விளையாட்டல்ல! வியாபாரம்...

By செய்திப்பிரிவு

பணம், பிரபலங்கள், உலகத் தரம் வாய்ந்த வீரர்கள், சியர் கேர்ள்ஸ் ஆட்டம், மக்கள் கூட்டம் என ஒரு மாதம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிப்பது ஐபிஎல். 9 சீசன்களை கடந்து இன்னும் பிரம்மாண்டமாய் வளர்ந்து கொண்டிருக்கும் விளையாட்டு. வெறும் கொண்டாட்டமாய் மட்டும் தான் ஐபிஎல் கிரிக்கெட் இருக்கிறதா? இந்தியாவிலேயே அதிக பணம் விளையாட்டில் முதலீடு செய்யப்படுவது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும்தான் என்று சொல்கிறார்கள். இதனால் இந்தியாவிற்கு என்ன லாபம்? இதன் மூலம் இந்தியா வளர்ச்சி அடையுமா? அல்லது தொழிலதிபர்கள் மட்டும்தான் பயனடைவார்களா? ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் 3 மணி நேர திரில்லர் விளையாட்டின் பின்னணித் தகவல்கள் உங்களுக்காக….

2016 ஐபிஎல் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகை: 20 கோடி ரூபாய்.

இறுதிப் போட்டியில் தோல்வியுறும் அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.

ஐபிஎல் அணிகளின் மொத்த பிராண்ட் மதிப்பு (ரூபாய் / கோடியில்)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 573

ஐபிஎல் அணிகளின் மொத்த மதிப்பு 2,882

இந்தியன் பிரீமியர் லீக்கின் மொத்த பிராண்ட் மதிப்பு 23,622

மும்பை இந்தியன்ஸ் 480

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 273

டெல்லி டேர் டேவில்ஸ் 236

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 340

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் 233

2016 மற்றும் 2017-ம் ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் உரிமையை விவோ மொபைல் நிறுவனம் பெற்றுள்ளது. வருடத்திற்கு 100 கோடி ரூபாயை ஐபிஎல் நிர்வாகத்திற்கு உரிமத் தொகையாக செலுத்த இருக்கிறது.

2017- வரை ஐபிஎல் தொடரை ஒளிப்பரப்புவதற்கு சோனி மீடியா நிறுவனம் பிசிசிஐ நிறுவனத்துடன் 8,200 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

ஐபிஎல் நிர்வாகத்திற்கு நான்கு வழிகளில் வருமானம் வருகிறது.

ஒளிபரப்பு உரிமை

டிக்கெட் விற்பனை

பிரான்சைசிஸ் உரிமைக்கான ஏலம்

ஸ்பான்ஸர்ஷிப்

ஐபிஎல் நிர்வாகத்திற்கு 70% வருமானம் ஒளிப்பரப்பு உரிமை மற்றும் ஸ்பான்ஸர்ஷிப் உரிமை மூலமாக வருகிறது.

ஒரு மேட்சுக்கான டிக்கெட் விற்பனையில் 20% ஐபிஎல் நிர்வாகத்திற்கும், 80% ஐபிஎல் பிரான்சைசிஸ் மற்றும் ஸ்டேடியம் உரிமையாளருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இந்திய பொருளாதாரத்திலும் ஐபிஎல் முக்கிய பங்கு வகிக்கிறது.

2015-ம் ஆண்டு 60 நாட்கள் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 1,150 கோடி ரூபாய் இந்தியாவின் ஜிடிபியில் பங்கு அளித்துள்ளது. இதன் மூலம் தொழில்துறை வளர்ச்சியும் ஏற்படுகிறது.

ஐபில் கிரிக்கெட் தொடர் நடக்கும் நாட்களில் இந்தியாவின் சுற்றுலாத் துறை 25 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதன் காரணமாகத்தான் வெளிநாடுகளில் ஐபிஎல் தொடரை நடத்தவேண்டாம் என்று குரல்களும் எழுகின்றன.

அதிக ஏலத்தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் யுவராஜ் சிங். 2015-ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக யுவராஜ் சிங் - 16 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

2016 ஐபிஎல் தொடரில் அதிகமாக சம்பளம் வழங்கப்படும் வீரர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி. இவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

ரைசிங் புணே சூப்பர்ஜயண்ட்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 12.5 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.

ஒரு ஐபிஎல் கிரிக்கெட்மேட்ச் நடத்துவதற்கு சராசரியாக 25 லட்ச ரூபாய் செலவழிக்கப்படுகிறது.

கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்