நாணயத்தின் வரலாறு
1769-ம் ஆண்டு இந்தியாவில் நாணயம் உருவாக்கும் நவீன இயந்திரத்தை ஜான் பிரின்ஸப் என்ற ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தினார். 1819-ம் ஆண்டு இவரது மகன் ஜேம்ஸ் பிரின்ஸப் கொல்கத்தா வந்து எடைகளையும், அளவீடுகளையும் சீரமைத்தார். இந்திய நாணயங்களையும் இவர் சீரமைத்தார். இவர்கள் இருவரும் இந்திய நாணய முறை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்கள்.
1796-ல் பர்மா அரசர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப கொல்கத்தா நாணயச் சாலையிலிருந்து பர்மாவுக்கு நாணயங்கள் தயாரித்து அனுப்பப்பட்டன. பர்மாவிலிருந்து இந்திய பாணி வெள்ளி நாணயப் புழக்கம், கம்போடியா, தாய்லாந்து, தெற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் பரவியது.
1835-ல் பிரிட்டிஷார் கொண்டு வந்த நாணயச் சட்டம் மூலம் சீரான நாணயங்கள் வெளிவந்தன. இதில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் உருவங்கள் இடம் பெற்றன.
1950-ல் இந்திய அரசு புதிய நாணயங்களை வெளியிட்டது. ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள், 1957-இல் 100 பைசா மதிப்பு கொண்ட ஒரு ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிறகு ஒவ்வொரு கட்டமாக ஒரு பைசா, இரண்டு, மூன்று, ஐந்து, பத்து, இருபது பைசா நாணயங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன. 1990-களில் ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2006-இல் பத்து ரூபாய் நாணயம் அறிமுகப் படுத்தப்பட்டது.
ரூபாய் நோட்டுகளின் வரலாறு
# காகிதப்பணம் முதன் முதலில் சீனாவில் கி.பி. 1000-இல் உருவானது. சீனாவில் மங்கோல் யுவான் வம்சத்தைச் சேர்ந்த ஜின் என்பவரால் கி.பி. 1189-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
# இந்தியாவில் 1770-இல் பாங்க் ஆஃப் இந்துஸ்தான் முதன் முதலில் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. 1861-இல் காகிதப் பணச் சட்டம் அமலுக்கு வந்தது. இதன் மூலம் பிரிட்டிஷ் இந்திய அரசே, பணம் வெளியிடும் உரிமையைப் பெற்றது.
# 1923-இல் விக்டோரியா மகாராணியின் உருவம் தாங்கிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. 1935-ம் ஆண்டு வரை இந்த நிலை நீடித்தது. 1935-க்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அதிகாரம் பெற்றது.
# தனது சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு ஐரோப்பா திரும்பிய மார்க்கோபோலோ, சீனாவில் காகிதப்பணம் புழக்கத்திலிருந்த செய்தியைச் சொன்ன போது ஐரோப்பியர்கள் முதலில் நம்பவில்லை. ஐரோப்பாவில் கி.பி.1574-இல் தான் காகிதப்பணம் வெளியானது.
# பிரிட்டிஷ் இந்திய அரசு முதன் முதலில் வெளியிட்ட நோட்டுகளில் விக்டோரியா மகாராணியின் உருவம் இடம் பெற்றது. முதல் உலகப்போர் தொடங்கியபோது குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் வெளியிட வேண்டியதன் அவசியம் ஏற்பட்டது. அப்போது முதன் முதலாக ஒரு ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது.
முதல் முறையல்ல
பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1938-ம் ஆண்டில் 10,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு. 1946-ம் ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 1954-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் ஆட்சியின்போது புதிய வடிவமைப்பில் மீண்டும் 10,000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. ஆனால் 1978-ம் ஆண்டு முற்றிலுமாக புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது.
1978-ம் ஆண்டு பிரதமராக இருந்த ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் ரூ. 100க்கு மேல் இருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். கறுப்புப் பணமும், கள்ள நோட்டு புழக்கமும் அதிகமாக இருந்ததால் மொரார்ஜி இந்த முடிவை எடுத்தார்.
# தற்போது இந்திய ரூபாய் நோட்டுகளில் பங்கு ரூ.500 - 45%, ரூ.1000 - 39%
# 2016-ம் ஆண்டு தகவல் படி இந்தியாவில் புழங்கும் பணத்தின் மதிப்பு ரூ. 17 லட்சம் கோடி
# ரியல் எஸ்டேட் மூலமாக கையாளப் படும் கறுப்புப் பணம் 40%
# 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி 6,32,000 கள்ள நோட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 30.43 கோடி. இதில் டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து மட்டுமே 43% கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன.
டாலர் Vs ரூபாய்
# 1947க்கு முன்னர் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாயாக இருந்தது.
# 1952-ல் ஒரு டாலர் ரூ4.79 என நிர்ணயிக்கப்பட்டது.
# 1966-ல் ரூபாயின் மதிப்பை ரூ.7.57 என்ற அளவுக்கு குறைக்கும் அறிவிப்பை இந்திய அரசே வெளியிட்டது.
# பின்பு புதிய பொருளாதார கொள்கைகள் அமல் படுத்தப்பட்ட பின்பு ரூபாயின் மதிப்பினை சந்தை தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 1995-ம் ஆண்டு ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 ஆக இருந்தது.
2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூபாய் மதிப்பு 50 சதவீதம் வீழ்ச்சியடைந்தைத் தொடர்ந்து ஒரு டாலர் 68.85 ரூபாய் வரை சென்றது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago