பிஸினஸ் குரு

By செய்திப்பிரிவு

அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு நச்சு பொருள் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் மாகி நூடுல்ஸ் தடைசெய்யப்பட்டது. இதனால் நூடுல்ஸ் சந்தையில் கிடைத்த வாய்ப்பை மற்ற எப்.எம்.சி.ஜி. நிறுவனங்கள் பயன்படுத்தியதை விட யோகி பாபா ராம்தேவ் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். தன்னுடைய ஆயூர்வேத நிறுவனமான பதஞ்சலி மூலம் நூடுல்ஸை சந்தைப்படுத்தி இருக்கிறார்.

நூடுல்ஸ் அறிமுகம் ஆகும் போதுதான் இப்படி ஒரு நிறுவனம் இருப்பதே நம்மில் பலருக்கும் தெரிய வந்தது. ஆனால் இவரது பதஞ்சலி நிறுவனம் 2005-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூளையாக இருப்பவர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா.

கடந்த நிதி ஆண்டில் 2,000 கோடி ரூபாயாக நிறுவனத்தின் வருமானம் (இதில் நெய் வியாபாரம் மட்டுமே 400 கோடி ரூபாய்) இருந்தது. இந்த நிதி ஆண்டில் 150 சதவீதம் உயர்ந்து 5,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று ராம்தேவ் கூறியிருக்கிறார். பன்னாட்டு நிறுவனங்களை போல நாங்கள் இலக்கு வைத்து செயல்படவில்லை என்றாலும் இன்னும் 3 வருடங்களில் எங்களது வருமானம் 10,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். இவரது குழுமத்தில் 15,000 நபர்கள் பணிபுரிகிறார்கள்.

இவரது நிறுவனம் ஒரு மணி நேரத்துக்கு 6000 லிட்டர் நெல்லிக்காய் சாறு தயாரிக்கிறது. தவிர கற்றாழை சாறு, நெய், தேன், அழகு சாதன பொருட்கள், பிஸ்கட், கார்ன்பிளக்ஸ் உள்ளிட்ட பலவற்றையும் தயாரிக்கிறது. திவ்யா பார்மஸி என்னும் நிறுவனம் மூலம் 600க்கும் மேற்பட்ட மருந்துகளை தயாரிக்கிறது. விரிவாக்க பணிகளுக்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அழகு சாதன பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், உணவுப்பொருட்கள், டெக்ஸ்டைல் என அனைத்து பிரிவு களிலும் தடம் பதிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஆச்சார்யா பால்கிருஷ்ணா தெரிவித்தார்.

விலை குறைவு

முதலீடு குறித்த கேள்விக்கு வங்கிக் கடன் மூலமே அனைத்து பணிகளையும் செய்கிறோம் என்று கூறும் ராம் தேவ்க்கு பதஞ்சலி நிறுவனத்தில் அவருக்கு எந்தவிதமான பங்கும் இல்லை. பால்கிருஷ்ணா வசம் இந்த நிறுவனத்தின் 90 சதவீத பங்குகள் உள்ளன. பெரும்பாலான எப்.எப்.சி.ஜி நிறுவனங்கள் ஐஐஎம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து முக்கிய பணியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் பதஞ்சலியில் தங்களுடைய நெட்வொர்க்கில் இதே பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

அதேபோல இவர்களுடைய தயாரிப்புகள் போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளை விட விலை குறைவு. இதற்கு இவர்கள் சொல்லும் காரணங் கள் பல. மற்ற எப்.எம்.சி.ஜி நிறுவனங் களின் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் சம்பளம் தரப்படுகிறது. ஆனால் எங்களுடைய உயரதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை.

இரண்டாவதாக மூலப்பொருட்கள் வாங்கும் போது கமிஷன், போன்ற எதுவும் கிடையாது. மற்ற நிறுவனங்கள் வாங்கும் மூலப்பொருட் களை விட நாங்கள் 5 சதவீதம் குறைவாகவே செலவழிக்கிறோம். தவிர எங்களுடைய லாப வரம்பு குறைவு, விளம்பரங்களுக்கு செய்யும் செலவு குறைவு ஆகிய காரணங்களால் மற்ற நிறுவனங்களை விட விலை குறைவாக கொடுக்க முடிகிறது என்று பாபா ராம்தேவ் தெரிவிக்கிறார்.

இ-காமர்ஸ்

இப்போதைக்கு இந்திய எப்.எம்.சி.ஜி சந்தையின் மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 15,000 கடைகளில் பதஞ்சலி பொருட்கள் கிடைக்கின்றன. தவிர பதஞ்சலி பொருட்களை விற்பதற்கென பிரத்யேக ஷோரும்களை திறக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தவிர பெரிய ரீடெய்ல் நிறுவனங்களான பிக்பஜார், ரிலையன்ஸ் பிரஷ் உள்ளிட்டவற்றில் இந்த நிறுவனத்தின் பொருட்கள் கிடைக்கின்றன. விரைவில், தென் இந்திய சந்தையை பிடிக்க, ஆந்திராவில் தொழிற்சாலை, வெளிநாடுகளில் வசிக் கும் இந்தியர்களுக்காக ஏற்றுமதி, இ-காமர்ஸ் உள்ளிட்டவற்றையும் நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.

பாபாவிடமிருந்து யோகா மட்டுமல் லாமல் தொழில்முனைவையும் கற்றுக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்