தாக்குதலில் பல வகை. நேரடியாகத் தாக்குவது, மறைந்திருந்து கொரில்லா முறையில் தாக்குதல் நடத்துவது, ஆளில்லா விமானம் மூலம் தாக்குவது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் தாக்குபவர் யார் என்ற விவரமே தெரியாமல் பல கோடி சொத்துகளை இழக்கும் அவலம் கம்ப்யூட்டர் உலகில்தான் சாத்தியம். சைபர் அட்டாக், அதாவது இணையத்தின் மூலம் உலகின் ஒரு மூலையிலிருந்து பல பகுதிகளில் செயல்படும் கம்ப்யூட்டர்களை செயலிழக்கச் செய்ய முடியும். இத்தகைய தாக்குதலால் ஆண்டுதோறும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல கோடிகளை இழக்கின்றன.
இந்தியாவில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 72 சதவீத நிறுவனங்கள் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளானதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வங்கித் துறை, நிதி நிறுவனங்கள், உற்பத்தித் துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கட்டமைப்புத் துறை, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத் தையும் சேர்ந்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக் கேற்ப அதற்கு இணையாக இத்தகைய தாக்குதல் நடத்தும் விஷமிகளும் தங்களது தொழில்நுட்பத் திறனை வளர்த்துக் கொண்டு வருகின்றனர். சைபர் குற்றங்கள், தாக்குதல் நடவடிக் கைகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதற்கு இதுதான் காரணமாகும்.
இந்த ஆண்டு 2 சதவீத தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தகைய தாக்குதலை சமாளிக்க தங்கள் ஆண்டு பட்ஜெட்டில் 20 சதவீத அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
2015-ம் ஆண்டில் சைபர் குற்றங் களின் எண்ணிக்கை முந்தைய ஆண் டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. இத்தகைய சைபர் குற்றங்களில் பிரதான மானது பணத்துக்காக நடப்பதாகும்.
பெரும்பாலான நிறுவனங்களுக்கு சைபர் அட்டாக் என்பது மிகவும் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. இதை 94 சதவீத உயர் அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். இத்தகைய தாக்குதல் குறித்து இயக்குநர் குழுவில் பிரதானமாக விவாதிப்பது மட்டுமின்றி அதற்கு நிதி ஒதுக்கி சமாளிப்பதாக 41 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
மிக எளிதாக முறையற்ற வகையில் பணம் சம்பாதிக்க இது மிகச் சிறந்த வழி என்பதால் பெரும்பாலான சைபர் குற்றவாளிகள் மேம்பட்ட தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்தி இதுபோன்ற தாக்குதலை நடத்துவது தெரியவந்ததாக ஆய்வை நடத்திய கேபிஎம்ஜி நிறுவனத்தின் தலைவர் மொகித் பாஹ்ல் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்கள் எங்கிருந்து நடத்தப்படு கின்றன, யார் இதற்கு முக்கியப் பொறுப்பாளி என்பதைக் கண்டு பிடிப்பது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது. இதனாலேயே நிறுவனங்கள் இதுபோன்ற தாக்குதலை சமாளிக்கும் வகையில் தங்களது தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் நிதி சார்ந்த நிறுவ னங்களும், பார்மா துறை நிறுவனங் களும்தான் அதிக அளவிலான சைபர் தாக்குதலுக்கு ஆளாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
72 சதவீதம் நிதி சார்ந்த நிறுவனங் கள் 44 சதவீதம் பார்மா துறை நிறு வனங்கள் மற்றும் ரசாயனம் சார்ந்த நிறுவனங்கள் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட நிறுவனங்கள் 37 சதவீத அளவுக்கு இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளானது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இத்தகைய தாக்குதலால் தங்களது நிறுவனத்தின் மீதான நம்பகத் தன்மை, வழக்கமான செயல்பாடு மற்றும் ஊழி யர்களின் நலன் ஆகியன பாதிக்கப் பட்டதாக பல நிறுவனங்கள் தெரிவித் துள்ளன.
தங்களது அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டதோடு, இதுவரை தங்கள் நிறு வனம் சம்பாதித்த நற்பெயர் சிதைந்து போனதாக 49 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இணைய தளம் சார்ந்த குற்றங்கள் பல மடங்கு அதிகரித்து வருகின்றன. இது இந்தியாவின் ஒரு பகுதி அல்லது ஒரு மாநிலம் என்றில்லாமல் அனைத்து பகுதிகளிலும் வியாபித்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி தங்களது தொழில் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் என்று நிறுவனங்கள் நினைத்து புதிய தொழில்நுட்பத்தை பின்பற்றும் அதேநேரத்தில் இதனால் எத்தகைய கண்ணுக்குத் தெரியாத தாக்குதலுக்கு ஆளாவோமோ என அச்சமும் நிறுவனங்களைத் தொற்றிக் கொண்டுள்ளது.
இணையதளம் மூலம் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாவதாக 65 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நுகர்வோர் பயன்பாடு காரணமாக தாக்குதலுக்கு உள்ளாவதாக 46 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகரித்து வந்தாலும் இதுபோன்ற தாக்குதலை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 2 சதவீத நிறுவனங்கள்தான் எடுத்துள்ளன.
விஷமிகளால் விளையும் தாக்கு தலை சமாளித்துத்தான் வளர்ச்சியை எட்ட வேண்டும். இதுதான் தகவல் தொழில்நுட்ப உலகின் இப்போதைய சித்தாந்தம். வலிமை உள்ளது எஞ்சும் என்பது முதுமொழி. வைரஸ் தாக்குதலை தாக்குபிடிப்பதே எஞ்சும் என்பதே கம்ப்யூட்டர் மொழி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago