செலவு செய்தால் எப்படி வருமானம் கிடைக்கும்? இதென்ன கேள்வி? அதெப்படி? முரணாக இருக்கிறதே என உடனடியாக பல கேள்விகள் தோன்றுகிறதா உங்களுக்கு... முரணாக இருப்பது உண்மை தான்... ஆனால் செலவிலும் வருமானம் பார்க்கும் வாய்ப்புகள் இருப்பதைதான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளப் போகிறோம். மேலும் இந்த தீபாவளி செலவில் அப்படி பலன் அடைந்தோமா என்பதை கொஞ்சம் திரும்பிப் பார்க்கவும் போகிறோம்.
வரவையும், செலவையும் முறைப் படுத்திக் கொண்டவர்கள் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு விஷயத்துக்கும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை பட்ஜெட் போட்டு வைத்திருப் பார்கள். அந்த செலவுகளை எங்கு செய்ய வேண்டும் என்பதையும் திட்ட மிடுவார்கள். இதற்கு என்று ஒரு காரணத்தையும் சொல்லத்தான் செய்கின் றனர். அப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து, திட்டமிட்டு செலவு செய்பவர் களின் அனுபவங்களை பிறரும் தெரிந்து கொள்ளத்தான் இந்த கட்டுரை.
பொதுவாக ஒரு பொருளை வாங்குகிறபோது அதன் விற்பனை விலையிலிருந்து சற்றே விலை குறைத்து வாங்கினால்தான் இந்திய நுகர்வோருக்கு நிம்மதி. சிறிய பர்ச்சேஸ் என்றாலும் இந்திய மனங்கள் இதை எதிர்பார்க்கிறது. இந்திய வர்த்தகத்தில் இது சாதாரணமாக நடைமுறையில் உள்ளது. இந்த நுகர்வு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது ஒரே விலை விற்பனை முறை.
பேரம் பேசுதல்
விலையில் பேரம் பேச இந்த விற்பனை முறை வாய்ப்பு வழங்கவே இல்லை. பேரம் பேசி விலை குறைக்கும் முறையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த நுகர்வு அனுபவமும், பலனும் தள்ளுபடி விற்பனையில் கிடைப்பதில்லை என்கின்றனர் நுகர்வோர்கள். ஆனால் சிறிய வர்த்தகர்களிடம் வாங்குபவர்கள் பேரம் பேசி விலை குறைத்த அனுபவத்தை பெற்றிருப்பார்கள்.
நமது பேரம் பேசும் திறனுக்கு ஏற்ப லாபத்தில் விட்டுக்கொடுக்கிறார்கள் வர்த்தகர்கள். அதாவது அவர்களது லாபத்தில் நாமும் பங்கு போட்டுக் கொள்கிறோம். தரமான பொருளை பேரம் பேசி வாங்குவது எப்போதும் லாபகரமானதே என்கின்றனர் அனுபவசாலிகள். இந்த லாபம் மொத்தமாக பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு மட்டும், அதுவும் சிறிய நிறுவனமாக இருந்தால் கிடைக்கும். பேரம் பேச வாய்ப்பிலாத பெரிய நிறுவனங்களில் கிடைக்காது.
கேஷ் பேக் ஆபர்
ஆனால் பெரு நிறுவனங்கள் வாடிக் கையாளர்களை வேறு வகையில் இழுக் கத்தான் செய்கின்றன. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு இந்த ஆதாயம் சென்று சேர்கிறது.
இப்போதெல்லாம் பெரும்பாலும் யாரும் பணத்தை எடுத்து செல்வ தில்லை என்பதால், கார்டு மூலம் வாங்கு பவர்களுக்கு மட்டும் சலுகைகளை கொடுக்கின்றன வர்த்தக நிறுவனங்கள்.
கேஷ் பேக் ஆஃபர், ரிவார்டு பாயிண்ட் என்கிற பெயர்களில் இந்த சலுகைகள் கிடைக்கின்றன. இதில் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் சம்பந்தபட் டிருந்தாலும், வர்த்தக நிறுவனங்களுக்கு கூட்டு உள்ளது.
விற்பனையில் இத்தனை சதவீதம் பணத்தை திரும்ப அளிக்கும் ஆபர் களால், வாடிக்கையாளரைகளை ஈர்த்து வர்த்தகத்தை அதிகரித்துக் கொள்கின்றன நிறுவனங்கள்.
இதுபோன்ற பணத்தை திருப்பி அளிக்கும் சலுகைகளில் பொருட்களை வாங்கியபிறகு குறிப்பிட்ட நாட் களுக்குள் அந்த சலுகை தொகை உங்களின் கார்டுக்கு திரும்ப வந்துவிடும். ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டு வைத்திருப்பவர்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இரண்டையும் பயன்படுத்துபவர்கள் இந்த சலுகைகள் கிடைக்கும் வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்கினால் லாபகர மானதாக இருக்கும்.
ரிவார்டு பாயிண்ட்
கேஷ் பேக் ஆபர்களைப் போல இல்லாமல், நாம் செலவு செய்யும் தொகைக்கு ஏற்ப பண மதிப்பு கொண்ட சலுகைப் புள்ளிகள் கொடுக்கப்படும். ஆனால் இதை பணமாக்க முடியாது. அதாவது 100 ரூபாய் செலவு செய்திருந்தால், ஒரு ரூபாய் ரிவார்டு பாயின்டாக கிடைக்கும். பயன்படுத்தும் கார்டின் தன்மைக்கு ஏற்ப சலுகை புள்ளிகளின் மதிப்பு இருக்கும்.
அதாவது கோல்டு கார்டு வைத்திருந்தால், 100 ரூபாய் செலவு செய்தால், 1 பாயின்ட் என்றும், பிளாட்டினம் கார்டு என்றால் 150 ரூபாய் செலவு செய்தால் 2 பாயின்ட் என்றும், பிரீமியம் கார்டு என்றால் 100 ரூபாய் செலவு செய்தால் 2 பாயின்ட் என்றும் சலுகை புள்ளிகள் கிடைக்கும்.
செலவு செய்யும் தொகைக்கு ஏற்ப கிடைக்கும் புள்ளிகளைப் போல, வேறு சில வகைகளிலும் இந்த சலுகை புள்ளிகள் கிடைக்கும். கேஷ் பேக் சலுகையுடன் புள்ளிகள், குறிப்பிட்ட கடைகளில் வாங்கினால் புள்ளிகள், மொபைல் ஆப்ஸ் பயன்படுத்தினால் புள்ளிகள், பெட்ரோல் நிரப்பினால் புள்ளிகள் என பல வகைகளிலும் இந்த சலுகைப் புள்ளிகள் கிடைக்கும். இந்த சலுகைப் புள்ளிகளை மொத்தமாகச் சேர்த்து, அதன் மதிப்பிற்கு ஏற்ப செலவு செய்து கொள்ளலாம். அதாவது சலுகைப் புள்ளிகளின் மதிப்பு 500 ரூபாய் என்றால் அதை செலவு செய்து கொள்ளலாம்.
கிப்ட் வவுச்சர்
குறிப்பிட்ட வர்த்தக நிறுவனத்தில் செலவு செய்யும் தொகைக்கு ஏற்ப, கிப்ட் வவுச்சர்களை சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. உதாரணமாக குறிப்பாக பல்பொருள் அங்காடியில் 3500 ரூபாய்க்கு கோல்டு கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்தால், 500 ரூபாய் கிப்ட் வவுச்சர் கிடைக்கும். இப்படி செலவு செய்யும் தொகையை பொறுத்து, கிரெடிட் கார்டு வகைக்கு ஏற்ப கிப்ட் வவுச்சர்கள் கிடைக்கும். இந்த கிப்ட் வவுச்சர் விவரங்களை சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டு நிறுவன இணைய தளங்களில் கொடுத்துள்ளனர்.
கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தரும் சலுகைகள் என்ன? அதற்கான நிபந்தனைகளை போன்றவற்றை ஒவ்வொரு மாதமும் பில்லுடனேயே அனுப்புகின்றன கிரெடிட் கார்டு நிறுவனங்கள். குறிப்பாக எவ்வளவு செலவு செய்தால் இந்த சலுகைகள் கிடைக்கும். எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை கிடைக்கும், எந்தக் கடை களில் கிடைக்கும் போன்ற தகவல்கள் தெரிந்து கொண்டு பயன்படுத்தலாம்.
கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது நமது எதிர்கால வருமானத்தை நம்பி கடன் வாங்குகிறோம் என்கிற எச்சரிக்கை உணர்வும் இருக்கத்தான் வேண்டும். அதே சமயத்தில் அதற்காக கிடைக்கும் ஒவ்வொரு சலுகைகளையும் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.
பொதுவாக நமது பணத்தை செலவு செய்கிறபோது இப்படி பார்த்து பார்த்து செலவு செய்தால் பண்டிகை செலவும் லாபம்தான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago