ஒப்பந்த விதிகளை உருவாக்கியவர்களுக்கு நோபல்!

By செய்திப்பிரிவு

நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைவ ராக இருக்கிறீர்கள். உங்கள் நிறு வனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு எந்தெந்த அடிப்படையில் ஊதியம் வழங்குவீர்கள். வழக்கமான சம்பளம், போனஸ் மற்றும் பங்குகள் அளிப்பது என பட்டியல் நீளும். அது போல உயர் பொறுப்பில் உள்ளவர் களுக்கான சம்பளம் உள்ளிட்ட பிற சலுகைகளையும் முடிவு செய்ய வேண்டி யிருக்கும். ஒருவேளை நீங்கள்தான் தலைமைச் செயல் அதிகாரி என்றால் நிறுவனம் மேற்கொள்ள வேண்டிய ஒப்பந்தங்கள், அதன் ஷரத்துக்கள், எவ்வளவு காலத்துக்கானது என்கிற விவரங்கள் தெரிந்தாக வேண்டும்.

இதுபோன்ற அனைத்துக் கேள்வி களையும் பொருளாதார ரீதியில் அணுகி அதற்குத் தீர்வு அளித்த இரண்டு பொருளாதார மேதைகள் கடந்த வாரம் பொருளாதார அறிவியலுக்கான (Economic Science) நோபல் பரிசுக்கு கூட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹார் வர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலிவர் ஹார்ட் என்ற பேராசிரியரும், எம்ஐடி (மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) கல்வி மையத்தின் பேராசிரியர் பெங் ஹோம்ஸ்ரோம் ஆகிய இருவரும் ஒப்பந்த விதிமுறைகளை (Contract Theory) உருவாக்கியமைக்காக இந்த விருதினை வாங்குகின்றனர். தாராளமயம் பின்பற்றப்பட்ட பிறகு இது வரை 22 பொருளாதார அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறைதான் தனி நபருக்கும் உதவக் கூடிய கொள்கை வகுப் பாளர்களுக்கு பரிசு கிடைத்துள்ளது.

ஒப்பந்தம் என்பது புதிய விஷயம் இல்லை. ஒப்பந்தங்கள் முறையான தாகவோ முறை சாராததாகவோ, சட்ட பூர்வமானதாகவோ, தார்மீக பூர்வ மாகவோ, சமூகநெறி சார்ந்ததாகவோ இருக்கலாம். மேலும் ஒப்பந்தங்கள் முழுமையானதாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருக்கலாம். நேரடி மற்றும் மறைமுக ஒழுங்கு முறைகள், கட்டுப்பாடுகள், விதி முறைகள் பல்வேறு சட்டங்கள் என நமது தினசரி வாழ்க்கையில் பல ஒழுங்குகள் உள்ளன. ஒருவகையில் இவை ஒப்பந்தங்கள்தான். இப்படியான பல்வேறு ஒப்பந்தங்களினால் மனிதன் இயங்கிக் கொண்டிருக்கிறான்.

ஒப்பந்த விதி

விதிமுறைகளை நன்கு அறிந்து கொண்டு அதை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான விதிமுறைகளை உரு வாக்குவதே ஒப்பந்த விதியாகும். 1979 மற்றும் 1991-ம் ஆண்டில் ஒப்பந்தங் கள் தொடர்பாக இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை ஹோல்ம்ஸ்டிராம் தாக்கல் செய்தார். இதுதான் நிறுவனங் கள் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு வழி வகுத்தன. நீண்ட கால ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, குறுகிய கால ஒப்பந்தங் களுக்கும் இதுவே வழிவகுத்தன.

2008-ம் ஆண்டு அமெரிக்காவில் மிகப் பெரிய நிதி நெருக்கடி உருவாகும் முன்பாக வால் ஸ்டிரீட் பத்திரிகை யில் இவரது ஒப்பபந்த விதிமுறை குறித்த கட்டுரை வெளியானது. அதில் முதலீட்டாளர்கள் அதிகப்படியாக ஆண்டு போனஸை எடுத்துக்கொண்ட தால் நிதி நிலை பாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதை எவரும் அப்போது பொருட்படுத்த வில்லை இதனால் மிகப் பெரிய வீழ்ச்சி தவிர்க்க முடியாமல் போனது.

ஒப்பந்தங்களின் பயன்பாடு

ஒப்பந்தம் போடுவதில் பல்வேறு சாதக அம்சங்கள் இருந்தாலும் ஒரு நிறுவனத்தில் பணி புரிவோருடன் நிறுவனம் ஒப்பந்தம் போடக் காரணம் என்ன? வேறுபட்ட கருத்து இருந்தாலும் நிறுவனம் நிர்ணயித்த இலக்கை எட்ட இருதரப்பும் இணைந்து செயல்பட உதவுவதுதான் ஒப்பந்தம்.

எந்த ஒரு ஒப்பந்தமும் விதிமுறைகள் இல்லையெனில் பலன் தராது. குறிப்பாக சந்தைப் பொருளாதாரம் வந்தபிறகு சட்டத்தின் முன் நிறுத்தும் வகையிலான விதிமுறைகள் கொண்ட ஒப்பந்தங்கள் அவசியமாகிவிட்டன. எந்தெந்த சந்தர்ப்பத்தில் எத்தகைய ஒப்பந்தங்கள் எந்தெந்த விதிமுறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக இவர்களிருவரும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடுதான் இவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்துள்ளது.

இவர்களது ஆய்வின் பலன்கள் பொருளாதாரம் சார்ந்த ஒப்பந்தங்கள் மட்டுமின்றி அரசியல், சுற்றுச்சூழல், சமூகம் குறித்த சட்டங்கள், நிறுவனங் களின் ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளுக்கும் அடிப்படையாக உள்ளன. சட்டரீதியான ஒப்பந்தங்கள் மட்டுமில்லாமல் நடைமுறை ஏற்பாடு களில் பல்வேறு தரப்பட்ட பங்குதாரர் களின் சாதக பாதகங்களை ஆராய்வதற் கும் இக்கோட்பாடுகள் உதவுகின்றன.

பொதுவாக ஒப்பந்தங்களில் பல தேவையற்ற விதிமுறைகள் இடம்பெறுவது வழக்கம், இவைகள் அமல்படுத்தப்படுகிறதா அல்லது சட்ட ரீதியாக செயல்படுத்தப்படுமா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஒரு ஒப்பந்தம் முழுமையான விதிகளைக் கொண்டிருக்கிறதா அல்லது விதிகள் அரைகுறையாக உள்ளனவா என்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை யூகித்து அதிலிருந்து காத்துக் கொள்வதற்கு இவர்களின் ஒப்பந்தக் கோட்பாடுகள் உதவும்.

ஒரு குறைபாடுள்ள ஒப்பந்தம் முறையற்ற இயல்புகளைத் தோற்றுவிக்கும். அதேபோல் ஒப்பந்தங்கள் அதில் ஈடுபடும் பல்வேறு தரப்பினரின் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

நடைமுறை பயன்பாடு

ஹார்ட் மற்றும் ஹோம்ஸ்ரோம் ஒப்பந்த கோட்பாடுகள் குறித்த ஆய்வு களை 1980 முதல் செய்து வருகின்றனர். இவர்களுடைய ஆய்வுகள் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் எண்ணற்ற ஒப்பந்த முறைகளின் அடிப்படையில் அமைந்தவை. இவர்களின் ஆய்வு முடிவுகள் ஊழியர்களின் ஊதிய நிர்ணயம், கல்வி தனியார்மயம், காப்பீடு ஒப்பந்தம், அரசியல் சட்ட வடிவமைப்புகள், திவால் சட்டங்கள் போன்றவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்வதற்கான அடித்தளத்தை கொடுக்கின்றன. இவர்களது ஆய்வுகள் மூலமாக சாதாரண குடிமக்கள் முதல் அரசுகள், வர்த்தக நிறுவனங்கள், பங்குதாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் முதலியோரைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்த உறவுகளின் அடிப்படையிலான சட்டங்கள், அவற்றின் சிக்கல்கள் போன்றவற்றை சரிசெய்ய முடியும்.

இவர்களது பல்வேறு கட்டுரைகளில் நிறுவனங்களைக் கையகப்படுத்துதல், இணைத்தல், நிறுவன உரிமையை மாற்றுதல் உள்ளிட்ட விஷயங்களுக்கு எவ்விதம் தீர்வு காணலாம் என்பதை விரிவாக விளக்கியுள்ளனர். குறிப்பாக அன்றாட வாழ்வில் நமக்கு உதவக் கூடிய ஒப்பந்தங்களுக்கான விதிமுறைகளை இவர்கள் வகுத்துள்ளனர். அதேசமயம் எந்தெந்த அம்சங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற ஆலோசனை யும் அளித்துள்ளனர். தனி நபர் ஒப் பந்தங்கள், நிறுவனங்களிடையிலான ஒப்பந்தங்கள் மட்டுமின்றி தாராள சந்தையில் மேற்கொள்ள வேண்டிய ஒப்பந்தங்கள், பொதுக் கொள்கைகளுக் கான ஒப்பந்தங்கள் குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளதாக பரிசுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து பொது விநியோகக் கொள்கை (ரேஷன் விநி யோகம்) அல்லது ஸ்பெக்ட்ரம் ஏலம் வரை வகுக்க வேண்டிய கொள்கை கள், ஒப்பந்தங்களை அறிந்து கொள்ள லாம். அதற்கேற்ப வடிவமைத்துக் கொள்ள உதவும் என குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிவியலின் இருபக்கம்

சந்தைப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தில் உருவாகும் சவால்கள், அதற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள், மற்றும் அவற்றிற்கான தீர்வு குறித்த ஆய்வுகளையே சிறந்த ஆய்வுகளாக நோபல் தேர்வுக்குழு முடிவு செய்கிறது என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இந்த முறையும் நோபல் தேர்வுக்குழு அந்த அடிப்படையிலேயே செயல்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ள முடிகிறது. அடிப்படையில் ஒப்பந்தம் குறித்த இவர்களது ஆய்வுகள் இதுவரை தனியார்மய தாராளமய, உலகமயச் சூழலில் எந்தெந்த துறைகளில் தனியார் மயம் சாத்தியம்? சாத்தியமில்லாத துறைகளில் எந்த அளவிற்கு தனியார்மயத்தை செலுத்தலாம் என்ற கேள்விக்கு விடை தேடமுயற்சித்து வந்துள்ளன. முக்கியமாக தனியார் துறைகளில் லாபத்தை அதிகரிக்க ஊதிய நிர்ணயம் ஒப்பந்தம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கோணங்களிலேயே ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

எனினும் எந்த ஒரு அறிவியலுக்கும் இருவேறு பக்கங்கள் இருக்கின்றன. தனியார்மயத்தின் எல்லைகளை ஒப்பந் தக்கோட்பாட்டுகள் மூலமாக விரிவாக் கும் யோசனைகளை முன்வைக்கும் அதே ஆய்வுகள் கண்மூடித்தனமான தனியார்மயத்தின் கேடுகளையும், நிலையான ஊதிய ஏற்பாட்டின் நன்மைகளையும் பேசுகிறது.

அதேசமயம் பொருளாதார மந்தம், நிதிநிறுவன நிலைகுலைவு, சமூக ஏற்ற தாழ்வு, வேலையின்மை ஆகிய பிரச் சினைகளை நேர்மையாக ஆராயவும், சரியான கொள்கைகளையும் அதற்கு தகுந்த சட்டவடிவங்களை தேர்ந்தெடுக் கவும் ஒப்பந்தக் கோட்பாட்டு ஆய்வுகள் உதவும் என நம்புவோம்.

- முனைவர். சௌ.புஷ்பராஜ், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம்

முனைவர். சீ.பழனி, மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி, மதுரை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்