குறள் இனிது: எல்லோருக்கும் நல்லவனாய்...

By செய்திப்பிரிவு

எனது பால்ய சிநேகிதர் ஒருவர். ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் சேர்ந்து `அப்சன்ஸ் ஆப் டிமெரிட்’ (absence of demerit) எனும் விநோதமான தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வுகள் பெற்று கோட்ட மேலாளர் ஆகியிருந்தார்!

அவருக்குத் திறமை அதிகம் கிடையாது. அதைவிட வேடிக்கை அவருக்குத் தனக்கு வேலை தெரியாது என்பதே தெரியாது!

குமாருக்கு அந்தப் பதவி தரும் முக்கியத்துவம் மிகவும் பிடித்து இருந்தது.அவரைப் பொறுத்த வரை பதவியில் இருப்பது என்பது அது கொடுக்கும் அதிகாரத்தை பயன் படுத்துவதற்காகவே!

தனது பதவியினால் பலருடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அவருக்கு ஒரு அலாதி கிறக்கம் இருந்தது.

பிரச்சினை என்னவென்றால், குமார் சலுகை கேட்பவரின் கோரிக்கை நியாயமானதா என்று பார்க்க மாட்டார். அதனால் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டநஷ்டங்களையும் நினைத்துப் பார்க்க மாட்டார்.

இடமாற்றம் வேண்டியவர்கள் அவரை அணுகினால் போதும். அந்த ஆள் இப்போது இருக்கும் இடத்தில் என்ன செய்தார், அவர் கேட்கும் புதிய இடம் அவர் வீட்டிற்கு பின்னாலேயே இருக்கிறதே, அந்த ஆள் மதிய சாப்பாட்டிற்குப் போய் தூங்கி விட்டு வரக் கூடியவரா என்றெல்லாம் யோசிக்க மாட்டார்.

சரி, அவர் கேட்கும் புதிய இடத்தை வேறு யாரும் கேட்டு இருக்கின்றார்களா, அவர்களின் தேவை அதை விட நியாயமானதா என்பதையும் பார்க்க மாட்டார் குமார்! அவரைப் பார்த்து இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்தால் போதும், எந்தக் காரியத்தையும் முடித்துக் கொள்ளலாம்.

பதவி உயர்வு விஷயத்திலும் அப்படித்தான். கோவில் பிரசாதம் போல் கேட்டவர்களுக்கெல்லாம் விநியோகிப்பார். விபரம் தெரியாத ஆட்களுக்குப் பெரிய பொறுப்பைக் கொடுக்கலாமா என்கிற எண்ணமே அவருக்குத் தோன்றாது!

குமாரது பார்வையில் அதெல்லாம் அவரது கடமை! அதாவது கிடைக்காதவர்களுக்கு செய்யும் உதவி.

இந்த விபரீதத்தின் உச்சம் அவர் பெருந்தவறு செய்தவர்களையும் முறையாகத் தண்டிக்காமல் விட்டதுதான். செலவு கணக்கில் மோசடி செய்தவர், கையூட்டு பெற்றவர் போன்றவர்கள் அவரை அணுகி உதவி கேட்டால் கூட முடிந்த வரை காப்பாற்றி விடுவார்!

இவரது அன்பு மழையால், உதவி வெள்ளத்தால் நிறுவனத்தில் சேதாரமும் பாதிப்புமே அதிகமாயின!

பின்னே என்னங்க. பதவி உயர்வோ இடமாற்றமோ சிலருக்குத் தானே கொடுக்க முடியும்? தகுதி இல்லாதவனுக்குக் கொடுப்பது தகுதி இருப்பவனிடமிருந்து பறிப்பது போலத் தானே?

தவறானவர்களைக் காப்பாற்றுவதோ பாம்புக்குப் பால் வார்ப்பதற்கு ஒப்பானதாயிற்றே!

பாலைவனத்திலோ கடலிலோ பெய்யும் மழையினால் பயனில்லை! அறுவடைக்கு முன் பெய்யும் மழையோ விளைந்ததையும் கெடுத்து விடும்!

வெவ்வேறு மக்களின் தரமறிந்து உதவியோ தண்டனையோ கொடுக்கும் மன்னவன் பருவத்தே பெய்து விளைச்சலுக்கு வழி செய்யும் மழைக்கு ஒப்பானவன்.அது போலவே நிறுவனத் தலைவர்களும் பணியாளர்களின் இயல்பைப் பொறுத்து நடந்து கொண்டால் தானே நல்லது?

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு (குறள்: 545)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்