வழிகாட்டுகிறது `திஷா’

By செய்திப்பிரிவு

மாம்பழம் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது பங்கனபள்ளி மாம்பழம்தான். இருந்தாலும் சேலத்து மாம்பழத்துக்கென்று தனி சுவை உள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதியாவது அல்போன்சா மாம்பழங்கள்தான். அடுத்த இடத்திலிருப்பது குஜராத் மாநிலத்தில் விளையும் கேசர் ரக மாம்பழங்கள்.

கோடைக்காலத்தில்தான் மாம்பழ சீசன் தொடங்கும், இப்போது மாம்பழம் பற்றிய பேச்சு எதற்கு என்று தோன்றும். ஆனால் குஜராத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒருங்கிணைந்து மாம்பழ சாகுபடி மூலம் லாபம் காண்கின்றனர்.

அமுல் நிறுவனத் தயாரிப்புகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலம். கூட்டுறவு அமைப்பின் வெற்றிக்கு மிகச் சிறந்த சான்றாக இன்றளவும் திகழ்ந்து கொண்டிருப்பது அமுல்தான். குஜராத் மாநிலத்தில் உருவான கூட்டுறவு அமைப்பு இன்று நாடு கடந்து பால் பொருள் விற்பனையில் கோலோச்சி வருகிறது.

இதே பாணியில் கூட்டுறவு அமைப்பாக செயல்படத் தொடங்கியுள்ளனர் குஜராத் மாநில மாம்பழ சாகுபடி விவசாயிகள். ஸ்திரமான வளர்ச்சிக்கு பிரத்யேக முயற்சி மற்றும் விவசாயத்தை புனிதமாக அணுகுதல் என்ற கூட்டுறவு அமைப்பை (Dedicated Initiative for Sustainable and Holistic Agriculture) உருவாக்கியுள்ளனர். திஷா என்றழைக்கப்படும் இந்த கூட்டுறவு அமைப்பு மாம்பழ சாகுபடியை ஊக்குவிப்பதோடு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வழி வகுத்துள்ளது.

மாம்பழ சாகுபடி லாபகரமானதாக இல்லாததால் குஜராத் மாநிலத்தில் உள்ள சுக்பூர் கிராம விவசாயிகள் மரங்களை வெட்டிவிட்டு அதில் கோதுமை சாகுபடியில் இறங்கிவிட்டனர். ஊடுபயிராக பட்டாணி சாகுபடியும் லாபகரமானதாக அமைய இதேவழியை பல விவசாயிகள் தொடர ஆரம்பித்தனர்.

மாம்பழ விளைச்சல் குறைந்து வருவதோடு, இருக்கும் விவசாயிகளும் மாம்பழ சாகுபடியை கைவிட்டு வேறு பயிர் சாகுபடிக்கு மாறிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் திஷா.

முன்பு 20 கிலோ மாம்பழம் விற்றால் அதிகபட்சம் ரூ.250 மட்டுமே கிடைத்தது. ஆனால் திஷாவின் வருகைக்குப் பிறகு 20 கிலோ மாம்பழத்துக்கு அதிகபட்சம் ரூ. 450 கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 800 விவசாயிகள் முகத்தில் இப்போது மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.

பால் உற்பத்தியில் வெண்மை புரட்சியை ஏற்படுத்திய குஜராத் மாநிலம் இப்போது மாம்பழ உற்பத்தியில் சாதனை புரியத் தொடங்கியுள்ளது. அதற்கு அச்சாரமிட்டுள்ளது திஷா. இந்த அமைப்பை உருவாக்கியவர் இங்குள்ள தன்னார்வ அமைப்பாளரான ராஜு தீப்தி.

இது விவசாயிகளை உள்ளடக்கிய அனைவருக்கும் சொந்தம் உள்ள கூட்டுறவு அமைப்பாகும். இதனால் குஜராத் மாநிலத்தில் கட்ச், அம்ரேலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் இதில் இணைந்து லாபமடையத் தொடங்கியுள்ளனர்.

கடந்த சீசனில் 130 டன் மாம்பழங்கள் இந்த திஷா அமைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டு உரிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் இந்த அமைப்பில் இணைந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால் சாகுபடி அளவு 500 ஆயிரம் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒமாங் மற்றும் சாங் என்ற இரண்டு பிராண்டு பெயர்களில் மாம்பழங்களை இந்த அமைப்பு உள்ளூர் சந்தை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறது. புணேயைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்துடன் இந்த அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அமைப்பு mangowale.com என்ற இணையதளம் மூலம் மாம்பழ விற்பனை செய்கிறது.

தமிழகத்தில் மிகவும் கவலைக்குரிய நிலையில் கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. ஆனால் குஜராத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும் அமைப்பாக கூட்டுறவு அமைப்புகள் உருவெடுக்கின்றன. எங்கே தவறு? உரியவர்கள்தான் ஆராய வேண்டும்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்