ஐஸ்கிரீம் கப்பை கையில் வாங்கி யதும், அதற்கு மேலே டாப்பிங்ஸ் என்று சொல்லக்கூடிய நட்ஸ் மற்றும் சாக்லேட் சாஸ் போன்றவை களை மேலே தூவுகிறபோது அலங்கார மாகவும் இருக்கும். அது ஐஸ்கிரீமுக்கு கூடுதல் சுவையையும் கொடுக்கும். காப்பீடு தொடர்பான தலைப்பை வைத்துவிட்டு ஐஸ்கிரீம் டாப்பிங்ஸை ஏன் பேச வேண்டும் என்கிற குழப்பம் வரலாம். சம்பந்தம் இல்லைதான் ஆனால் ரைடர் பாலிசிகளை விளக்க இதைத் தவிர வேறு எதுவும் சிறந்த உதாரணமாக இருக்க முடியாது.
ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கிறோம் என்றால் அதற்கு கூடுதல் பொறுப்பு கொடுப்பது ரைடர்கள். அதாவது ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் டாப்பிங்ஸ் போல என்று சொல்லலாம்.
ஆயுள் காப்பீடு தேவைக்காக ஒரு டேர்ம் பாலிசி எடுக்கிறோம் என்றால் அதனோடு சேர்ந்த துணைப் பலன்களையும் காப்பீடு நிறுவனங்கள் வரையறுத்துள்ளன. டேர்ம் பாலிசியுடன் இந்த பலன்களுக்காக ஒரு குறைவான பிரீமியத் தொகையையும் சேர்த்துக் கட்டினால் ஒரே காப்பீட்டின் மூலம் அதிக பலன்கள் கிடைக்கும். அதாவது காப்பீட்டுடன் சேர்த்து கிடைக்கும் சில ரைடர்கள்களால் காப்பீடு எடுப்பவருக்கு பல பயன்கள் கிடைக்கும். அதே சமயத்தில் ரைடர்கள் எடுக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை, அது இல்லாமலும் காப்பீடு பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.
ஆயுள் காப்பீட்டு பாலிசியில் இறந்த பிறகே அவரது குடும்பத்தினர் கிளைம் செய்ய முடியும். ஆனால் ரைடர் பாலிசிகளை சேர்த்து எடுத்துக் கொண்டால், காப்பீடுதாரருக்கு ஏற்படும் உடல் நல பிரச்சினைகளுக்கும் க்ளைம் செய்ய முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.
ஏற்கெனவே காப்பீடு நிறுவனங் கள் பல கவர்ச்சியான திட்டங்களை வைத்திருந்தாலும் ரைடர் பாலிசி களையும் தெரிந்து கொண்டால் அதிக பலன் கிடைக்கும் என்பதுதான் ஆலோசகர்களின் கருத்து. காப்பீடு குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் நிலை இந்த ரைடர் பாலிசிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியதும் காப்பீடுதாரருக்கு நல்லது.
ரைடர்கள்
ஆயுள் காப்பீடு திட்டத்தோடு சேர்ந் திருக்கும் சில விருப்ப திட்டங்கள் என்று இதைக் குறிப்பிடலாம். இவற்றை வேண்டும் என்றால் ஆயுள் காப்பீடுடன் சேர்த்துக் கொள்ளலாம். விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடலாம். ஆனால் ரைடர்களை மட்டும் தனியாக வாங்க முடியாது. பாலிசியின் அடிப்படை யான மதிப்பைப் பொருத்து இதை எடுத் துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
வகைகள்
விபத்து காப்பீடு ரைடர், தீவிர நோய் பாதிப்பு ரைடர், டிஸ்எபிலிட்டி பெனிபிட் ரைடர் மற்றும் பிரீமியம் வெய்வர் ரைடர், சர்ஜிக்கல் கேர் ரைடர் உள்ளிட்ட பல ரைடர்கள் உள்ளன. இதில் முக்கியமான சில ரைடர்களைப் பார்க்கலாம்.
விபத்து காப்பீடு (Accidental Death)
காப்பீடு எடுத்துள்ளவர் ஏதாவது ஒரு விபத்தில் இறந்துவிட்டால் அவருடைய நாமினி இரண்டு மடங்கான தொகையை பெறுவதற்கு இந்த ரைடர் வழிவகுக்கிறது. எனவே காப்பீடு பிரீமியம் தொகை இல்லாமல், இந்த ரைடருக்கு என்று தனியாக ஒரு சிறிய தொகையைச் செலுத்தி வர வேண்டும். காப்பீடுதாரர் எதிர்பாராத விதமாக விபத்தில் மரணமடைந்தால் அவருக்கு பின் அவரது குடும்பம் இரண்டு மடங்கு காப்பீடு தொகையை பெறும். அதாவது ஏற்கெனவே வைத்துள்ள மெயின் பாலிசிக்கு கிடைக்கும் காப்பீடு தொகையின் அளவைப்போலவே இன்னொரு மடங்கு தொகை இந்த ரைடர் மூலம் பெறலாம். காப்பீடுதாரர் ஒருவேளை விபத்தில் அல்லாமல் இயற்கையாக மரணம் அடைந்தால் இந்த ரைடர் மூலம் இழப்பீடு தொகை கிடைக்காது.
தீவிர நோய் பாதிப்பு (Critical Illness)
சிகிச்சை எடுத்துக் கொள்ள அதிகம் செலவாகும் நோய்களுக்காக இந்த ரைடர் வழங்கப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படுகிற பட்சத்தில் அதற்கான மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர் இருந்தால் இந்த குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை செலவு களை காப்பீடு மூலம் நிவர்த்தி செய்யலாம்.
ஆனால் அனைத்து காப்பீடு நிறுவனங்களும் ஒரே மாதிரியாக இந்த ரைடரை வழங்குவதில்லை. எனவே இந்த ரைடரைத் தேர்வு செய்வதற்கு முன் எந்தெந்த நோய்களுக்கு கவரேஜ் கிடைக்கும் என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள்.
டிஸ்எபிலிட்டி பெனிபிட் (Disability Benefit)
தொடர்ந்து வருமானம் ஈட்டிவருபவர் சில காரணங்களால் வருமானம் ஈட்ட முடியாத நிலை ஏற்படும்போது இந்த டிஸ்எபிலிட்டி பெனிபிட் ரைடர் உதவுகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு இன்ஷுரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை அவருக்கு வழங்கும். குறிப்பாக அவர் பணம் ஈட்ட முடியாமல் இருக்கும் காலம் வரை இந்த தொகையை வழங்கும். விபத்து காரணமாக சம்பளம், வருமான இழப்பு ஏற்படும்போது அதை ஈடுசெய்ய உதவும். விபத்து ஏற்பட்டு உடல் சுகமாகும் வரை வேலை, தொழில் செய்ய முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் பாலிசிதாரர் ஈட்டும் வருமானத்தை இழப்பீடாக வழங்கும். நிரந்தர ஊனம் ஏற்பட்டு வருமானம் கிடைக்காமல் போகும் சூழலில்கூட ஓரளவுக்கு இந்த ரைடர் கைகொடுக்கும்.
பிரீமியம் வெய்வர் (Waiver of Premium)
காப்பீடு எடுத்துள்ளவருக்கு ஏதாவது நேர்ந்து, மீண்டும் வருமானம் ஈட்ட முடியாது என்கிறபட்சத்தில் அவர் பிரீமியம் தொகையைச் செலுத்துவதி லிருந்து விலக்கு அளிக்கும் ரைடர் இது. அதாவது பாலிசி காலாவதியாகாமல், ஆக்டிவ் நிலையிலேயே இருக்கும். குழந்தையின் பெயரில் ஒருவர் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கிறார். அப்போது இந்த ரைடரையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். அவருக்கு விபத்து நேர்ந்து தொடர்ந்து குழந்தைக்கான பாலிசி பிரீமியம் செலுத்தமுடியாத பட்சத்தில் இந்த ரைடர் அந்த பாலிசியை உயிர்ப்பாக வைத்திருக்கும். இதனால் குழந்தைக்குக் கிடைக்கவேண்டிய காப்பீடு பலன்கள் பெற்றோரின் வருமான இழப்பால் கைவிட்டுப் போகாது.
அறுவை சிகிச்சை உதவி ரைடர் (Surgical Care Rider)
மருத்துவ சிகிச்சைக்கான அனுமதிக் கபட்டவருக்கு எதிர்பாராத விதமாக அறுவை சிகிச்சையும் செய்யவேண்டும் என்ற நிலை நிலை வருகிறபோது இந்த ரைடர் உதவும்.காப்பீடுதாரரின் உடல்நிலைக்கு ஏற்ப நிபந்தனைகளுடன் இந்த ரைடர் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு மட்டுமே இது கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கள் அறுவை சிகிச்சை செய்தாலும், அதற்கான செலவுகளை இந்த ரைடர் ஈடு செய்யலாம். அதே சமயம் இந்த ரைடரின் கவரேஜ் தொகை பிரதான பாலிசியின் கவரேஜ் தொகையில் 50 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்.
காப்பீடு எடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விருப்பங்கள் இருக்கும். அந்த விருப்பங்களுடன் காப்பீட்டை எடுத்துக் கொள்ள இது போன்ற ரைடர்கள் உதவுகின்றன. நமது தேவைக்கு ஏற்ற திட்டங்கள் நமக்கும் நமக்குப் பிறகும் குடும்பத்தை காக்க உதவட்டும்.
ரைடர் பாலிசிகளை சேர்த்து எடுத்துக் கொண்டால், காப்பீடுதாரருக்கு ஏற்படும் உடல் நல பிரச்சினைகளுக்கும் க்ளைம் செய்ய முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago