நிறுவனத்தைப் பாதிக்காத `மண முறிவு’!

By செய்திப்பிரிவு

விவாகரத்து சமீப காலமாக அதிகரித்து வருகிறது. நடுத் தர மக்கள், வயதானவர்கள், பணக்காரர்கள், இளம் தம்பதிகள் என இதில் விதிவிலக்குகள் இல்லை. பொதுவாக விவாகரத்து இரு குடும்பங்களிடம் உள்ள உறவுகளை மட்டுமே பாதிக்கும். ஆனால் இருவர் சேர்ந்து ஒரு நிறுவனம் தொடங்கும் பட்சத்தில் விவாகரத்து ஏற்பட்டால் அந்த நிறுவனத்தின் எதிர்காலமே பாதிக்கப்படும். ஆனால் நல்ல வேளையாக பக்குவப்பட்ட இருவர் பிரிவதினால் அந்த நிறுவனத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த நிறுவனம் `மியு சிக்மா’ (MuSigma).

பெங்களூருவில் இருக்கும் அனல்டிக்ஸ் நிறுவனம் மியு சிக்மா. இதனை தீரஜ் ராஜாராம் தொடங்கினார். சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும், பூத் நிர்வாக கல்லூரியிலும் படித் தவர். பிடபிள்யூசி உள்ளிட்ட நிறு வனங்களில் பணியாற்றி இருக் கிறார். 2004-ம் ஆண்டு இந்த நிறு வனத்தைத் தொடங்கினார்.

இவர் மனைவி அம்பிகா சுப்ர மணியன். மோட்டரோலா உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியவர். கடந்த 2007-ம் ஆண்டு நிறுவனத்தில் இணைந்தார். பல முக்கிய பொறுப்புகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். இவர் பெங்களூரு அலுவலகத்தை கையாண்டார். அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரில் உள்ள அலுவலகத்தை தீரஜ் கை யாண்டார். பார்ச்சூன் 500 நிறுவனங் களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் இவர்களின் வாடிக்கை யாளர்கள் ஆவார்கள். உதாரணத் துக்கு மைக்ரோசாப், டெல், வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இவர்களின் வாடிக்கையாளர்கள்.

கடந்த மே மாதம் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிவதாக தகவல்கள் வெளியானது. அப்போது கருத்து தெரிவித்த தீரஜ், எங்களுடைய திருமணம் சிக்கலான ஒரு நிலையில் இருக்கிறது. இதனால் நிறுவனத்துக்கு எந்த பாதிப்பும் வராது. நாங்கள் இருவரும் நிறுவனத்துக்கு என்ன தேவையோ அதனை செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தார். இவர்களது நிறுவனத்தில் 4,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கின்றனர்.

அப்போது குறிப்பிட்ட அம்பிகா விவாகரத்து என்பது எங்கள் இருவரின் தனிப்பட்ட விஷயம். இதனால் எந்த பாதிப்பும் வராது. நிறுவனத்தின் நிர்வாக விஷயங்கள் அப்படியே இருக்கும். தலைமைச் செயல் அதிகாரியாக நான் தொடரு கிறேன் என அப்போது தெரிவித்தார். ஆனால் கடந்த வாரம் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை தீரஜ் ராஜாராம் எடுத்துக்கொண்டார்.

அம்பிகா வசம் உள்ள நிறு வனத்தின் பங்குகளை ராஜாராம் கையகப்படுத்தினார். அம்பிகா வசம் உள்ள பங்குகள் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது, அதற்கு எந்த நிறுவனங்கள் உதவி செய்தன என்பது குறித்த தகவல் களை ராஜாராம் வெளியிடவில்லை. இந்த நிறுவனத்தில் ஜெனரல் அட்லான்டிக் மற்றும் செகோயா கேபிடல் ஆகிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் முதலீடு செய்துள் ளன. இந்த நிறுவனங்கள் தங்களது முதலீட்டை தொடர்வதாகவும் அறிவித்திருக்கின்றன.

இப்போது தீரஜ் ராஜாராம் வசம் 51% பங்குகள் உள்ளன. தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அம்பிகா விலகிவிட்டாலும் இயக்குநர் குழுவில் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 வருடங்களில் சிறந்த நிறுவனத்தை உருவாக்கி இருக்கி றோம். இது வெளியேறுவதற்கான தருணம் என அம்பிகா குறிப்பிட்டார்.

புதிய நிறுவனம் ஒன்றை அம்பிகா தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானாலும் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது தெரிய வில்லை. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விட நிறுவனம் முக்கியம் என்பதை இவர்கள் இருவரும் உணர்ந்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்