வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள புணேயைச் சேர்ந்த ஃபோர்ஸ் நிறுவனம் விபத்து காலத்தில் உதவும் மீட்பு வாகனத்தை வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான டிராவலர் ரக வேன்களில் இத்தகைய விபத்துக்கால மீட்பு வசதிகளை உரு வாக்கியுள்ளது. டெல்லியில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போ கண் காட்சியில் பெரும்பாலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வாகனமாக இது இருந்தது.
மொத்தம் ஐந்து ரகங்களில் இந்த வாகனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அள விலான விபத்து மீட்பு வாகனமாக இவை உருவாக்கப்பட உள்ளன.
உலோகங்களை அறுத்தெடுக்கும் கட்டிங் மெஷின், தொடர் மின் சப் ளைக்கு உதவும் ஜெனரேட்டர், கம்ப்ர ஸர் மற்றும் தீயணைப்புக்கு உதவும் நுரை திரவம் உள்ளிட்டவை இந்த வாகனங்களில் இடம்பெறுகிறது.
இந்தியாவில் பெரும்பாலான பகுதி களில் தீயணைப்பு லாரிகள் செல்ல முடியாத அளவுக்கு குறுகலான தெருக் கள் உள்ளன. அத்கைய பகுதிகளில் பயன்படுத்துவதற்கு இது உதவியாக இருக்கும். அத்தோடு விபத்து மீட்பு கருவிகளும் இதில் உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.
மேலும் வாகன நெரிசல் அதிகமிருப்ப தால் தீயணைப்பு வாகனங்களால் உரிய நேரத்தில் தீ சூழ்ந்த இடத்துக்குச் செல்ல முடிவதில்லை. அதுபோன்ற சமயங்களில் இதுபோன்ற வெவ்வேறு அளவில் உள்ள வாகனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு உடனடியாக சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும் வாகனங்களை மத்திய அரசு எதிர்நோக்கியுள்ளது. அதற்குரிய வாகன வடிவமைப்பில் தங்கள் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரசான் ஏ ஃபிரோடியா, ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத் தப்பட்டுள்ள வாகனத்தில் மேலும் சில மாறுதல்கள் செய்யப்பட உள்ளன என்றார்.
அத்துடன் தண்ணீரில் சிக்கியவர் களை மீட்க ரப்பர் படகு போன்ற வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும். அதற்குரிய இடவசதி உள்ளிட்டவையும் ஆராயப்பட்டு வருவதாகக் கூறினார்.
ஐந்து மாடல்களில் அடுத்த ஆண்டு முதல் வர்த்தக ரீதியில் இந்த வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ள தாகக் குறிப்பிட்ட அவர், இதில் உள்ள கருவிகளின் விலை அடிப்படையில் ரூ. 20 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை விலை இருக்கும் என்றார். பொதுப் போக்குவரத்து, சரக்குப் போக்கு வரத்துக்கு வாகனங்கள் தயாரிப்பது ஒருபுறம் இருந்தாலும். அவசர கால தேவைக்கான ஆம்பு லன்ஸ் வசதி தவிர இதுபோன்ற பேரிடர் மீட்பு வாகனங்களும் தேவையாகத் தானிருக்கிறது.
வர்த்தக ரீதியிலான வாகனங்கள் தவிர்த்து தேவையின் பொருட்டு வாக னங்களை தயாரிக்கும் ஃபோர்சின் தயாரிப்புகளுக்கு சிறந்த வரவேற் பிருக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago