1452 ஆம் ஆண்டு பிறந்த லியொனார்டோ டா வின்சி, இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் ஆவார். கட்டிடக்கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் மற்றும் சிற்பி போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார்.
குறிப்பாக, மோனா லிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் போன்ற உலக புகழ்பெற்ற ஓவியங்களைப் படைத்தவர். கண்டுபிடிப்புகளில் அதிக ஆர்வம் கொண்டவராகவும், மிகச்சிறந்த கற்பனை வளம் உடையவராகவும் விளங்கியதாக அறியப்படுகிறார். உடற்கூற்றியல் மற்றும் வானியல் துறைகளிலும் இவரது பங்களிப்பு உண்டு. தனது பன்முக ஆற்றலால் பிரபஞ்ச மனிதர் என்று போற்றப்பட்டார்.
சிக்கல்களின் போது சிரிக்க முடிந்தவர்களையும், துயரத்திலிருந்து வலிமையை சேகரிக்க முடிந்தவர்களையும் நான் நேசிக்கிறேன்.
நன்கு பயன் படுத்தப்பட்ட வாழ்க்கையே நீடித்த வாழ்க்கை.
வாழ்க்கையின் மிக உயர்ந்த பண்பு எளிமையே.
அறிவியல் என்பது படைத்தளபதி, பயிற்சி என்பது படைவீரர்கள்.
இயற்கை தனக்கான சொந்த சட்டங்களை ஒருபோதும் மீறுவதில்லை.
புரிதலில் உள்ள சந்தோஷமே மிகவும் உன்னதமான மகிழ்ச்சியாகும்.
கைவிடப் படுகிறதே தவிர, கலை ஒருபோதும் முடிக்கப் படுவதில்லை.
ஒவ்வொரு செயலும் ஒரு நோக்கத்தின் மூலம் தூண்டப்பட வேண்டும்.
யார் நல்லொழுக்கத்தை விதைக்கின்றாரோ அவரே கவுரவத்தை அறுவடை செய்கிறார்.
அனைத்து வகையான இயற்கைக்கும் தண்ணீரே உந்து சக்தியாக இருக்கின்றது.
நேரத்தை சரியாக பயன் படுத்தும் எவருக்கும் அது போதுமான அளவிற்கு கிடைக்கின்றது.
கண்ணீர் இதயத்தில் இருந்து வருகிறதே தவிர மூளையிலிருந்து வருவதல்ல.
எங்கு கூச்சல் அதிகமாக இருக்கின்றதோ அங்கு உண்மையான அறிவு இருப்பதில்லை.
நமது அனைத்து அறிவும் அதன் தோற்றத்தை நமது உணர்வுகளில் கொண்டிருக்கிறது.
அறிந்திருத்தல் மட்டும் போதாது, பயன்படுத்த வேண்டும்; தயாராக இருத்தல் மட்டும் போதாது, செயல்பட வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago