குறள் இனிது: நல்லது, கெட்டது இரண்டையும் பார்க்கணும்ல...?

By சோம.வீரப்பன்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும் (குறள்: 511)

என்னங்க, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு மாற்றுகிற போராட்டம் இன்னமும் முடிந்த பாடில்லையா? நம்ம நாட்டு ரூபாய் நோட்டை பக்கத்து நாட்டுக்காரன் அடிச்சா, அது பாட்டுக்கு அத்து மீறிப் போச்சுன்னா என்னங்க பண்றது? அதனால தீவிரவாதம் தீவிரமாக வளர்ந்துகிட்டே வருதே!

அவங்க கள்ளப்பணத்தை அடிச்சு அடிச்சு நம்ம காஷ்மீர் வழியாகவும், நேபாளம், வங்கதேசம், இலங்கை வழியாகவும் அனுப்பிக் கொண்டே இருந்தால் நம்ம பொருளாதாரம் என்னங்க ஆவது? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் கையில் ஒரு 500 அல்லது 1000 ரூபாய் நோட்டைக் கொடுத்து அதை வெறுங்கண்ணால் பார்த்து அது கள்ள நோட்டா இல்லையா என்று கேட்டால் சொல்லி விடுவீங்களா?

போதைப்பொருள் விற்பனை, தீவிரவாதிகளுக்கு ஆயுதம்கடத்தல், ஹவாலா போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் கை மாறும் கறுப்புப்பணம் கட்டுக்கடங்கா பெரும் பூதமாக வளர்ந்து விட்டதே? உண்ண உணவின்றி கோடிக்கணக்கானோர் தவிக்கும் நாட்டில் இப்படிக் கொள்ளை அடிப்பவர்களை விட்டு வைக்கலாமா? அப்புறம் இந்த லஞ்சம், ஊழல் பணமெல்லாம் பெரிய நோட்டாகத்தானே கைமாறுது, புழங்குது ,அல்லது பதுங்கித் தூங்குது?

எல்லாத்துக்கும் ஒரே போடாகப் போட்டாருங்க மோடி!

சமீபத்திய செய்தி. மொத்தம் புழக்கத்திலுள்ள ரூ16 லட்சம் கோடி பெரிய நோட்டுகளில், ரூ3 லட்சம் கோடி மாற்றப்படாது என ஊகிக்கிறார்கள். அதாவது அரசாங்கத்திற்கு அவ்வளவும் வருமானம்! அதெல்லாம் சரி தான், நேர்மையாக வரி கட்டுகிற நம்மையும் ஏண்டா இப்படிப் போட்டு வதைக்கிறாங்கன்னு எரிச்சலாக இருக்கா?

பின்னே என்னங்க, உண்மையாக உழைத்து சம்பாதித்தவனுக்குத் திடீரென அந்த 500 மற்றும் 1,000 ரூபாய் செல்லாது, உணவு விடுதியில் சாப்பிடக்கூட முடியாது, வங்கிக்குப் போகணும், காத்துக்கிடக்கணும், கரும்புள்ளி வைப்பார்கள், 2000 தான் மாத்துவாங்கன்னா ஆதங்கமும், கோபமும் வருமில்ல!

2 நாட்களுக்கு ஏடிஎம் இல்லை, ஒரு நாள் வங்கியில்லை எனத் தொடங்கிய தொல்லை இன்னமும் தீரலை! பல நாட்களாக ஏடிஎம்-ல் பணமில்லை, வங்கியில் நீண்ட வரிசைகள் , 10 நாட்களாகியும் புது 500 நோட்டு கிடைக்கவில்லை எனத் தொடர்கிறதே!

மாதத்தின் தொடக்கம் என்பதால் பலருக்குச் சம்பளம் கிடைத்தும் எடுக்க முடியாத சூழ்நிலை! தினக்கூலிக்காரர் பிழைப்பை விட்டுவிட்டு அல்லவா வரிசையில் நிற்கணும்! போதிய அளவு புதிய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை ரகசியமாகத் தயார் செய்து கொண்டு இதை அறிவித்திருக்கலாமென ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் சொல்வது சரி தானே!

தவிர்க்க கூடிய சிரமத்தை ஏன் மக்கள் தாங்கிக்கணும்? எடுத்த செயல் சரியாக இருந்தால் போதாது, அச்செயலை எவ்வாறு செய்தால் நன்று என ஆராய்ந்தே செய்ய வேண்டுமென்கிறார் வள்ளுவர் !

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்