கலாம்:

1. எண்ண அலைகளைச் சீராக்க நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதற்குச் சில பயிற்சிகள் அவசியம். மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவை பயன் அளிக்கும்.

2. ஒரு நாள் மூச்சுப் பயிற்சியைச் செய்துவிட்டு மாற்றத்தை எதிர்பார்க்கக் கூடாது. பொறுமையோடும் நிலைத்தன்மையோடும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

3. எதிர்மறை எண்ணங்கள் வந்தால், அதற்கு எதிரான சரியான எண்ணங்களை யோசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்.

4. நாம் அனைவரும் உள்ளுக்குள் எண்ணங்களின் மூலம் பேசுகிறோம். அதாவது நமக்கு நாமே பேசுவது உண்டு. பலர் இதை விழிப்புணர்வோடு செய்வார்கள். சிலர் அதன் போக்கில் விட்டுவிடுவார்கள். எப்படிப் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள்.

5. முடிந்தவரை தேவையில்லாத, உஙகள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை எண்ணிக் கற்பனை செய்து கவலைப்படாதீர்கள். அது உங்களைப் பதற்றமடையச் செய்யும்.

6. தூங்கச் செல்வதற்கு முன், பத்துப் பதினைந்து நிமிடங்கள், முடிந்தவரை நாளை என்ன செய்ய வேண்டும், உங்கள் இலக்கு போன்றவற்றைத் தெளிவாக எண்ணுங்கள்.

7. உங்களைச் சுற்றிச் சரியான மனநிலையில் உள்ள, உங்கள் இலக்குகளுக்குத் துணை நிற்கும் மனிதர்களை வைத்துக் கொள்ளுங்கள். அதாவது தொடர்பில் இருங்கள்.

8. கண் முன் தோன்றும் காட்சிகள் கற்பனையாக இருந்தாலும் அதைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும்.

9. எல்லா இலக்குகளையும் ஒரே நேரத்தில் மனத்தில் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஒரு நேரத்தில், ஓர் இலக்கு அதைச் சார்ந்த எண்ணங்கள் என்று பிரித்துக் கொள்ள வேண்டும்.

10. எந்தப் பலனும் ஒரு நாளில் கிடைத்து விடாது. எந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போதுதான் எண்ணங்களில் தெளிவு கிடைக்கும். செய்யும் செயலில் வேகம் கூடும்.

மேலே சொன்னவை சுலபமாகத் தெரியும், அதைச் செயல்படுத்தும் போது வரும் சின்ன சின்ன தடைகளை மீறித் தொடர்ந்து செய்துப் பாருங்கள். மனம் தெளிவாகும்.

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார். | தொடர்புக்கு: writernaseeema@gmail.com

முந்தைய அத்தியாயம் > Wu Wei: சொல்லிக் கொடுக்கும் பாடம் | சக்ஸஸ் ஃபார்முலா - 23

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 mins ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்