சில வருடங்களுக்கு முன்பு உற்பத்தி துறையில் பயன்படுத்தப்பட்டு வந்த ரோபோக்கள் இப்போது சேவைத் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் உணவகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போது வங்கிகளும் இதனை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன. கும்பகோணத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி (சியுபி) வாடிக்கையாளர்களின் அடிப்படை சந்தேகங்களைப் போக்க ரோபோக்களை பயன்படுத்த முடிவெடுத்திருக்கிறது.
பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் அடிப்படை சந்தேகங்களுக்கு இந்த ரோபோக்கள் பதில் அளிக்கும். கடந்த வாரம் சென்னையில் இந்த ரோபோவினை அறிமுகம் செய்தனர். இந்த ரோபோவுக்கு ‘லக்ஷ்மி’ என பெயரிடப்பட்டிருக்கிறது. தி.நகர் கிளையில் சோதனை அடிப்படையில் வைப்பதற்கு வங்கி முடிவெடுத்தது. ஆனால் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கியில் நீண்ட வரிசை இருப்பதால் இந்த நிலைமை சீரடைந்த பின்னர் அங்கு வைத்து சோதித்து பார்க்க முடிவெடுத்திருக்கிறது. ரோபோவுக்கான காரணம், என்ன பயன் என்பது குறித்து வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி என். காமகோடியிடம் உரையாடியதிலிருந்து…
தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 90களின் மத்தியில் ஏடிஎம் மெஷின்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது ஒரு மெஷின் விலை சுமார் ரூ. 8 லட்சமாகும். ஆனால் இப்போது ரூ. 2 லட்சத்துக்கு ஒரு மெஷின் கிடைக்கிறது. தொழில் நுட்பத்தின் அடுத்த கட்டமாக இப்போது ரோபோக்களை அறிமுகம் செய்திருக்கிறோம். இப்போது எட்டு லட்சம் ரூபாயாக இருந்தாலும், பயன்பாடு அதிகரிக்கும் போது இதன் விலை நிச்சயம் குறையும்.
பயன்பாடு
மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் பொதுவானவைதான். அவர்கள் கேட்கும் 95 சதவீத கேள்விகள் ஒன்றாக தான் இருக்கிறது.அந்த வழக்கமான சந்தேகங்களை விளக்குவதற்கு வங்கி யாளர்களை ஈடுபடுத்துவது அவர்களின் திறமையை வீணடிக்கும் செயல். இரு வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் நடந்த ஒரு வங்கி மாநாட்டில் இந்த ரோபோக்களின் பயன் தெரிந்தது.
அதனை தொடந்து இங்கு அறிமுகம் செய்கிறோம். இதன் மூலம் வங்கி பணியாளர்கள் நேரம் மிச்சமாகும். தவிர இந்த ரோபோக்களுக்கு கோபம் வராது. எத்தனை முறை கேட்டாலும் அமைதியாக பதில் சொல்லும். இப்போ தைக்கு ஆங்கிலத்தில் கேட்கும் கேள்வி களுக்கு பதில் சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக தமிழ், அதனை தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் விரிவுபடுத்துவோம்.
கம்ப்யூட்டரில் எப்.ஏ.கியூ வடிவில் இருக்கிறது. இங்கு குரல் வழி கட்டளைகளுக்கு இந்த ரோபோ பதில் கூறுகிறது, அவ்வளவுதான் வித்தி யாசம். முதலில் திநகர் கிளை, அதனை தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டில் சுமார் 30 கிளைகளில் இதனை அறிமுகப்படுத்த முடிவெடுத்திருக்கிறோம்.
ஒரு வேளை அந்த ரோபோவுக்கு பதில் தெரிய வில்லை என்றால் கிளை மேலாளரை தொடர்புகொள்ளவும் என்று பதில் சொல்லும். அது போன்ற கேள்வி களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப் படும். தொடர்ந்து இந்த ரோபோவின் பயன்பாட்டினை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோம். இன்னும் சில வருடங்களில் வங்கி பணிகளில் 10-ல் இரு ரோபோக்கள் இருந்தாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை.
ரோபோ என்றதும் வேலை இழப்பு ஏற்படுமா என்ற அச்சம் இருக்கிறது. அது தேவையில்லாதது. வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்கு இந்த ரோபோக்கள் பயன்படுகின்றன. அடுத்த சந்தேகம் பெரும்பான்மையானவர்கள் வங்கிக்கு வராமலேயே இதர வழிகளில் வங்கியை பயன்படுத்துகின்றனர். ரோபோ தேவையா என்னும் கேள்வி இருக்கிறது. இது ஓரளவு உண்மைதான்.
ஆனால் இதனை வேறுவிதமாக அணுக வேண்டும். இப்போதைக்கு 83 சதவீத பணிகள் வங்கிக்கு வெளியே, ஏடிஎம், இணையம், மொபைல் மூலமாக நடக்கிறது. வங்கிக்கு வருபவர்கள் குறைவுதான். இப்போது 100 நபர்கள் வங்கிக்கு வருகிறார்கள் என்றால், 1,000 நபர்களை கையாளுவதற்கு இந்த ரோபோக்கள் பயன்படும் என்றார் காமகோடி.
கோவையை சேர்ந்த விஷ்ணு இன்ஜினீயரிங் நிறுவனம் இந்த ரோபோவை வடிவமைத்திருக்கிறது. இந்தியாவில் வேறு சில வங்கிகளும் ரோபோக்களை பணியமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் சில மாதங்களில் வங்கிகளில் ஏடிஎம் போல ரோபோக்கள் இருக்க கூடும்.
புதிதாக ஒரு விஷயம் வரும் போது அதனை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா, வாடிக்கை யாளர்களுக்கு பயனுள்ள வகையில் இந்த ரோபோ இருக்குமா என்பது சில மாதங்களில் தெரிந்துவிடும்.
- karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago