“சச்சு… சச்சு...” என்று அழைத்துக் கொண்டு அவர் அறைக்குச் சென்றேன். கடந்த இரண்டு மூன்று நாள்களைப் போலவே அவர் சீக்கிரம் படுக்கைக்குச் சென்றிருந்தார்.
“சச்சு, நிஜமாவே தூங்கிட்டியா? ரெண்டு நாளா நீ சரியா சாப்பிடலைன்னு மெஸ்ல சொன்னாங்க. ப்ளீஸ் எழுந்திரி. இப்படி வெளியே சொல்லாம உனக்குள்ள கஷ்டப்பட்டா ஒண்ணும் பண்ண முடியாது சச்சு.”
மெதுவாகப் படுக்கையிலிருந்து எழுந்த சச்சுவின் முகம் பலூன் போல் ஊதி இருந்தது. கண்கள் அழுது சோர்ந்து போயிருந்தன.
“சொல்றேன், ஆறு மாசமா மாங்கு மாங்குனு அந்த ப்ராஜெக்ட்ல வேல செய்தும், நான் பிரயோஜனம் இல்லன்னு இன்னைக்குச் சொல்லிட்டாங்க. என்ன தூக்கி இன்னொரு ப்ராஜெக்ட்ல போடப் போறாங்களாம். இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.”
சச்சு மட்டுமல்ல, நாம் அனைவரும் நிராகரிப்பைச் சந்தித்துத்தான் வாழ வேண்டும்.
வேலை செய்யும் இடம், உறவுகள், நட்பு வட்டம் என்று எங்கிருந்து வேண்டும் என்றாலும் நிராகரிப்பு வரும்.
பதினைந்து வருடம் ஒன்றாக வாழ்ந்த பின்னர் உறவுக்குள் ஒரு நிராகரிப்பு வருகிறது. வேலை செய்த நிறுவனம் திடீர் என்று அழைத்து இனி வேலை இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு தனக்குத் தானே நிராகரிப்புச் செய்து வேதனை அடைவது. இவை அனைத்தும் நிராகரிப்பின் பல முகங்கள்.
தாங்க முடியாத வலி ஏற்படும்போது உடலில் நடக்கும் அனைத்தும் நிராகரிப்பின் போதும் நடக்கிறது. நம் மூளை நிராகரிப்பை ஒரு வலியாக எடுத்துக் கொள்கிறது. அதை நாம் அப்படிப் பழக்கி வைத்திருக்கிறோம். அதன் விளைவு மன உளைச்சல், உடல் நலக் குறைவு என்று நாம் சுருங்கி விடுகிறோம். இதை எப்படி அணுக வேண்டும் என்று தெரிந்தால் நிராகரிப்பை நாம் நிராகரித்துவிடலாம்.
1. உங்கள் நண்பரை ஒருவர் ஏதோ கரணத்துக்காக நிராகரித்துவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அதையேதான் நீங்கள் நிராகரிக்கப்படும் போதும் செய்ய வேண்டும்.
2. நிகழ்வு நடந்தவுடனே மனம் எதையும் யோசிக்க அனுமதிக்காது. அந்த வலியை, வேதனையைச் சில நிமிடம் அனுபவித்துச் செரித்துவிடுங்கள். அதற்கு மேல் அதே மன நிலையில் இருக்கக் கூடாது.
3. யாரோ ஒருவர் உங்களை நிராகரித்துவிட்டார் என்பதால் நீங்களே உங்களை லாயக்கற்றவர்கள் என்று எண்ணிவிடக் கூடாது. அது சுயபச்சாதாபத்தில் சேர்ந்து விடும். அதிலிருந்து விடுபடுவது கரோனாவிலிருந்து விடுபடுவதற்குச் சமம்.
4. வேலையிலோ வீட்டிலோ உங்கள் வேலையை அல்லது உங்களை நிராகரித்தால், உடனே வாழ்க்கை இருண்டுவிட்டதாகத் தோன்றும். அந்தச் சமயத்தில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், ‘இதுவும் கடந்து போகும்’ என்பதை நம்ப வேண்டும்.
5. உங்களுக்கு நம்பிக்கையான நண்பர்களிடமோ குடும்பத்தாரிடமோ மனம் விட்டு உங்கள் வேதனையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். சில நேரம் நம் வலிகளைப் பகிர்ந்து கொண்டால் போதும், மனம் லேசாகும்.
6. நிராகரித்தவர்களின் காரணிகள் என்னவாக இருக்கும் என்று யோசிக்கலாம். ஒரு வேளை அந்தக் காரணங்கள் சரி என்றால் அதைச் சரி செய்யத் திட்டமிட வேண்டும். தோல்வி என்கிற எண்ணத்திலிருந்து விடுபட்டு கற்றல் இடத்திற்கு உங்களை நகர்த்த வேண்டும். அந்தச் சூழலிலிருந்து என்ன கற்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
7. உங்கள் மனதை ஒரே விஷயத்தில் முழுவதுமாக ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. உதாரணத்திற்குச் சச்சு சூழ்நிலையை எடுத்துக் கொள்வோம். வாரம் முழுக்க வேலை, வேலை, வேலை மட்டுமே. அதனால்தான் அந்த நிராகரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுவே அவருக்கு ஒரு பொழுதுபோக்கு, நல்ல நண்பர்கள் என்று மற்ற விஷயங்களும் சரியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
8. ‘இதுதான் இப்போதைக்கு என் நிலை. இதற்கு மேல் நான் செய்ய நினைப்பது குழப்பத்தில் முடியும். அதனால் என்னால் இப்போது என்ன முடிகிறதோ அதைச் சிறப்பாகச் செய்கிறேன்.’ இப்படி உங்களை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டால், சுய நிராகரிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
9. யாரோ என்றோ நிராகரித்த விஷயங்களை நேற்று நடந்தது போல் நினைத்து மனதைப் பாரமாக்கிக் கொள்வதால், நஷ்டம் அடையப் போவது நீங்கள் மட்டுமே. தேவையற்ற சில சம்பவங்களைக் கடந்து வருவதால், புதிதான ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் சிந்திக்க முடியும்.
10. ஒரு முறை நிராகரித்து விட்டார்கள் என்பதற்காக , இன்னொரு முறை அதை முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது. அப்படிச் செய்வதால், வாய்ப்புகள் , கற்றல் எல்லாம் மட்டுப் போகும்.
சொன்னதை எல்லாம் கிளிப்பிள்ளை போல் கேட்டுக் கொண்டிருந்த சச்சு, நல்ல உடையை உடுத்திக் கொண்டார். இருவரும் கடற்கரைக்குச் சென்றோம்.
- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார். | தொடர்புக்கு: witernaseema@gmail.com
முந்தைய அத்தியாயம்: எல்லா நம்பிக்கைகளும் நம்பிக்கையல்ல! | சக்ஸஸ் ஃபார்முலா - 14
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago