‘இந்தியனாக இருப்போம், இந்தி யாவில் தயாராவதையே வாங்குவோம்’ என்றார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இவ்விருவரின் கோஷங்களும் இந்தியத் தொழில்துறையின் வளர்ச் சிக்கானவை. இந்தியத் தொழில்துறை வளர்ந்தால் உற்பத்தி பெருகும். உற்பத்தி பெருகினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். வேலைவாய்ப்புடன் ஏற்றுமதியும் பெருகும். ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாக அதிகரிக்கும். இதனால் இந்திய ரூபாயின் மதிப்பும் நிலைப்பட்டு உயரும்.
தொழில்துறையின் வளர்ச்சி என்பது அத்துறைக்கு மட்டும் பயன் தருவதல்ல. தொழில்துறை வளர்ந்தால் விவசாயத்துறையும் சேவைத்துறையும் வளரும். உருக்கு, சிமென்ட், ரசாயனம், ஆடைகள், மென் பானங்கள், நொறுக்குத் தீனிகள், ஊட்டச்சத்து மாவுகள், சத்து பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன் போன்ற அனைத்தும் தொழில்துறைகள் வாயிலாகவே மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாகத் தயாரிக்கப்பட்டு உள்நாட்டுச் சந்தையில் விற்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய் யப்படுகின்றன.
இந்தியாவைப் பொருத்தவரையில் தொழில்துறை வளர்ச்சி என்பது திருப்திகரமாகவும் போதுமான அளவிலும் இல்லை. இதற்கு முதல் காரணம் அரசுத் துறையில் நிறைய நிறுவனங்களைத் தொடங்கி நடத்த நிதியும், நிர்வாகத்திறமையும், அர்ப்பணிப்பு உணர்வும் போத வில்லை. தனியார் துறையில் ஒரு சில தொழில் முனைவோரைத் தவிர பெரும்பாலானவர்கள் தொலை நோக்கோடு சிந்தித்துத் தொழிலை வளர்க்க முடியாமல், அப்போதைய லாபத்தை மட்டும் கருதி தொழில் செய்கின்றனர். இதனால் அவர் கள் வளர்ச்சி, ஆராய்ச்சி ஆகிய வற்றுக்கென்று தனியாக நிதி ஒதுக் குவதில்லை.
இந்தியாவில் உள்ள தொழில் துறை தொடர்பான ஆராய்ச்சிக் கூடங்கள் பெரும்பாலும் அரசுத் துறை நிறுவனங்களிலும் ராணுவத் துக்காகவுமே நிறுவப்பட்டன. கடல்வள ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி, மருந்து மாத்திரைகள் தயாரிப் புக்கான ஆராய்ச்சி ஆகிய துறைகள் துடிப்பாகச் செயல்படுகின்றன. தனியார் துறையினர் உற்பத்தி, விற்பனை, லாபம், தொழில் பிரிவுகளின் விரிவாக்கம் போன்றவற்றில் காட்டும் அக்கறையை ஆராய்ச்சி வளர்ச்சியில் காட்டவில்லை. அரசுத் துறை நிறுவனங்களின் செயல்பாடு திருப்தி தராததாலும் போட்ட முதலுக்கேற்ப அவற்றில் வருவாய் இல்லாததாலும் அவற்றின் வளர்ச்சி, ஆராய்ச்சிப் பிரிவுகளுக்கான ஒதுக்கீடும் தேய்ந்துகொண்டே வந்து கடைசியில் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன.
பல்கலைக்கழகங்களில் உள்ள வளர்ச்சி ஆராய்ச்சிப் பிரிவுகள் அந் நிறுவனங்களில் படித்து பட்டம் வாங்குவதற்கு மட்டுமே பெருமளவு பயன்படுகின்றன. தொழில்துறைக்கோ மக்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கோ தீர்வு காணக்கூடிய ஆராய்ச்சிகள் அதிகம் கிடையாது.
வேளாண்மைப் பல்கலைக்கழகங் கள், கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகங்கள் மட்டுமே விதிவிலக்கு. இந்தியத் தொழில்நுட்பக் கழகங் கள் (ஐஐடி) பொறியியல் பல்கலைக் கழகங்கள் நிலையும் அதுதான். எனவே ஆராய்ச்சிகளில் அதிக முதலீடு செய்யப்படவேயில்லை.
இப்போதுதான் மீண்டும் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் 50 பெரிய தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி, ஆராய்ச் சிக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் தருகின்றன. இந்தியாவிலிருந்து டாடா குழுமம் மட்டுமே அதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. பிற தனியார் நிறுவனங்களிலும் ஆராய்ச் சிப் பிரிவுகள் இருந்தாலும் முதல் 50 இடங்களில் அவை இடம் பெறவில்லை. ஆப்பிள், கூகுள், சாம்சங், மைக்ரோசாஃப்ட், ஐ.பி.எம்., அமேசான், டெஸ்லா, டொயோடோ, சோனி, ஃபேஸ்புக் போன்ற நிறுவ னங்கள் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டுவதில் உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களாகியிருக்கின்றன.
தொழில், வர்த்தக சேவையில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1,000 ஆராய்ச்சிக் கூடங்களை இந்தியாவில் மட்டும் நிறுவியிருக்கின்றன. அவற்றில் 2,44,000 பேர் பணி புரிகின்றனர். அவை தங்களுடைய பொருள்களை ஆசியச் சந்தைக்கு ஏற்ப தயாரிக்க இந்த ஆய்வுக்கூடங்களை நிறுவி யிருக்கின்றன. இந்தியத் தரப்பில் ஆராய்ச்சிக்கு செய்யப்படும் முதலீட்டில் 75% அரசு மட்டுமே மேற் கொள்கிறது. தனியார் நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து 20% தான் முதலீடு செய்கின்றன. பல்கலைக்கழகங்களின் ஒட்டுமொத்த முதலீடு வெறும் 5%. இந்தியாவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், வெளிநாடுகளின் தொழில்நுட்பங்களைக் கடன் வாங்கி உற்பத்தி செய்து, விற்று தங்களுடைய சந்தையைப் பெருக்கிக்கொள்வதில் மட்டும் அக்கறை காட்டுகின்றன.
இந்தியாவில் இப்போது பெரும் சமூக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுதான் புதிய முதலீடுகளுக்கும் சோதனைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் ஏற்ற நேரம். இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) வெறும் 0.8% அளவுக்குத்தான் ஆராய்ச்சிக்கென முதலீடு செய்யப்படுகிறது. இந்தியத் தொழில் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் 1%-யாவது ஆராய்ச்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அண்மையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
டாடா உருக்கு நிறுவனம் கிராஃபின் என்ற புதிய உலோகத்தைத் தயாரித்திருக்கிறது. இது வெப்பத் தையும் மின்சாரத்தையும் வெகு திறமையாகக் கடத்துகிறது. இது எடையில் உருக்கைவிட 100 மடங்கு அதிகம். ஊடுருவிப் பார்க்கும் தன்மையது. இதன் பயன்பாடு அதிகரிக்கும்போது அது பல துறைகளிலும் கோடிக்கணக்கான ரூபாய் பலன்களை ஏற்படுத்தும்.
அனல், புனல், அணு மின் நிலையங்கள் தவிர புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதற்கு இப்போது முக்கியத்துவம் தரப்படுகிறது. காற்றாலைகளையும் சூரிய ஒளி மின்னுற்பத்திப் பிரிவுகளையும் தனித்தனியாக நிறுவுவதைவிட சேர்த்தே நிறுவினால் அதிகப் பயன்பாடும் குறைந்தளவு மின்சார இழப்பும் ஏற்படுவதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.புதிய கண்டுபிடிப்புகளுக்கு யார் தலைமை தாங்குவது அரசுத்துறையா, தனியார் துறையா, பல்கலைக்கழகங்களா, அரசுத்துறை நிறுவனங்களா என்ற கேள்வி எழுந்தது. இப்போது அது சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது. சூரிய ஒளி மின்சார தயாரிப்புக்கான செல்லுகளை எவ்வளவு விலை குறைவாகவும், பலன் அதிகமாக இருக்கும்படியும் தயாரிக்கலாம் என்ற ஆராய்ச்சியை மிகப் பெரிய நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.
‘இன்னொவிஸ்டா’ என்ற நிறுவனத்திடம் ஆராய்ச்சிக்காக 2006-ல் 101 கருத்துருக்கள் அளிக்கப்பட்டன. 2015-ல் அதன் எண்ணிக்கை 1,580 ஆக உயர்ந்திருக்கிறது. ஆராய்ச்சிக்குப் பரிசீலிக்கப்பட வேண்டிய கருத்துகள் குவிகின்றன. இதில் முன்னணியில் உள்ள 60 திட்டங்களைப் பரிசீலித்து அமல்படுத்தினால் மட்டும் சுமார் ரூ.7,150 கோடிக்குப் பலன் இருக்குமாம்.
உணவு, தண்ணீர், ஆற்றல் உற்பத்தி ஆகிய துறைகளில் 50,000 கோடி டாலர்கள் ஆராய்ச்சிக்காக மட்டும் முதலீடு செய்யப்படவிருக்கிறது. இது அத்துறைகளின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் பெரிதும் உதவும் என்பது நிச்சயம். தனியாரும் வந்து நேரடியாக ஆராய்ச்சியில் ஈடுபட பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் ஆராய்ச்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. உருக்குத் துறையில் ஆராய்ச்சிக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படுவதாக அத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
சமீபகாலம்வரை வெளிநாடுகளில் தயாரான சாதனங்களையும் நுகர் பொருள்களையும் அப்படியே வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்திய நிலைக்கேற்பவும் நுகர்வுக்கேற்பவும் சில மாறுதல்களைச் செய்ய இப்போது ஆராய்ச்சிகள் தொடங்கியுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் மொத்தம் 3,892 கண்டுபிடிப்பு முயற்சிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட் டிருக்கின்றன. இந்தியாவில் வளர்ச்சி ஆராய்ச்சித் துறையானது இனி ஆண்டுக்கு 14% என்ற வேகக்தில் வளர்ச்சி அடையும் என்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘சின்னாவ்’ என்ற நிறுவனம் தெரிவிக்கிறது.
2020 வாக்கில் இத்துறையில் மட்டும் சுமார் ரூ.2,60,000 கோடி புழங்கும் என்று ‘சின்னாவ்’ தெரிவிக்கிறது. இதுவே பெருமளவுக்கு விஞ்ஞானிகளுக்கு வருமானத்தையும் வேலை வாய்ப்பு களையும் அள்ளி வழங்கும். இந்தியச் சந்தைக்கு, இந்திய நுகர்வுக்கு, இந்தியத் தேவைகளுக்கு ஏற்ப ஆராய்ச்சி செய்வது அவசியம். எல்லா இந்திய நிறுவனங்களும் தங்களுடைய லாபத்தில் ஒரு சதவீதத்தை ஆராய்ச்சிக்காக ஒதுக்க வேண்டும், எல்லா பெரிய தொழில் நிறுவனங்களும் ஆராய்ச்சிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கையை நாம் ஏற்றாக வேண்டும்.
தொழில், வர்த்தக சேவையில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1,000 ஆராய்ச்சிக் கூடங்களை இந்தியாவில் மட்டும் நிறுவியிருக்கின்றன. அவற்றில் 2,44,000 பேர் பணி புரிகின்றனர். அவை தங்களுடைய பொருள்களை ஆசியச் சந்தைக்கு ஏற்ப தயாரிக்க இந்த ஆய்வுக்கூடங்களை நிறுவியிருக்கின்றன.
rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago