கடந்த வாரம் வேலை நிமித்தமாக அமெரிக்கா சென்றார் நண்பர். அவரை வழியனுப்ப சென்னை விமான நிலையம் சென்றேன். அமெரிக்க பயணம் இனிதாகட்டும் என நண்பர்கள், உறவினர்கள் பலரும் வாட்ஸ் அப்பில் வாழ்த்து தெரிவித்தனர். அதில் ஒருவர் ஹெல்மெட் அணிந்து செல்லவும் என்று கூறி வாழ்த்தியிருந்தார்.
சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை கண்ணாடி கீழே விழுவது தொடர் கதையாகிவிட்டதன் எதிரொலி என்பது நன்கு புரிந்தது. இதுவரை 40 முறை மேற்கூரை விழுந்து சர்வதேச கவனத்தை ஈர்த்துவிட்டது.
சில நாள்களுக்கு முன்பு ஜெர்மனியில் புதிய விமான நிலையம் கட்டும் பணியின் உண்மை நிலையை தெரிவித்ததற்காக ஒருவருக்கு வேலையே போய்விட்டது என்று படித்த போது சர்ச்சைக்கும் விமான நிலையத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது புலனாகியது.
பெர்லின் பிராண்டன்பர்க் ஏர்போர்ட் (பிஇஆர்) என்ற பெயரிலான விமான நிலையம் கட்டும் திட்டம் 2006-ம் ஆண்டில் முடிவெடுக்கப்பட்டது. 6 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு 2012-ல் இந்த விமான நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இத்திட்டப் பணிக்கான செலவு 170 கோடி யூரோ என மதிப்பிடப்பட்டது. ஆனால் இப்போது இதன் செலவு 650 கோடி யூரோவாக உயர்ந்துவிட்டது. அதாவது 10 ஆண்டுகளில் திட்டச் செலவு 4 மடங்கு உயர்ந்துவிட்டது.
விமான நிலையம் திறக்கப்படும் தேதி இதுவரை ஐந்து முறை மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. இப்போது 2017-ல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்த விமான நிலையத்துக்கு வில்லி பிராண்ட் ஏர்போர்ட் என பெயரிட திட்டமிடப் பட்டது.
திட்டப் பணி தொடங்கியவுடனேயே பிரச்சினையும் ஆரம்பமாகிவிட்டது.
விமான நிலையத்தில் பதிக்கப்பட்ட மின்சார கேபிள்கள் தவறுதலான இணைப்பைக் கொண்டிருந்தன. இதனால் விமான நிலைய விளக்குகளை அணைக்க முடியவில்லை. இதனால் பகல் பொழுதிலும் மின் விளக்குகள் ஒளிர்ந்தன.
இப்பொழுது விமான நிலையத்தினுள் புகையை வெளியேற்றும் குழாயில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என்றும் இதற்காக வடிவமைப்பில் மாற்றம் செய்யப் போவதாக கட்டுமான பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெர்லினில் மிகவும் புராதனமான விமான நிலையமாக இருந்த டெப்பெல்ஹாப் விமான நிலையம் 2008-ம் ஆண்டு மூடப்பட்டுவிட்டது. இது தற்போது அகதிகள் தங்கும் முகாமாக பயன்படுத்தப்படுகிறது.
புதிய விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்றிருந்த நிலையில் அதன் திறப்பு விழா பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
விமான நிலையத் திறப்பு தள்ளிப் போய்க் கொண்டிருப்பது தொடர்பாக விமான நிலைய மக்கள் தொடர்பு அதிகாரி டேனியல் அபோ, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நேர்மையான அரசியல்வாதி, உண்மை பேசும் விமான நிலைய இயக்குநர், போதை மயக்கத்தில் இல்லாத எவராலும் இந்த விமான நிலையம் எப்போது திறக்கும் என்பதை உறுதிபடக் கூற முடியாது என்று குறிப்பிட்டார்.
இன்னும் ஒரு படி மேலே சென்று போதையில் இருப்பவரால் மட்டுமே இந்த விமான நிலையத் திறப்பு விழா தேதியைக் கூற இயலும் என்றார்.
ஏற்கெனவே பிரச்சினையில் சிக்கி உழன்று கொண்டிருந்த நிர்வாகத்தினர், உண்மை பேசிய டேனியல் அபோவை வேலையிலிருந்து தூக்கிவிட்டனர்.
பணி நீக்கம் செய்ததன் மூலம் இப்பிரச்சினைக்குத் தாற்காலிக தீர்வு கண்டுள்ளது நிர்வாகம்.
சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை விழும்போதெல்லாம் அதை எடுத்து சரி செய்வதைப் போல…
ஆக எங்கேயுமே பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதில்லை என்பது புலனாகியுள்ளது.
நேர்மையான அரசியல்வாதி, உண்மை பேசும் விமான நிலைய இயக்குநர், போதை மயக்கத்தில் இல்லாத எவராலும் இந்த விமான நிலையம் எப்போது திறக்கும் என்பதை உறுதிபடக் கூற முடியாது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago