ட்விட்டர் - 10 ஆண்டு

By செய்திப்பிரிவு

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் முக்கியமானது ட்விட்டர். பராக் ஒபாமா முதல், பாரத பிரதமர் மோடி வரை, ஹாலிவுட் நடிகர்கள் முதல் நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை உலகின் அனைத்து பிரபலங்களும் ட்விட்டரில் உள்ளனர்.

பகிர வேண்டிய கருத்தை 140 எழுத்துகளுக்குள் சுருக்க வேண்டும் என்பதுதான் ட்விட்டர் வழங்கும் சவால். இந்த சவால்தான் ட்விட்டர் பக்கம் எல்லோரையும் ஈர்த்தது. ட்விட்டர் தொடங்கி, தற்போது பத்து ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த சமூக வலைதளம் தொடங்கியது முதல் தொடர்ந்து ஈர்த்து வருவதுடன், வேலைவாய்ப்பு, தேர்தல் பிரசாரம், அரசு தகவல்கள் என பலவற்றையும் பகிரும் களமாகவும் இருந்து வருகிறது. பேஸ்புக் தளத்தை விட தற்போது ட்விட்டர் கணக்கை அதிகம் பேர் தொடங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ட்விட்டரின் பத்தாண்டு பயணம் பற்றிய சில தகவல்கள்…



உருவான பின்னணி

# ஜாக் டோர்சி நியூயார்க் பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சிறிய குழுவிற்குள் செய்தியை பகிர்ந்து கொள்வதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ட்விட்டர் ஐடியா உருவாகியுள்ளது.

# 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன், எவன் வில்லியம்ஸ் ஆகியோர் ட்விட்டர் தளத்தின் மாதிரியை வடிவமைத்தனர். இந்த புராஜெக்ட்டின் பெயர் twttr. பின்புதான் twitter என்று மாற்றப்பட்டது.

# ட்விட்டர் தொடங்கியதுமே ஜாக் டோர்சி முதல் ட்விட்டை பதிவிட்டார்.

# ட்விட்டர் முகப்புப் பக்கம் 2006-ம் ஆண்டு ஜுலை மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. அதன் வடிவம் கீழே…

# தொடக்கத்தில் ட்விட்டரில் அதன் முகப்புப் பக்கத்தில் 5 வார்த்தைகள் மட்டுமே பதிவிட முடியும். தற்போது 140 எழுத்துகளாக உள்ளது.

# 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ட்விட்டர் நிறுவனம் ஹேஷ்டேக்கை அறிமுகம் செய்தது.

# சென்னை வெள்ளத்தின் போது ட்விட் பதிவுகள் உதவிகரமாக இருந்தது.

#ChennaiRains #TNRains #ChennaiFloods உள்ளிட்ட ஹேஷ்டேக் மூலம், வெள்ளம் தொடர்பான செய்திகளும், நிவாரண உதவிகள் குறித்த தகவலும் உடனுக்குடன் பகிரப்பட்டன. அது தொடர்பாக சுமார் 14 லட்சம் ட்வீட்கள் பகிரப்பட்டன.

# நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் கணக்கை தொடங்கி வணக்கம் சொன்ன சில மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைப் பெற்றார்.



ட்விட்டரில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்டவர்கள்



நிறுவனத்தின் வருமானம்

# விளம்பரத்தின் மூலமாக வரும் வருமானம் 86 சதவீதம்.

# தனது நிறுவன அடையாளத்தை (logo) பல கட்டங்களில் மாற்றியுள்ளது.

# உலகம் முழுவதும் ஒரு நிமிடத்திற்கு பதிவிடப்படும் ட்வீட்களின் எண்ணிக்கை 3,50,000

# தினசரி பதிவிடும் ட்விட்களில் சுமார் 40 சதவீதம் அர்த்தமில்லாதவை அல்லது பயனில்லாதவை. செய்திகளின் பகிர்வு 4 சதவீதம்.

# நிறுவனம் விற்கப்பட உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சி, நிறுவனத்தை மேம்படுத்தும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

# ட்விட்டர் பயன்பாட்டில் 24 சதவீதம் பத்திரிகையாளர்களிடம் உள்ளது.

# 79 சதவீத ட்விட்டர் கணக்குகளை அமெரிக்காவுக்கு வெளியே உள்ளவர்கள் வைத்துள்ளனர்.

# தொடர்ந்து செயல்பாட்டில் உள்ள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 31.7 கோடி

# இந்தியாவில் உள்ள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2.32 கோடி

# 2015-ம் ஆண்டு நிலவரப்படி ட்விட்டர் நிறுவனத்தின் நிகர வருமானம் 52 கோடி டாலர்.

# 2016-ம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 3,860

# ட்விட்டர் நிறுவனம் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுப் பங்கு வெளியிட்டது. இதன் மூலம் 100 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டது. ஒரு பங்கு 26 டாலர் என்கிற மதிப்பில் பொது பங்கை வெளியிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்