ஒரு தொழிலை நசிய வைத்த பசு வதை தடை சட்டம்!

By செய்திப்பிரிவு

ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிற ஜிப்பா காலில் கோலாபுரி செருப்பு அணிந்திருந்தாலே உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் தானாக வந்துவிடும்.

ஜீன்ஸ் - டி-ஷர்ட் சேர்ந்த கலவை இளமையான தோற்றத்தை அளிக்கும் எனில், ஜீன்ஸ்- ஜிப்பாவுக்கு ஒரு கவுரவமான அந்தஸ்து மிக்க தோற்றத்தை கோலாபுரி கொடுக்கும். என்ன ``வணிக வீதி’’ - ஆடை, அணிகலன் இதழாக மாறிவிட்டதோ என்று குழம்ப வேண்டாம். ஜீன்ஸ், ஜிப்பாவுடன் சேர்ந்த கோலாபுரி (கோல்ஹாபுரி என்பதே சரி) செருப்புக்கு வந்துள்ள நெருக்கடியை விவரிக்கத்தான் இத்தனை முன்னோட்டம்.

13-ம் நூற்றாண்டிலிருந்தே கோலா புரி செருப்புகள் பிரபலம், கபாஷி, பேடான், கச்காடி, பக்கல்நாளி, புகாரி என்று இதற்கு பல பெயர்கள். இவை யனைத்தும் அந்தந்த கிராமங்களி லிருந்து தயாரிக்கப்படுபவை. பின் னாளில் இவை ஒருங்கிணைக்கப்பட்டு கோலாபுரி செருப்புகள் என பிரபல மானது. 1920களின் தொடக்கத்தில் சாது கர் என்ற வம்சத்தினர் இந்த செருப்புக் கான வடிவமைப்பை உருவாக்கினர். அழகிய மேல் வடிவமைப்போடு உருவாக்கிய இந்த செருப்புக்கு கன்வாலி என பெயரிட்டனர். பிரபல காலணி தயாரிப்பு நிறுவனமான ஜே ஜே அண்ட் சன்ஸ் நிறுவனம் இவற்றை மும்பையில் பிரபலப்படுத்தியது. அதி கரித்துவரும் தேவையால் இத்தகைய செருப்பு தயாரிக்கும் தொழிலை பிறருக்குக் கற்றுத் தந்து பிரபலப் படுத்தினர் சாதுகர் குடும்பத்தினர். கொல்கத்தாவிலிருந்து இத்தகைய செருப்புகளுக்கு அதிக எண்ணிக்கை யில் ஆர்டர் கிடைத்ததைத் தொடர்ந்து இவை மேலும் பிரபலமானது.

ஆனால் இப்போது மஹாராஷ்டிர மாநிலத்தில் மாட்டுக் கறிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோ சங்கர்ஷன் சட்டம், அமல்படுத்தப்பட்டதால் இந்த செருப்பு தயாரிப்புக்கு மூலப்பொருளான மாட்டுத் தோல் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக இத்தகைய செருப்புகளைத் தயாரித்து வந்தவர்கள் தங்களது இப்போது இந்தத் தொழிலை நிறுத்திவிட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர்.

``இத்தகைய தடைச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக மாநில அரசு தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை,’’ என்கிறார் கோலாபுரி செருப்புகள் தயாரிக்கும் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பவன் வசந்த் ராவ் பொவார். இதற்கு முன்பு மனோகர் ஜோஷி முதல்வராக இருந்தபோது இந்த சட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால் அது தோல்வியடைந்துவிட்டது. இத் தகைய சூழலில் இதை ஏன் அமல் படுத்தினார்கள் என்பது புரியவில்லை என்கிறார்.

கோலாபுரி செருப்புகளின் சிறப்பு அம்சமே இவற்றில் எவ்வித ரசாயன கலப்பும் கிடையாது. இயற்கை சாயங் கள் மற்றும் இயற்கை பதனீட்டு முறை களால் இவை தயாரிக்கப்படுவதோடு மட்டுமின்றி முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுபவையாகும்.

கோலாபுரி செருப்பு தயாரிப்பு மூலமான வருமானம் ரூ.25 கோடியி லிருந்து தற்போது ரூ.6 கோடியாக சரிந்துவிட்டது. இந்தத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள 6 ஆயிரம் பணி யாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி யாகிவிட்டது. இங்கிருந்து 20 நாடு களுக்கு ஏற்றுமதியான செருப்புகளும் இப்போது ஏற்றுமதியாகவில்லை.

விவசாயிகள் வேதனை

மாநிலத்தில் விதிக்கப்பட்ட தடை யால் தங்களால் வயதான மாடுகளைக் கூட விற்க முடியவில்லை. இவை இறைச்சிக்கு விற்கப்படவில்லை என் றாலும் அதை அதிகாரிகள் நம்பத் தயாராக இல்லை. மேலும் எருதுகளின் தோல்தான் செருப்பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒட்டு மொத்த தடையால் தங்களிடம் கூடுத லாக உள்ள மாடுகள், கன்றுகளை விற்க முடியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வறட்சி நிலவும் நிலையில் மாடுகளை விற்க முடியவில்லை. பாரமரிக்க போதிய வருமானமும் இல்லை என்கின்றனர் அங்குள்ள விவசாயிகள்.

ஒரு சதுர அடி மாட்டுத் தோலின் விலை ரூ.70 முதல் ரூ.80 வரை முன்னர் விற்பனையானது. இப்போது ஒரு சதுர அடி ரூ.250 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. இதனால் முன்பு ரூ. 150-க்கு விற்ற செருப்பு இப்போது ரூ. 330-க்கு விற்க வேண்டியுள்ளது.

தமிழகத்திலிருந்து மாட்டுத் தோல்களை வாங்கலாம் என்றாலும், அங்கும் தோல் தொழிற்சாலைகள் மாசு கட்டுப்பாட்டு பிரச்சினைகளால் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. மேலும் அங்கிருந்து தோலை வாங்கி கொண்டு வரும் போக்குவரத்து செலவும் அதிகமாக உள்ளதாக இங்குள்ள தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தரமான தோல் மற்றும் பாரம்பரிய வடிவமைப்பை கொண்ட செருப்புகளின் விலை ரூ.2,500 வரை விற்கப்படுகிறது.

அரசின் `மேக் இன் இந்தியா’ கோஷம் நவீன தொழில்நுட்பத் துறையை ஊக்குவிப்பதாக இருக்கலாம். ஆனால் ஒரு பாரம்பரியமிக்க தொழில் அவசர கதியிலான தடை விதிப்பு மூலம் நசிந்து போவதை ஏற்க முடியுமா?



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்