குறள் இனிது: மகிழ்ச்சி... அதுதானுங்க முக்கியம் !

By சோம.வீரப்பன்

நீங்கள் ஜிடிபி (GDP) கேள்விப்பட்டு இருப் பீர்கள், ஜிஎன்ஹெச் (GNH) தெரியுமா?

சர்வதேச செலாவணி மையத்தின் மதிப்பீட்டின் படி 2016-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற் பத்தியில் (Gross Domestic Product/GDP) அமெரிக் காவிற்கு தான் உலகில் முதலிடம்.18.56 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் என்ன சும்மாவா?

சீனா இரண்டாவது இடத்திலும் ஜப்பான், ஜெர்மனி மூன்றாவது நான்காவது இடங்களிலும் இருப்பதில் என்ன வியப்பு? இந்தியா..? உலக அரங்கில் ஏழாவது இடத்தில் 2.25 லட்சம் கோடி டாலர்களுடன் இருப்பது நமக்குப் பெரிய பெருமையே!

பொருளாதாரத்தில் மட்டுமில்லீங்க, படைபலத்திலும் முதலிடம் பெரிய அண்ணன் அமெரிக்காவிற்குத் தான்! உலகிலேயே அதிகமான ஆட்கள் வேலை பார்க்கும் இடம் அவர்களது பாதுகாப்புத் துறையில் தானாம் ...அதாவது 32 லட்சம் பேர்! இதிலும் சீனா இரண்டாம் இடத்தில்!

அப்படியானால் இந்த மாபெரும் வல்லரசுகளில் வாழும் மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பார்கள் என நினைக்கின்றீர்களா? அது தான் இல்லை!

உலக மகிழ்ச்சிக் குறியீடு (World Happiness Index) எனும் அமைப்பு சில ஆண்டுகளாக பல்வேறு நாடுகளை, அந்நாட்டில் வாழும் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் எனும் அடிப்படையில் பட்டியலிட்டு வருகிறது. இதில் முதல் இடம் பிடித்துள்ளது டென்மார்க்! இரண்டாவது மூன்றாவது இடங்களில் ஸ்விட்சர்லாந்தும், ஐஸ்லாந்தும்! அமெரிக்கா 13-ஆவது தான்! நம்ம நாடா... 118ல்!

இதில் வியப்பென்ன? அளவுகோல் அப்படி! மொத்தம் ஆறு விஷயங்களில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஆய்வு நடத்தினார்களாம். தனிமனித சராசரி வருமானம், ஆயுள் எதிர்பார்ப்பு என்பவற்றுடன், நாட்டிலுள்ள தனிமனித சுதந்திரத்தையும் ஊழலையும்ல பார்த்திருக்கிறாங்க அவங்க.

அப்புறம் நாம எங்கே?

நாட்டின் பரப்பளவோ, படை பலமோ குடிமக்களின் மகிழ்ச்சிக்கு உத்திரவாதமில்லையே! நல்லாட்சி நடக்கிறதென்றால் தானே மக்களுக்கு நிம்மதி, மகிழ்ச்சி?

எனவே தான் நமது அண்டை நாடான பூடானில் இந்த ஜிடிபிக்கு பதிலாக ஜிஎன்ஹெச் (GNH-Gross National Happiness) எனும் மொத்த உள்நாட்டு மகிழ்ச்சியை அளவுகோலாகாக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிடுகின்றனர்!

மரங்களை வெட்டி காட்டை அழித்தால் உற்பத்தி உயரலாம்....மழை? அதனால் உருவாகும் வறட்சி... சமூகப் பொருளாதார வளர்ச்சி என்பதை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாச்சார மேம்பாடு மற்றும் நல்லாட்சியுடனே தான் பார்க்க வேண்டுமென 1970 களிலேயே முடிவெடுத்தனர் அவர்கள்!

நிறுவனங்களிலும் அப்படித்தானே. ஒரு நிறுவனத்தின் வர்த்தகம் வளரலாம், லாபம் அதிகரிக்கலாம். ஏன் சம்பளம் கூட அதிகமிருக்கலாம். ஆனால் அங்கு அடக்குமுறை இருந்தால், மனித நேயமும் வெளிப்படைத் தன்மையும் இல்லாவிட்டால்,அங்கு பணிபுரிபவர்கள் நிம்மதியின்றி மகிழ்ச்சியின்றித் தானே இருப்பார்கள்?

மன்னவனுக்கு வெற்றியைத் தருவது பெரும் படை அல்ல, அன்பும் சமூக அக்கறையும் உள்ள நல்லாட்சியே ஆகும் எனும் குறள் வெறும் எண்கள் பின்னால் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும்!

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்

கோல்அதூஉம் கோடாது எனின் (குறள்: 546)

somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்