1913 ஆம் ஆண்டு பிறந்த ஆல்பர்ட் காம்யூ, பிரெஞ்சு தத்துவஞானி, ஆசிரியர், பத்திரிகையாளர் மற்றும் மிகச்சிறந்த எழுத்தாளர். சிறுவயதிலேயே மிகச்சிறந்த பண்புகளையும், விவேகத்தையும் உடையவராக விளங்கினார். நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். 1957 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளார். இலக்கிய துறையில் தனது பங்களிப்பிற்காக உலக அளவில் புகழ் பெற்றவராக விளங்கினார். 1960 ஆம் ஆண்டு தனது 46 வது வயதில், ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார்.
# எனக்குப் பின்னால் நடக்காதே, நான் வழிகாட்டுபவன் அல்ல; எனக்கு முன்னால் செல்லாதே, நான் பின்பற்றுபவன் அல்ல; என்னோடு இணைந்து நட, என்னுடைய நண்பனாய் இரு.
# மகிழ்ச்சியைப் பற்றி தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தால் உங்களால் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது; வாழ்க்கையின் அர்த்தத்தை தேடிக்கொண்டிருந்தால் உங்களால் ஒருபோதும் வாழ முடியாது.
# உங்களால் அனுபவத்தை உருவாக்க முடியாது, அதைச் செயல்பாடாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
# அச்சத்தின் அடிப்படையில் வரும் மரியாதையை விட, அதிக வெறுக்கத்தக்க செயல் வேறு எதுவுமில்லை.
# தைரிய குறைபாடு உள்ளவர்கள், அதை நியாயப்படுத்த எப்போதும் ஒரு தத்துவத்தை தேடிக்கொண்டிப்பார்கள்.
# நெறிமுறைகள் இல்லாத மனிதன் என்பவன், இந்த உலகின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு காட்டு விலங்கினைப் போன்றவன்.
# எனக்கு ஒரே ஒரு கடமை தெரியும், அது அன்பு செலுத்துதல்.
# வன்முறை என்பது நியாயமற்றதும் மற்றும் தவிர்க்க முடியாததும் ஆகும்.
# நேர்மைக்கு விதிகள் தேவையில்லை.
# உண்மையான, தீவிரமான தத்துவார்த்த பிரச்சினை ஒன்று உள்ளது, அது தற்கொலை.
# வாழ்க்கையின் மீது விரக்தி இல்லாமல், வாழ்க்கையின் மீது அன்பும் இல்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago