குறுந் தொழில் நிறுவன தொழிலாளர்களுக்கு இபிஎப் கிடைக்குமா?

By செய்திப்பிரிவு

இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில் (GDP) 8 சதவீதம் அளவுக்கு குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) பங்களிப்பாக உள்ளது. ரூ.25 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டில் தொடங்கப்படும் தொழில் சிறு தொழில் என்றால், அதற்கும் குறைவான முதலீட்டில் தொடங்கப்படும் தொழில்களை குறுந்தொழில்கள் என்று வரையறுக்கலாம்.

இந்தியாவில் சுமார் 3.6 கோடி சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளதாக சிறு தொழில் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ஏற்றுமதி 40 சதவீதம் அளவுக்கு சிறு தொழில் நிறுவனங்களை நம்பி இருக்கிறது. தவிர உற்பத்தி துறையில் 45 சதவீதமும் சிறுதொழில் நிறுவனங்களை நம்பியுள்ளது. சுமார் 8 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பை சிறு தொழில் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

பொதுவாக சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில்தான் எம்எஸ்எம்இ நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (EPFO) சார்ந்த திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 20 பேர் பணியாற்றும் சிறு நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்குள் வர வேண்டியது கட்டாயமாக உள்ளது. இப்போது அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் கணக்கிட்டு பிஎப் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது

இந்த நிலையில் அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் ஒரு நடவடிக்கையாக தற்போது 20 தொழிலாளருக்கு மேல் பணியாற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் அவர்களுக்கு பிஎப் பிடித்தம் செய்ய வேண்டியது கட்டாயம் என்று சட்டத்தை மாற்றி, இந்த வரம்பு 10 ஊழியர்கள் என குறைக்கப்பட திருத்தம் கொண்டு வர தொழிலாளர் நல அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கு ஏற்ப நடைமுறையில் உள்ள பிஎப் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் திட்டமிட்டிருந்தது.

இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள குறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் கிட்டத்தட்ட 50 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்த சட்ட திருத்தத்தை எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது தொழிலாளர் நல அமைச்சகத்தின் இந்த முன்வரைவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் இது நடைமுறைக்கு வருவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

`மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் இந்த முன்வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இதற்கான முன்வரைவை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் உருவாக்கியது. இதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தது. இந்த முன்வரைவை மத்திய அமைச்சரவை ஏற்கவில்லை என இரண்டாம் கட்ட அதிகாரிகள் அளவிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய சூழலில் `மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் சிறு குறு தொழில்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் குறுந்தொழிலகங்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று அரசு கருதுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துறையை ஊக்குவிப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும்.

குறைவான கூலியில் வேலைபார்க்கும் குறு சிறு தொழில் நிறுவன தொழிலாளர்களுக்கு ஓய்வு கால நிதி என்பது ஓரளவுக்கு பாதுகாப்பளிக்கும் என்று தொழிலாளர் அமைச்சகம் கருதியது. சமீபத்தில் இந்த துறை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே வருங்கால வைப்புநிதியின் மாத சந்தா செலுத்துவதில் தொழில் நிறுவனங்களுக்கு பல விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையின் இந்த முடிவு குறைந்த கூலி தொழிலாளர்களுக்கு இழப்பாகத்தான் இருக்கும். இந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் இணைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) இணைக்கும் வாய்ப்பையாவது உருவாக்கலாம் என்பது தொழிற்சங்க தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் இதில் சிறந்த பலன் கிடைக்குமா என்று சொல்ல முடியாது. இதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. மத்திய அரசு, தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் நல அமைச்சகம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் பயணித்தால் குறைந்த கூலி தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன் கிடைக்கச் செய்யலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்