டிப்ஸ்: ஆல்டர்நேட்டர் சர்வீஸ் செய்வதன் அவசியம் என்ன?

By செய்திப்பிரிவு

நாம் பயன்படுத்தும் காரில் உள்ள அனைத்து மின்சார மற்றும் மின்னணு சாதனங்கள் வேலை செய்யத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பாகமாக ஆல்ட்டர்நேட்டர் விளங்குகிறது.

சமீபத்தில் பெய்த மழையில் சில கார்கள் தண்ணீரில் மூழ்கி காரின் அனைத்து பாகங்களும் நனைந்திருக்கும். அதில் ஆல்ட்டர்நேட்டரும் இருக்கும். சிலரது காரில் தண்ணீர் வடிந்த பின் ஸ்டார்ட் செய்து இருப்பார்கள் காரும் ஸ்டார்ட் ஆகி சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்.

இன்ஜின் நன்றாக ஸ்டார்ட் ஆன காரிலும் சில நாட்கள் கழித்து பிரச்சினைகள் வரலாம். அதில் முக்கியமாக ஆல்ட்டர்நேட்டரில் பிரச்சினை வந்தால் மின்சாரம் உற்பத்தி செய்வது முற்றிலும் தடைபடும். அவ்வாறு தடைபடும் போது காரில் உள்ள மின்சார, மின்னணு சாதனங்கள் வேலை செய்யத் தேவையான மின்சாரம் கிடைக்காமல் கார் மீண்டும் பழுதாகி நிற்க வாய்ப்புகள் உள்ளன.

சில கார்களில் ஆல்ட்டர்நேட்டர் வேலை செய்யும். ஆனால் அதிக அளவு மின்சாரம் உற்பத்தியாகும் (அதாவது 14 வோல்டுக்கு மேல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்) அப்படி அதிக மின்சாரம் உற்பத்தியாகும் காரில் உள்ள மின் சாதனங்கள் வெடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மற்றும் வயர்கள் அதிக வெப்பமடைந்து உருகி விடவும் வாய்ப்புகள் உள்ளன.

ஆல்ட்டர்நேட்டர் சரியாக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால் பொதுவாக நாம் காரின் இன்ஜினை ஸ்டார்ட் செய்த பிறகு கிளஸ்டரில் உள்ள அனைத்து எச்சரிக்கை அறிகுறிகளும் (Warning symbol) அணைந்து விடும். ஆனல் ஆல்ட்டர்நேட்டர் வேலை செய்யவில்லை என்றால் கிளஸ்டரில் பேட்டரி எச்சரிக்கை விளக்கு மட்டும் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும். அப்படி எரிந்தாலே ஆல்ட்டர்நேட்டர் வேலை செய்யவில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆல்ட்டர் நேட்டரில் அதிக மின்சாரம் உற்பத்தியாகிறது என்றாலே அடிக்கடி பியூஸ் போகும். காரின் முகப்பு விளக்கை போடும்போது அதிக ஒளியுடன் பிரகாசிக்கும். பல்பு அடிக்கடி பியூஸ் போகும். இவையெல்லாம் ஆல்ட்டர்நேட்டர் சரிவர வேலை செய்யவில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும்.

மழை தண்ணீரில் மூழ்கிய கார்களில் தவறாமல் ஆல்ட்டர்நேட்டரை சர்வீஸ் செய்து பின்பு காரை இயக்குவது நல்லது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் மேற்கண்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

தகவல் உதவி

கே.ஸ்ரீனிவாசன், உதவி துணைத் தலைவர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்