தடுமாறுகிறதா அனில் குழுமம்?

By செய்திப்பிரிவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியன் பெட்ரோ கார்ப்பரேஷன் ஆகியவை முகேஷ் அம்பானிக்கும், இன்போகாம், கேபிடல், எனர்ஜி ஆகியவை அனில் அம்பானிக்கும் ஒதுக்கப்பட்டு 11 வருடங்கள் முடிந்து விட்டன. அனில் அம்பானி புதிய உதயம் தொடங்குவதாக அப்போது அறிவித்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக அனில் அம்பானி குழுமத்தை பற்றி வரும் செய்திகள் வளர்ச்சிக்கான அறிகுறியாக தெரிய வில்லை.

கடந்த ஜூன் மாதம் அனில் குழுமத் தின் துணைத்தலைவர் அமிதாப் ஜுன்ஜுன்வாலா கூறும்போது, அடுத்த சில மாதங்கள் மிகவும் சிக்கலான கால கட்டம். குழுமத்தின் நிகர கடன் ரூ.1,08,031 கோடியாக இருக்கிறது. இதிலிருந்து 50 சதவீதம் குறைக்க வேண் டும் என குறிப்பிட்டார். பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் நிதிச்சேவைகள் ஆகிய பிரிவுகளில் கவனம் செலுத்தி மற்ற நிறுவனங்களின் சொத்துகளை விற்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அப்போது அவர் கூறியது போலவே சில நிறுவனங்கள் விற்கப்பட்டன. சில நிறுவனங்களில் கணிசமான பங்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சென்றது.

ரிலையன்ஸ் பவர்

பங்குச்சந்தையில் பத்து வருடங் களுக்கு மேலாக இருப்பவர்கள் இந்த நிறுவனத்தை மறக்கவே மாட்டார்கள். 2008-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் ஐபிஓ வந்தது. ஒரு பங்கு விலையாக 450 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. 69 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் முதல் நாள் வர்த்தகத்திலேயே 17 சதவீதம் அளவுக்கு சரிந்தது. அதன் பிறகும் சரிவுதான். இந்த நிறுவனத்தின் கடன் மட்டுமே ரூ.30,897 கோடி. மின்சார பிரிவில் கவனம் செலுத்துவதாக கூறியிருந்தாலும் இந்த பிரிவிலும் கடன் இருக்கிறது.

பிக் சினிமாஸ்

நிறுவனங்களை விற்கும் போக்கினை சில வருடங்களுக்கு முன்பே இந்த குழுமம் தொடங்கிவிட்டது. 2013-ம் ஆண்டு பிக் சினிமாஸ் நிறுவனத்தை 700 கோடி ரூபாய்க்கு கார்னிவெல் நிறுவனத்திடம் விற்றுவிட்டது. அப்போது தொடங்கப்பட்ட சீர்த்திருத்த நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.

ரிலையன்ஸ் டவர் தொழிலில் இருந்து விலக 2015-ம் ஆண்டே திட்டமிட்டது. ஆனால் கடந்த அக்டோபர் மாதம்தான் புரூக்பீல்ட் நிறுவனத்திடம் 51 சதவீத பங்குகளை விற்க முடிந்தது. இதன் மூலம் ரூ.11,000 கோடி கிடைத்தது. போட்டி நிறைந்த டெலிகாம் தொழிலில் வெளியேறியது என்று சொல்ல முடியாவிட்டாலும் கடனை குறைப்பதற்காக ஏர்செல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் நிறுவனத்தின் கடன் சுமார் ரூ.14,000 கோடி குறையும். புதிய நிறுவனத்துக்கு வேறு பெயர் வைக்கப்படும். ரிலையன்ஸ் என்னும் பெயர் இல்லை என்றாலும் இதில் 50 சதவீத பங்குகள் இருக்கும்.

ரிலையன்ஸ் இன்பிரா

அனில் குழுமத்தின் பெரும் கடனுக்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் இன்பிரா என்று கூறப்படுகிறது. நிறுவனத்தின் சிமென்ட் பிரிவு சரியாக செயல்படவில்லை. அதனால் பிர்லா குழுமத்துக்கு ரூ.4,800 கோடிக்கு விற்றது. அதேபோல சாலைப்போக்குவரத்து பல திட்டங்களுக்கு அனுமதி வாங்கி வைத்திருந்தது. ஆனால் அனுமதி வாங்கி வைத்திருந்த திட்டங்களினால் எந்த பயனும் இல்லை. 11 திட்டங்களின் மதிப்பு சுமார் ரூ.9,000 கோடி ஆகும். இதனை விற்கும் முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் இன்பிரா நிறுவனத்தின் கடனை பெருமளவு குறைக்க திட்டமிட்டிருக்கிறது. அதேபோல ஆப்டிக் பைபர் தொழில் மற்றும் பொது காப்பீட்டு துறையில் இருந்தும் வெளியேற திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் ரூ.12,000 கோடி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டம்?

டெலிகாம், கட்டுமானம், மின்சாரம் ஆகிய துறைகளில் லாபம் கிடைக்க நீண்ட காலம் ஆகும் என்பதே இந்த துறை வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. அதனால் இப்போது மொத்த கவனத்தையும் பாதுகாப்பு துறை சார்ந்த விஷயங்களில் செலுத்தி இருக்கிறது இந்த நிறுவனம். சாலை கட்டுமானத்துறையில் ரூ. 3,000 கோடி முதலீடு செய்யும்பட்சத்தில் ரூ.200 கோடி கிடைக்கும். இதே முதலீட்டினை பாதுகாப்பு துறையில் முதலீடு செய்தால் ரூ. 30,000 கோடி வருமானம் கிடைக்கும் என ஜுன்ஜுன்வாலா முன்பு கூறியிருக்கிறார். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த சந்தை ரூ.20 லட்சம் கோடி இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

தொழிலில் ஏற்ற இறக்கம் என்பது சகஜம் என்பதை ஒப்புக்கொண்டாலும், அடுத்தக்கட்ட வளர்ச்சி கண்ணுக்கு எட்டிய தூரம் இருக்க வேண்டும். இருந்தால் நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்