பிரம்மாண்ட விற்பனையகம்

By செய்திப்பிரிவு

பென்ட்லி மோட்டார்ஸ் நிறுவனம் உலகிலேயே மிகவும் பிரம்மாண்டமான விற்பனையகத்தைத் திறந்துள்ளது. மொத்தம் 75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பரபரப்பான ஷேக் சயீத் சாலையில் இது அமைந்துள்ளது. பென்ட்லி எமிரேட்ஸ் விற்பனையகத்தில் ஏஐ ஹப்தூர் மோட்டார்ஸ் மிக அதிக அளவிலான முதலீட்டை மேற்கொண்டு சொகுசு காரான பென்ட்லி விற்பனையகத்தை அமைத்துள்ளது. இந்த விற்பனையகம் பல்வேறு நவீன சிறப்பம்சங்களைக் கொண்டது. மொத்தம் ஆறு தளங்களைக் கொண்ட இந்த விற்பனையகத்தில் வாடிக்கையாளருக்கான வரவேற்பரை பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. மேற்கூரை தோட்டம், மிக முக்கியப் பிரமுகர்களுக்கான அறை மற்றும் காரின் எண்ணை சென்சார் செய்யும் வசதி ஆகியன இதில் உள்ள சிறப்பம்சங்களாகும்.

* மிகச் சிறப்பான விளக்குகள். மொத்தம் 1.60 லட்சம் விளக்குகள் இந்த விற்பனையகத்தை ஒளி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. பென்ட்லி காரின் உண்மை நிறத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. (மேலுள்ள படம்)



* பிரிட்டனைச் சேர்ந்த பென்ட்லி மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் சொகுசு கார்களைத் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. 1919-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்நிறுவனத் தயாரிப்புகள் பெரும்பாலும் கைகளால் உருவாக்கப்படுவதால் இது உலக அளவில் பிரபலமான பிராண்டாகத் திகழ்கிறது. 1998-ம் ஆண்டு இந்நிறுவனத்தை ஃபோக்ஸ்வேகன் கையகப்படுத்தி தனது குழும நிறுவனமாக ஆக்கியுள்ளது.



* வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமான வரவேற்பரை. இது முற்றிலும் பிரிட்டன் சொகுசு மாளிகை போன்ற அனுபவத்தை அளிக்கக் கூடியது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் மிகவும் கவனமாக உபசரிக்கப்படுவர்.



* உலகில் எதுவும் சாத்தியம் என்பதை உணர்த்தும் வகையில் `முல்லினர் பென்ட்லி’ அறை உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தாங்கள் வாங்கும் காரில் எத்தகைய மாற்றம் செய்ய விரும்பினாலும், எந்த நிறத்தைத் தேர்வு செய்தாலும் அதை செய்து தரும் அறையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 100 வண்ணக் கலவைகளும் இங்குள்ளன. முந்தைய பென்ட்லி வாடிக்கையாளருக்கு அளிக்கப்பட்ட பிரத்யேக வண்ணங்களின் படங்களும் இங்குள்ளன.



* இங்கு அக்வா கிராஃபிக் வாட்டர் கர்டெய்ன் எனப்படும் தண்ணீர் திரை உள்ளது. இது நம்பர் பிளேட் உணரும் தொழில்நுட்பத்தைக் கொண்டது. இதில் எத்தகைய லோகோ, கார், பெயர் உள்ளிட்ட எதையும் தண்ணீரில் உருவமாக உருவாக்க முடியும். அதேபோல வழக்கமான பென்ட்லி வாடிக்கையாளரை அடையாளம் கண்டு வரவேற்கும் விதமாக இது செயல்படும்.

* பென்ட்லி கார்களில் மிகவும் உயர் ரக பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதைப்போல விற்பனையகத்திலும் காருக்கு மெருகேற்றும் வகையில் தரை மற்றும் சுவர்கள் மிகவும் உயர் ரகத்தோடு உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த விற்பனையகம் வாடிக்கையாளர்கள் தாங்கள் சர்வதேச அளவில் பிரபலமான பிராண்டை வாங்கப் போகிறோம் என்பதை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக இந்த விற்பனையகத்தின் பிராந்திய இயக்குநர் ஸ்டீபன் ரெனால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்