திண்ணைப் பேச்சு 36: குற்றமும் தண்டனையும்

By தஞ்சாவூர்க் கவிராயர்

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தக் குற்றங்களுக்கான தண்டனைகள் காலம்தோறும், நாடுகள்தோறும் மாறுபடுவதைப் பார்க்கிறோம். குற்றம் புரியாத மனிதர்கள் யாருமில்லை. அதனால்தான் பொதுஇடத்தில் தவறு செய்த பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்ல முனைந்தபோது யேசுபிரான், ‘உங்களில் குற்றமே செய்யாதவர்கள் இவர்மீது முதல் கல்லெறியட்டும்’ என்று அந்தப் பெண்ணுக்காகப் பேசினார்.

நாடுகள்தோறும் தண்டனைகள் மாறுபடு கின்றன. நாகரிகத்தில் உயர்ந்துவிட்டதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் நாடுகளின் சட்டதிட்டங்கள் பிற்போக்குத்தனமாக இருக்கின்றன. சாட்டையால் அடிப்பது, பிரம்பால் அடிப்பது, பொதுஇடங்களில் மக்கள் முன்னிலையில் மரண தண்டனைகளை நிறைவேற்றுவது என்பன அவற்றுள் சில. அண்மையில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவரை, ஒரு நாடு மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்றது உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE