முதலீட்டாளர்களுக்கு உதவும் தரமதிப்பீடு

By ஆர்த்தி கிருஷ்ணன்

ங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்திருக்கும் பெரிய முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களில் ஏதாவது நிதிச் சிக்கல் என்றால் உடனடியாக தெரிய வரும். இதனால் அவர்கள் தங்களுடைய முதலீடுகளை பாதுகாக்க முடியும். ஆனால் சிறு முதலீட்டாளர்களுக்கு இது போன்ற தகவல்கள் கடைசியாக கிடைப்பதால் நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.

ஒரு நிறுவனத்தில் பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அந்த தகவல் வதந்தியாக வெளியாகி, பங்கு மற்றும் கடன் சந்தையை பாதிக்கும். ஆனால் நிறுவனத்தில் நிலவும் சிக்கலைக் குறித்து முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் தர மதிப்பீடுகளோ காலதாமதமாகத்தான் வெளியாகின்றன. இதனால் முதலீட்டாளர்களை பாதுகாக்கும் பொருட்டு தர மதிப்பீட்டை வழங்கும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளை செபி மாற்றி அமைத்திருக்கிறது.

செயல்பாடுகளில் கவனம்

நிறுவனங்களின் முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில்தான் தர மதிப்பீடு வெளியிடப்படுகின்றன. உதாரணத்துக்கு காலாண்டு முடிவுகள், கையகப்படுத்துதல், நிறுவனங்களை பிரித்தல் உள்ளிட்ட முக்கியமான சமயங்களில் மட்டுமே தரமதிப்பீடு வெளியிடப்படுகின்றன. ஆனால் , நிறுவனங்கள் பங்குச்சந்தைக்கு தாக்கல் செய்யும் அனைத்து தகவல்களின் அடிப்படையிலும் தரமதிப்பீட்டை வெளியிட வேண்டும் என செபி அறிவுறுத்தியிருக்கிறது. கடந்த ஜூன் முதல் இதை நடைமுறைப்படுத்தியது. மேலும் பங்குச்சந்தையில் அதிக சரிவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் 7 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு தரமதிப்பீட்டை மாற்றி அமைக்க வேண்டும் என செபி கூறியிருக்கிறது.

இதன் காரணமாக சந்தையில் ஏற்படும் சரிவுகளை தரமதிப்பீட்டு நிறுவனங்கள் கண்காணித்து வருகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முதலீடு குறித்து முதலீட்டாளர்கள் சரியான முடிவெடுக்க முடியும். உதாரணத்துக்கு ரெலிகர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் நடந்ததை பார்ப்போம். கடந்த ஜூன் மாதம் இதன் பங்கு ரூ.170 என்னும் விலையில் வர்த்தகமானது. ஆனால் இந்த நிறுவனத்தின் கடன் வழங்குதலில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியான பின்னர் செப்டம்பர் மாதத்தில் ஒரு பங்கு விலை ரூ. 43 ரூபாயாக சரிந்தது.

இதனையடுத்து கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் ரெலிகர் பின்வெஸ்ட் நிறுவனத்தின் கடன் பத்திரங்களை ஏஏ மைனஸ் என்னும் நிலையில் இருந்து ஏ என்னும் நிலைக்கு தகுதியை குறைத்தது. இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனமும் தகுதியை குறைத்தது. தரமதிப்பீடுகளை தொடர்ந்து கவனித்து வரும் முதலீட்டாளர்கள் ஜூலை மாதமே ரெலிகர் நிறுவனத்தின் முதலீட்டில் இருந்து வெளியேறி இருக்க முடியும்.

ஒத்துழைக்காவிட்டால்?

அதுபோல மற்றொரு உதாரணமான அம்டெக் ஆட்டோ நிறுவன செயல்பாடுகளைக் குறிப்பிடலாம். அம்டெக் ஆட்டோ நிறுவனத்தின் கடன் பத்திரத்தில் ஜேபி மார்கன் மியூச்சுவல் பண்ட் முதலீடு செய்திருந்தது. ஆனால் அம்டெக் ஆட்டோ சரியாக ஒத்துழைக்காததால் தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இதன் நிறுவனம் மீது மதிப்பீடு வழங்குவதை நிறுத்தின. தர மதிப்பீடு நிறுத்தப்பட்டதால் ஜெபி மார்கனின் கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட் என்ஏவி குறைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செபி மற்றொரு நடவடிகையை எடுத்தது. குறிப்பாக நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டாலும் தர மதிப்பீடு வழங்க வேண்டும். அப்போதுதான் முதலீட்டாளர்கள் நிறுவனத்தை பற்றி புரிந்து கொள்ள முடியும். தர மதிப்பீட்டுக்கு நிறுவனங்கள் ஒத்துழைக்கவில்லை என்கிற வாசகத்துடன் தர மதிப்பீடு வழங்க வேண்டும் என செபி வலியுறுத்தியிருந்தது.

சில சமயங்களில் தர மதிப்பீடு குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மாறுபட்ட கருத்து இருக்கும். அதுபோன்ற சமயங்களின் எங்களின் மதிப்பீட்டில் நிறுவனத்துக்கு மாற்று கருத்து இருக்கிறது என்னும் வாசகத்தையும் சேர்த்தே சொல்லப்பட வேண்டும் என்றும் செபி தெரிவித்திருக்கிறது. இக்ரா நிறுவனம் தரமதிப்பீடு செய்த 201 நிறுவனங்கள், அந்த மதிப்பீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையும் சேர்த்தே இக்ரா தன்னுடைய இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது.

திவாலாகும் வாய்ப்பு?

நிறுவனங்கள் கடனை தாமதமாக திருப்பி செலுத்துவது அல்லது திவால் நிலைக்கு செல்கிறது ஆகியவை முதலீட்டாளர்களுக்கு கடைசியாகத்தான் தெரியும். இதுவரை இந்த தகவல்கள் ஊகங்களின் அடிப்படையில் பொதுவெளிக்கு வரும். ஆனால் கடந்த ஜூன் முதல் நிறுவனங்கள் தாமதமாக கடனை செலுத்தினாலோ, திவால் நிலைக்கு அருகில் இருந்தாலோ தர மதிப்பீட்டு தகவலில் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு தரமதிப்பீட்டின் போதும் செலுத்த வேண்டிய கடன் சரியாக செலுத்தப்பட்டிருக்கிறதா என்பதை அறிவிக்க வேண்டும். ஒரு வேளை திவாலாகும் போது, நிறுவனத்தை மறுபரிசீலனை செய்து இரு நாட்களில் தரமதிப்பீட்டு நிறுவனங்கள் அறிக்கை வெளியிட வேண்டும்.

இந்த விதிமுறை மாற்றங்களால் முதலீட்டாளர்கள் தங்களது ரிஸ்க்கினை குறைத்துக்கொள்ளலாம்.

-aarati.k@thehindu.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்