புதுமைகளும், புதுப்புது கண்டுபிடிப்புகளும் அதிகம் இடம்பெறும் துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று.
பேட்டரியால் ஓடும்கார்கள், ஹைட்ரஜனில் சீறும் கார்கள் என புதிய கண்டுபிடிப்புகள் தொடரும் அதே சமயத்தில் டிரைவர் இல்லாத கார்களை சாத்தியமாக்கும் முயற்சிகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக கூட்டமைப்பு வாகனங்களுக்கான விதிமுறைகளை வகுத்தது. இதன்படி பெரும்பாலான கார் உற்பத்தி நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்புகளைக் கருத்தில் கொண்டு வாகனங்களைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை புதிய விதிமுறை வலியுறுத்தியது. இதில் ஒரு முக்கிய அம்சமாக ரியர் வியூ கண்ணாடிகள் இல்லாத கார்கள் தயாரிப்பில் இப்போது நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
பின்புறம் வரும் வாகனங்களைக் கண்டு வழிவிட காரின் உள்பகுதியில் அமைந்துள்ள கண்ணாடியும். பக்கவாட்டில் வரும் வாகனங்களைப் பார்க்க இருபுறமும் கண்ணாடிகளும் உள்ளன. காரை பின்னோக்கி இயக்க முயலும்போது அதற்கு உதவும் கேமிரா பொறுத்தப்பட்ட கண்ணாடி உதவுகிறது. இதுபோன்ற பல வசதிகள் விலை உயர்ந்த கார்களில் இடம்பெறுகின்றன.
ஆனால் இப்போது இதுபோன்ற முன்பக்க மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் (ரியர்வியூ மிரர்ஸ்) இல்லாமல் அதற்குப் பதிலாக கேமிராக்களைப் பொறுத்தி அதன் மூலம் வாகனங்களை பார்த்து அதற்கேற்ப கார்களை செலுத்தும் வசதியோடு கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
மேம்பட்டது
ரியர் வியூ கண்ணாடிகளுக்குப் பதிலாக கேமிரா பயன்படுத்துவதால் அதிக பாது காப்பு உறுதி செய்யப்படுகிறது. ஏனெனில் தற்போது புழக்கத்தில் உள்ள ரியர் வியூ கண் ணாடிகளில் `பிளைன்ட் ஸ்பாட்’ எனப்படும் பகுதிகள் துல்லியமாகத் தெரியாது.
ஆனால் கேமிராவில் இதுபோன்ற குறைகள் கிடையாது. பின்னால் வரும் வாகனத்தின் முழுத் தோற்றம் துல்லியமாகத் தெரியும். மேலும் இரவில் வாகனங்களைப் பார்ப்பதற்கும், தேவைப்பட்டால் அகலமாக (வைட்) கேமிரா லென்சை இயக்கவும் இதில் வசதி உள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்திலான கார்கள் புதிதாக உருவாக்கப்படும் அடுத்த தலைமுறை கார்களில் நிச்சயம் இடம்பெறும் என நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக டிரைவர் இல்லாத கார்களில் இத்தகைய நுட்பம் பயன்படுத்தப்படும்.
இதேபோல நீண்ட தொலைவு ரிமோட்டில் இயக்கப்படும் டிரக்குகளில் இத்தகைய கேமிரா பொறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமடைந்துள்ளன.
ரியர்வியூ இல்லாத கார்கள் உருவானால் மேலும் அழகிய தன்மை கொண்ட கார்களை வடிவமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமடைந்துள்ளன.
ரியர் வியூ கண்ணாடிகள் வழக்கமாக டிரைவரின் பார்வை படும்படி உரிய இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். ஆனால் கேமிராவுக்கு அது தேவையில்லை. கேமிராவை வாகனத்தின் எந்த இடத்திலும் அழகூட்டும் வகையில் பொறுத்தலாம்.
மேலும் அதிக வேகத்தில் செல்லும் வகையில் வாகனங்களை வடிவமைக்கலாம். வாகனத்தின் வேகத்துக்கு முட்டுக்கட்டைபோடும் விதமாக ரியர் வியூ கண்ணாடிகளைப் போல கேமிராக்கள் இருக்காது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
ரியர் வியூ கண்ணாடிகளை டிரைவர்கள் தாங்கள் அமரும் இடத்திற்கேற்ப அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும். உட்கார்ந்தபடியே அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உயர் ரகக் கார்களில் மட்டுமே உள்ளது. ஆனால் கேமிரா பொறுத்துவது அமலுக்கு வந்தால் இது அனைத்து கார்கள் மற்றும் டிரக்குகளில் சாத்தியமாகும்.
கேமிரா பொறுத்தப்பட்டிருந்தால் அருகில் வரும் கார்கள் மட்டுமின்றி சைக்கிளில் வருவோர், போவோர், பாதசாரிகள் உள்ளிட்ட நுட்பமான படங்களும் கேமிராவில் பதிவாகும். இதனால் சுற்றுப் புறத்தில் உள்ள அனைத்து நிகழ்வுகளையும் டிரைவர் பார்த்து அதற்கேற்ப வாகனத்தை இயக்கமுடியும்.
சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது இத்தகைய கேமிரா பொறுத்தப்பட்ட கார்களை தங்களது எதிர்கால மாடல்களில் பொறுத்தத் தொடங்கியுள்ளன.
சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஐ8 மாடல் காரில் இத்தகைய கேமிராவைப் பொறுத்தி லாஸ்வேகாஸில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சி யில் காட்சிப்படுத்தியது.
இந்தக் காரில் வழக்கமாக ரியர்வியூ கண்ணாடி வைக்கும் இடத்தில் இரண்டு கேமிராவும் உள்பகுதியில் காரின் முன்புற கண்ணாடியின் மத்தியில் ஒரு கேமிராவும் உள்ளது. ரியர் வியூ இல்லாமல் கேமிராவைக் கொண்டுள்ள இந்தக் காரின் தோற்றம் மேலும் மேம்பட்டுள்ளது.
முன்புற கண்ணாடியில் உள்ள கேமிரா காரின் சுற்றுப் புற நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது. கேமிராவில் பதிவாகும் படங்கள் திரையில் துல்லியமாக தெரிவதற்கான தொழில்நுட்பம் மிக நேர்த்தியானது.
கேமிராவில் பதிவாகும் படங்கள் திரையில் உடனுக்குடன் தெரிந்தாக வேண்டும். அதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கையை நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.
ஒருவேளை திரையில் படங்கள் தோன்றுவதில் பிரச்சினை ஏற்பட்டால் அதை டிரைவர்கள் எவ்விதம் எதிர்கொள்வது என்பதற்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் பணியில் இத்துறை வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியை உடனுக்குடன் பின்பற்றுவதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறிதும் சளைத்தவையல்ல. அந்த வகையில் கேமிரா கார்கள் விரைவில் சந்தைக்கு வரும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago