‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற குறிக்கோளை அமல் படுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியிருக் கிறது மத்திய ‘நிதி ஆயோக்’. எல்லா விதமான தொழில்துறை உற்பத்தி யிலும் முன்னிலை வகிக்கவும் குறைந்த ஊதியம் காரணமாக ஆசியாவில் தனக்கு போட்டியாக விளங்கக்கூடிய வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளைவிடத் தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்ளவும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் நீண்டகாலத்துக்குத் தொடர்ச்சியாக வளர்ச்சியைத் தொடரவும் உத்திகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
தொழில் உற்பத்தியில் இப்போது பயன்படுத்தி வரும் நுட்பங்களை மேம்படுத்துவது, புத்தம் புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ள நவீன தொழில்நுட்பங்களை அப்படியே கையாள்வது, இந்தியத் தேவைக ளுக்கு ஏற்ற நுட்பங்களைக் கண்டு பிடிப்பது என்பது இதில் அடங்கும்.
அதிக உற்பத்தி
குறைந்த செலவில் அதிக உற்பத்தியை மேற்கொள்வது, அதே நேரத்தில் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து நேராமல் தடுப்பது, மூலப்பொருள்களும் துணைப் பொருள்களும் வீணாவதைத் தடுப்பது இதன் குறிக்கோள்களாகும். பசுமை உற்பத்தி, டிஜிட்டல் உற்பத்தி, அடிட்டிவ் உற்பத்தி என்று உற்பத்தியை 3 விதங்களாகப் பிரித்து நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த நிதியாண்டு முதல் இவை அமலுக்கு வரப்போகின்றன.
பசுமை உற்பத்தி என்பது மின்சார உற்பத்தியைச் சூரியஒளி, காற்று, கடல்அலை போன்ற இயற்கை ஆதாரங்களிலிருந்து மேற்கொள்வது. நிலம், நீர், காற்று என்ற மூன்றிலும் நச்சுகள் கலக்காமலிருக்க உதவும் தொழில்நுட்பங்கள் தேர்வு செய் யப்படும். பயன்பாட்டுக்குப் பிறகு தூக்கி எறியப்படும் பொருள்களை மறு சுழற்சி மூலம் மீண்டும் புதுப் பொருளாக்கும் தொழில்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும். இப்படியே தொடர்ந்தால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உற்பத்திச் செலவு குறையத் தொடங்கும்.
டிஜிட்டல் நுட்பம்
டிஜிட்டல் உற்பத்தி என்பது கணினித் தொழில்நுட்ப உதவியோடு, தயாரிக்க வேண்டிய பொருளையும் தயாரிப்பு முறையையும் முப்பரிமாண வடிவத்தில் திரையில் தயாரித்து பொருள்களை உற்பத்தி செய்வதாகும். அடிட்டிவ் உற்பத்தி என்பதும் கணினி உதவியுடன் உற்பத்தியை அடுக்கடுக்காக உற்பத்தி செய்யும் முறையாகும். இதை மூன்றாவது தொழில்புரட்சியின் ஆரம்பம் எனலாம் என்கின்றனர்.
ஒரு பொருளை வடிவமைப்பது, ஆய்வு செய்வது, பொருள் தயாரிப்பைத் திட்டமிடுவது, தயாரிப்புக்கான கொள்முதல்களை மேற்கொள்வது, செலவுக் கணக்குகளைப் பரா மரிப்பது, தயாரிப்புக்கான மூலம் மற்றும் துணைப் பொருள்களை தேவையான அளவுக்கு மட்டும் வாங்கி வைத்துப் பயன்படுத்துவது, தயாரித்த பொருள்களை கணினி உதவியுடன் விநியோகிப்பது என்ற எல்லாமே சேர்ந்ததுதான் அடிட்டிவ் உற்பத்தி முறை.
பாரம்பரியமான உற்பத்தி முறை களைக் கைவிட்டு அறிவியல் பூர்வமான நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்திச் செலவு குறையும், மூலப்பொருள்களின் தேவையளவு குறையும், உற்பத்தி நேரம் மிச்ச மாகும், குறைந்த செலவில் பொருள் களைச் சர்வதேச தரத்தில் தயாரிக்க முடியும்.
இந்தியாவில் தயாரிப்போம் என்று பிரதமர் மோடி அறிவித்தபோது, “இதில் என்ன புதுமை ஏற்கெனவே தயாரித்துக் கொண்டுதானே இருக்கிறோம்?” என்று பலர் சூள் கொட்டினர். இன்னும் சிலரோ அவருடைய திட்டம் ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்று கேலி பேசினர். மக்களை மயக்கும் அரசியல் வியாபாரம் இது என்று சிலர் சாடினர். விருப்பு வெறுப்பு இல்லாமல் இதை அலசியவர்கள் மிகச் சிலரே.
வேலை வாய்ப்பு
தொழில்துறையின் உற்பத்தி மூலம் ஜி.டி.பி.யை அதிகப்படுத்த இந்தத் திட்டம். உலக அளவில் இல்லாமல் போனாலும் ஆசிய அளவில் உற்பத்திக் கேந்திரமாக இந்தியாவை மாற்றுவதற்கான முயற்சி இது. 2010 முதல் 2040 வரையில் வேலைசெய்யும் பருவத்தில் சேரும் 30 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கு வதற்கான முயற்சி இது. ஆண்டு தோறும் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் விவசாயம், தொழில், சேவை ஆகிய 3 துறைகளிலும் ஏற்பட இது உதவும்.
உலக அளவில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 7-வது இடத்தில் இருந்தாலும் அதிக மக்கள் தொகை காரணமாக நபர்வாரி மதிப்பில் 131-வது இடத்தில் இருக்கிறோம். வேலைவாய்ப்பு பெருகினால் வாங்கும் சக்தி அதிகரிக்கும். வறுமை குறையும். பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும். எல்லா நிறுவனங் களுக்கும் நுகர்வோர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வரும். வெளி நாடுகளுக்கு வேலைதேடிச் செல்வோர் எண்ணிக்கை குறையும். ஏற்றுமதி பெருகினால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறையும். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும்.
அந்நிய முதலீடு வரும்போது நவீனத் தொழில்நுட்பங்களும் கிடைக் கும். முதலீடு பெருக வேண்டும் என்பதற்காக தொழில் தொடங் குவதற்கான நடைமுறைகள் எளிமைப் படுத்தப்படுவது வெளிநாட்டு தொழில் முனைவோருக்கு மட்டுமல்ல இந்தியர்களுக்கும் எளிதாக அமை யும்.
முக்கியத்துவம்
தொழில் அதிபர்களைச் சமூக விரோதிகளாகவே பாவிக்கும் கருத்து பரவி வருகிறது. இது நாள் வரையில் மத்தியில் ஆளுங் கட்சியாக இருந்தவர்கள் கூட மோடி அரசை விமர்சிப்பதற்கு, ‘இது தொழிலதிபர்களின் அரசு, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் விசுவாச அரசு’ என்று சாடுகின்றனர். ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் சேர்ந்துகொண்டு சிவப்பு நாடா முறையாலும் ஊழல் அணுகுமுறையாலும் தொழில் முனைவோர்களை அலைக்கழிப்பதே வழக்கமாக இருந்து வருகிறது. இதையெல்லாம் மாற்றத்தான் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு அரசு முக்கியத்துவம் தருகிறது.
விவசாயத்துறையை நம்பி யிருக்கும் 70% மக்களில் கணிசமா னவர்கள் அந்தத் துறையைவிட்டு வெளியே வந்தால்தான் நாட்டின் மொத்த வருமானமும் அதிகரிக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு கிட்டும். சேவைத்துறையில் புதியவர்கள் சேரச்சேர அது எல்லா வகையிலும் விரிவடையும். கிராமங்களில் நகர்ப்புறங்களின் வசதிகள் ஒவ்வொன்றாகக் கிடைக்கவும் விவசாயம் சார்ந்த தொழில்பிரிவுகள் பெருகவும் இது ஊக்குவிப்பாக இருக்கும்.
இந்தியாவில் இப்போது மட்டும் 80 கோடிப் பேர் 35 வயதுக்கும் குறைவானவர்களாக இருக்கின்றனர். ஆனால் இவர்களில் முறையான தொழில்பயிற்சி பெற்றவர்கள் எண்ணிக்கை வெறும் 12% தான். தொழில்வள நாடுகளில் இந்த எண்ணிக்கை 80% முதல் 90% வரை இருக்கிறது.
இந்தியாவில் ஆங்கில மொழியின் பயன்பாட்டுத் திறமை உள்ளவர்கள் அதிகம். எனவே பல்வேறு நாடுகளுக்கு அயல்பணி ஒப்படைப்பு முறையில் வேலைகளைச் செய்து தருகின்றனர். தகவல் தொழில்நுட்பம், கணினித் துறையில் நாம் முன்னேறுவதற்கு இது உதவியாக இருக்கிறது. உலக அளவில் பொருளாதார மந்தநிலை இன்னமும் நீங்கவில்லை. அமெரிக்கா, சீனா இரண்டுமே வளர்ச்சி வேகத்தைத் தொடர முடியாமல் திணறுகின்றன.
அமெரிக்காவில் இப்போதுதான் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. தொழில்துறை உற்பத் தியும் நிலையாகி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஓரிரண்டைத் தவிர மற்றவை பொருளாதார சிக்கன நடவடிக்கைகளால் முடங்கி யிருக்கின்றன.
இந்நிலையில் இந்தியாவின் நிலைமை எவ்வளவோ மேல். இந்தியாவில் தயாரிப்போம் என்பது மட்டுமல்ல, இந்தியாவிலேயே நுகர்வோம் என்ற வகையில் நம்முடைய செயல்கள் அமைவது பொருளாதார வளர்ச்சிக்கு இப்போ தைக்கு வழிவகுக்கும்.
- rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago