சொகுசு என்பதன் அர்த்தம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் கால் டாக்ஸியில் செல்வதே சொகுசு என்னும் நிலைமை மாறி இப்போது கார் என்பது அத்தியாவசியம் என்னும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இது சரியா என்பது வேறு ஒரு விவாதம். சொகுசு கார் விற்பனையில் முன்னணியில் இருக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த வாரம் இரு புதிய ரக கார்களை அறிமுகம் செய்தது. இந்த கார்களின் கூரையை தேவைப்பட்டால் மடக்கி வைத்துக் கொள்ள முடியும். இந்த ரக கார்களுக்கு கேப்ரியோலெட் (Cabriolet) என்று பெயர். இதில் சி கிளாஸ் மற்றும் எஸ் கிளாஸ் மாடல் கேப்ரியோலெட் ரக கார்களை டெல்லியில் அறிமுகம் செய்திருக்கிறது மெர்சிடஸ் மென்ஸ்.
சி கிளாஸ் ரக மாடல் 1991 சிசி திறன் உடையது. இந்த கார் 6.4 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை அடைய முடியும். ஆனால் எஸ் கிளாஸ் ரக மாடல் 4.6 விநாடி களில் 100 கிலோ மீட்டர் வேகத்தை அடைய முடியும். தவிர இந்த ரக மாடலில் வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப 13,000 மாற்றங்களை செய்துகொள்ள முடியும் எனவும் பென்ஸ் அறிவித்திருக்கிறது. சி கிளாஸ் மாடல் 60 லட்ச ரூபாயும், எஸ் கிளாஸ் மாடல் ரூ.2.25 கோடி (டெல்லி விற்பனையக விலை) நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 9 வண்ணங்கள், 4 வண்ண கூரைகள் இருக்கின்றன.
மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோலண்ட் போல்கர் அறிமுக நிகழ்ச்சி யில் கூறும்போது, கேப்ரியோலெட் ரக மாடல்கள் முதன் முதலில் 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இந்தியாவில் இந்த ரக மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறோம். இதன் மூலம் போட்டி நிறைந்த சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க முடியும். சொகுசு கார் சந்தையில் ஏற்கெனவே முதல் இடத்தில் இருக்கிறோம். தவிர இந்த வருடம் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிய ரக கார்களை அறிமுகம் செய்ததன் மூலம் முதலி டத்தை தக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் நடப்பாண்டில் இதுவரை 9 மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறது. தற்போது புதிதாக அறிமுகம் செய்த 2 கேப்ரி யோலெட் மாடல்களையும் சேர்த்து 11 புதிய ரக கார்களை நடப்பாண்டில் பென்ஸ் அறிமுகம் செய்திருக்கிறது. இன்னும் ஓர் புதிய மாடல் காரை அறிமுகம் செய்யவும் பென்ஸ் திட்டமிட்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago