வாரிசை தேடும் தொழிலதிபர்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் உள்ள சிவில் வழக்கு களில் பெரும்பாலும் சொத்து தகராறுகளாக இருக்கும். அரை ஏக்கர் நிலத்தை யார் எடுத்துக் கொள்வது என்பதில் இந்த அக்கப்போர்கள் தொடங்கும். ஆனால் சீனாவில் உள்ள பெரும் பணக்காரரின் நிலை வேறுமாதிரியாக இருக்கிறது.

சீனா பொழுதுபோக்கு துறையில் முக்கியமான நிறுவனம் வாண்டா குழுமம். இந்த நிறுவனம் தியேட்டர், மால்கள், தீம்பார்க் என பொழுது போக்கு துறையில் முன்னணியில் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் வாங் ஜியான்லின். வாண்டா குழுமத்தின் மதிப்பு 9,180 கோடி டாலர். ஆனால் இந்த குழுமத்தை ஏற்று நடந்த தன்னுடைய மகன் வாங் சிகோங் மறுத்துவிட்டதாக ஜியான்லின் தெரிவித்திருக்கிறார்.

29 வயதாகும் என் மகனிடம் எப் போது நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்துகிறாய் என்று கேட்டேன். ஆனால் என்னை போன்ற வாழ்க் கையை வாழ விரும்பவில்லை என மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தற்போதைய இளைஞர்களின் விருப்பம் வேறு துறைகளில் இருக்கலாம். அதனால் இயக்குநர் குழு நடவடிக்கைகளை மட்டும் கவனித்து, நிர்வாகத்தை தொழில்முறை நிர்வாகிகளிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருப்பதாக ஜியான்லின் கூறியுள்ளார்.

வாண்டா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க சிகோங் மறுத்து விட்டாலும் இக்குழுமத்தில் 2 சதவீத பங்கு இவரிடம் இருக்கிறது. இதன் மதிப்பு 173 கோடி டாலர்கள். இதுதவிர தனது தந்தையிடம் இருந்து பெற்ற 7.2 கோடி டாலர் முதலீட்டை வைத்து பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சீனாவில் வளர்ந்து வரும் இணையம் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். தவிர சீனாவின் முக்கியமான சமூக பிரபலமும் கூட. சீனாவில் உள்ள சமூக வலைத்தளமான வெய்போவில் இவரை 2 கோடி பேர் பின் தொடருகிறார்கள்.

இவர் மட்டுமல்லாமல் சீனாவில் 80 சதவீத இளைஞர்கள் (சீனாவின் 182 பெரும் குழுமங்களை சார்ந்த அடுத்த தலைமுறை இளைஞர்கள்) பெற்றோர்களின் சொத்தில் வாழாமல் தனிப்பட்ட முறையில் வாழ விரும்புவதாக ஷாங்காய் ஜியோடோங் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வாண்டா குழுமம் 1988-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சிறிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக தொடங்கப்பட்ட இந்த குழுமம் இன்று சர்வதேச அளவில் பறந்து விரிந்திருக்கிறது. 62 வயதாகும் ஜியான்லினுக்கு மாற்று இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. புதிய தலைவரை தேடுகிறோம் என்பதற்கு மட்டுமல்லாமல், அமெரிக்க அதிபராக போகும் ட்ரம்புக்கு அவர் விடுத்த எச்சரிக்கை காரணமாகவும் இவர் கடந்த வார செய்திகளில் அதிகம் பேசப்பட்டார்.

ட்ரம்புக்கு எச்சரிக்கை!

10,000 சினிமா திரைகளை கொண் டது வாண்டா குழுமம். அமெரிக்கா வில் ஏஎம்சி தியேட்டர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட சில நிறுவனங்களை கையகப்படுத்தி இருக்கிறது. தவிர பிக் சிக்ஸ் ஸ்டுடியோ உள்ளிட்ட சில நிறுவனங்களையும் வாங்க இருக்கிறது. ஆனால் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கும் ட்ரம்ப் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது வெறுப்பில் இருப்பவர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் 1,000 கோடி டாலர்களுக்கு மேல் முதலீடு செய்திருக்கிறேன். எங்க ளுடைய குழுமத்தில் 20,000 நபர் களுக்கு மேல் இருக்கிறார்கள். எங்க ளுடைய முதலீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் 20,000 நபர் களுக்கு மேல் வேலையிழக்கும் சூழல் உருவாகும் என்னும் தகவலை மோஷன் பிக்சர்ஸ் தலைவர் மூலமாக ட்ரம்புக்கு தெரிவித்திருக்கிறார்.

தவிர ஆங்கில படங்கள் சீன சந்தையை நம்பி இருக்கிறது. சீனா பார்வையாளர்கள் இல்லாமல் ஆங்கில படங்கள் வெற்றியடையாது என்றும் கூறியிருக்கிறார்.

பதவிக்கு வரும் முன்பே ட்ரம்புக்கு ஆபத்து காத்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்