நான் சோலாப்பூரில் வங்கியில் பணி புரிந்த பொழுது ஒரு மேலாளர். பெயரா? குமார் இல்லைங்க! கணேசன் என்று வைத்துக் கொள்வோமா?
வங்கியில் வைப்பு நிதி வைக்க வந்தாலும், கடன் கேட்டு வந்தாலும் கணேசனது வரவேற்பு சித்திரத்துச் செந்தாமரை போல ஒரே மாதிரி சிரித்த முகத்துடன் இருக்கும்!
‘வாங்க, வாங்க. ஒன்றும் கவலைப் படாதீங்க. கடன் கொடுத்து நாட்டில் தொழில் வளர்ச்சி செய்வது எங்கள் கடமை, அதற்குத் தானே எங்களுக்குச் சம்பளம்' என்பார்!
சாதாரணமாக மற்ற வங்கி அதிகாரிகள் விண்ணப்பதாரர்களைக் கேட்கும் ஒரே கேள்வி கடனுக்கு எந்தச் சொத்தை அடமானம் வைப்பீர்கள் என்பது தானே?
இவரோ வாடிக்கையாளரே அவரிடம் சொத்தைப் பற்றிப் பேச்செடுத்தாலும், ‘அதை விடுங்க, அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப உங்களைப் பற்றியும் நீங்கள் தொடங்க உள்ள தொழில் குறித்தும் சொல்லுங்கள்' என்பார்!
தொழிலுக்குத் தேவையான இடம், மின்இணைப்பு, பணியாட்கள் போன்றவைகள் கிடைக்குமா என்றெல்லாம் கனிவாகக் கேட்பார்.
வந்தவர் நல்லவரா, வல்லவரா, சொந்தமாகத் தொழில் செய்யக்கூடிய திறமையும் அனுபவமும் உள்ளவரா என்பவற்றை அவரிடம் சாமர்த்தியமாகப் பேசியே தெரிந்து கொண்டு விடுவார்.
ரகசியம் இதுதானுங்க! Person, Project, Paper என்கிற வரிசை கணேசனுக்கு!! பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பது அது. சிலர் இதையே தலைகீழாக Paper-ல் ஆரம்பித்து வாடிக்கையாளருக்கு எரிச்சல் மூட்டுவார்கள்.
ஒரு முறை ஒரு வாடிக்கையாளர் வருமான வரித் துறைக்குக் கொடுத்த காசோலையில் கையெழுத்துப் போடவே மறந்து விட்டார்! கணேசனோ கிளியரிங்கில் வந்த காசோலையைத் திருப்பி அனுப்பாமல், பாஸ் செய்து பின்னர் கையெழுத்து வாங்கிக் கொண்டார்!
ஒரு துபாய் வாடிக்கையாளர் தனது அம்மாவிற்கு அனுப்பும் பணத்தை மாதா மாதம் வீட்டிற்கே கொண்டு போய்க் கொடுப்பார். வாடிக்கையாளர்கள் வீட்டில் யாரும் இறந்து போனால் முதலில் போய் நிற்பார்.
பிறந்த நாள், கல்யாண நாள் எல்லாம் குறித்துக் கொண்டு அவர் வாழ்த்துச் சொன்னால் மயங்காத வாடிக்கையாளர்களே இல்லை!
இதனால் அரையாண்டு முடிவுகளின் பொழுது நாங்கள் யாரும் கேட்காமலேயே வாடிக்கையாளர்கள் டெபாசிட்டை கொட்டுவார்கள்!
கடன் வாங்கி கட்டாதவர் வேறு யாரும் இருந்தால் மற்ற வாடிக்கை யாளர்கள் அவரைச் சந்தித்து ஆவண செய்த கதைகளும் உண்டு!
பல வாடிக்கையாளர்கள் தத்தமது வாடிக்கையாளர்களிடமும் சப்ளையர்களிடமும் , ‘இங்கு அருமையான மேலாளர் உள்ளார், இவரிடம் கணக்குத் தொடங்குங்கள்' என உதவியதால் வர்த்தகம் பெருகியது!
வாடிக்கையாளர்களிடம் சட்டம் பேசாமல் அவர்கள் நலன் கருதி சேவை செய்ததால், அவர்கள் தாமாக முழு ஒத்துழைப்பு தந்தது கண் கூடாக நடந்தது!
நாட்டில் வாழும் குடிமக்களைப் புறக்கணிக்காமல் ஆட்சி செய்யும் அரசனது வழியை மக்கள் பின்பற்றி நடப்பார்கள் என்கிறார் வள்ளுவர்.
இது வாடிக்கையாளர்களின் தேவைகளை அன்புடன் நிறைவேற்றும் நிறுவனத் தலைவர்களுக்கும் பொருந்துகிறதில்லையா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago