1940ஆம் ஆண்டு பிறந்த வெய்ன் டயர் அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவவாதி, சுய மேம்பாட்டு நூல்களின் ஆசிரியர் மற்றும் சிறந்த ஊக்கமூட்டும் பேச்சாளர். 1976-ம் ஆண்டில் வெளியான இவரது முதல் புத்தகமே சுமார் 3.5 கோடி பிரதிகள் விற்று விற்பனையில் பெரும் சாதனை படைத்துள்ளது. நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இவரது படைப்புகளில் அடங்கும். தனது ஊக்கமூட்டும் படைப்புகள் மற்றும் பேச்சுகளின் மூலமாக ஊக்கமூட்டுதலின் தந்தை என்று கருதப்படுகிறார். 2015-ம் ஆண்டு, தனது 75 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
# நாம் என்ன நினைக்கின்றோம் என்பதே, நமக்கு என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்கின்றது.
# உங்களுடைய பங்கேற்பு இல்லாமல் முரண்பாடுகளால் தொடர்ந்து செயல்பட முடியாது.
# ஒன்றைப்பற்றி எதுவுமே தெரியாமல் அதை நிராகரிப்பதே அறியாமையின் உயர்ந்த வடிவம்.
# இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு நோக்கம் உள்ளது.
# நம்மால் மேற்கொள்ளப்பட்ட தேர்வுகளின் மொத்த தொகையே நமது வாழ்க்கை.
# நீங்கள் அணியும் இறுதி ஆடையில், உங்களுக்கு பாக்கெட் எதுவும் தேவைப்படாது.
# நீங்கள் மற்றவர்களை மதிப்பீடு செய்யும்போது, நீங்கள் அவர்களை வரையறை செய்யவில்லை, நீங்கள் உங்களை வரையறுக்கிறீர்கள்.
# வெற்றிகரமான மக்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். பணம் சம்பாதிக்கும் மக்கள் வெற்றிகரமானவர்களாக ஆவதில்லை.
# எதிரானவை எல்லாம் உங்களை பலவீனப்படுத்துகிறது; சாதகமானவை எல்லாம் உங்களை பலப்படுத்துகின்றது.
# உங்கள் கற்பனை உங்களுடையது மற்றும் உங்களுடையது மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
# அற்புதங்கள் கணப்பொழுதில் வரக்கூடியவை. அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
# தூய, நிபந்தனையற்ற அன்பைவிட சொர்க்கத்திலோ அல்லது பூமியிலோ அதிக சக்தி ஒன்றுமில்லை.
# எதிர்காலம் யாருக்கும் உறுதியளிக்கப்பட்டது அல்ல; இப்பொழுதே செயல்படத் தொடங்கு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago