சர்வதேச அளவில் அசுர வளர்ச்சி கண்ட இந்திய நிறுவனங்கள்

By செய்திப்பிரிவு

எதிர்கால தலைமுறையினர் சொந்தமாக தொழில் தொடங்குவதையே விரும்புகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அதற்கான அடித்தளமாக இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புதிய நிறுவனங்களின் வளர்ச்சி உள்ளது. மக்களைக் கவரும் தொழில் ஐடியா இருந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீங்களும் வெற்றிகரமான பிசினஸ்மேன் ஆகலாம் என்கிறது தொழில் உலகம். அப்படி கடந்த பத்தாண்டுகளில் தொடங்கப்பட்டு, துணிகர முதலீட்டாளர்கள் உதவியுடன் சர்வதேச அளவில் வளர்ந்த இந்திய நிறுவனங்கள் குறித்த பார்வை.

பிளிப்கார்ட்

நிறுவனர்கள்: சச்சின் பன்சால், பின்னி பன்சால்

$2007ல் தொடங்கப்பட்ட இ-காமர்ஸ் நிறுவனம்.

$16 முதலீட்டாளர்களிடமிருந்து 11 முறையாக 2.5 பில்லியன் டாலர் முதலீடு திரட்டியது.

$ மிந்த்ரா, லெட்ஸ்பை டாட் காம் , விரீட், சாக்பாக் மற்றும் மிமி360 நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது.

$தற்போதைய சொத்து மதிப்பு 11 பில்லியன் டாலர்கள்.

ஷாப்குளூஸ்

நிறுவனர்: சஞ்செய் சேத்தி

$2011ல் சிலிகான் பள்ளத்தாக்கில் தொடங்கப்பட்டது. உள்ளூர் அளவிலான விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்களை ஒருங்கிணைக்கிறது.

$ஐந்து முதலீட்டாளர்களிடம் 5 சுற்றில் 11 கோடி டாலர் முதலீடு திரட்டியுள்ளது. கடைசியாக டைகர் இன்வெஸ்ட்டார் நிறுவனத்திலிருந்து 10 கோடி டாலர் முதலீடு திரட்டியுள்ளது.

$தற்போதைய சொத்து மதிப்பு 50 கோடி டாலர்கள்.

ஸ்நாப்டீல்

நிறுவனர்கள்: குனால் பால், ரோஹித் பன்சால்

$ 2010 ஆம் ஆண்டு ஆன்லைன் டீல் நிறுவனமாக தொடங்கபட்டு தற்போது சில்லரை வர்த்தக நிறுவனமாக வளர்ந்துள்ளது.

$ 16 முதலீட்டாளர்களிடமிருந்து 8 முறையாக 110 கோடி டாலர்கள் முதலீடு திரட்டியுள்ளது. 2014 டிசம்பரில் சாப்ட்பேங்க் வென்ச்சர் நிறுவனத்திடமிருந்து 62 கோடி டாலர் நிதி திரட்டியுள்ளது. பாக்ஸ்கான் நிறுவனத்தில் முதலீடு செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

$ தற்போதைய சொத்து மதிப்பு 200 கோடி டாலர்கள்.

ஓலா கேப்ஸ்

நிறுவனர்கள்:

பவிஷ் அகர்வால், ஆங்கிட் படி.

$ ஆன்லைன் கால்டாக்ஸி சேவை துறையில் இறங்கி தற்போது மொபைல் புக்கிங் மூலம் கால்டாக்ஸி சேவையில் உள்ளது. மும்பையில் 2010-ல் தொடங்கப்பட்டது.

$ ஒன்பது முதலீட்டாளர்களிடமிருந்து 5 சுற்றில் 27 கோடி டாலர்கள் முதலீடு திரட்டியுள்ளது.

$ அக்டோபர் 2014ல் ஜப்பானின் சாப்ட் பேங்க் கார்ப்பரேஷன் 21 கோடி டாலர்கள் முதலீடு செய்துள்ளது. மார்ச் 2015ல் டாக்ஸிபார்ஷ்யூர் நிறுவனத்தை 20 கோடி டாலருக்கு கையகப்படுத்தியது.

$ தற்போதைய சொத்து மதிப்பு 100 கோடி டாலர்கள்.

ஸோமாட்டோ

நிறுவனர்கள்: தீபிந்தர் கோயல், பங்கஜ் சதா

$ 2008ல் தொடங்கப்பட்டது. ஆன்லைன் மற்றும் செல்போன் மூலம் உணவகங்களை தேட தொடங்கப்பட்ட நிறுவனம். 19 நாடுகளில் உள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவங்கங்கள் குறித்த விவரங்களை தருகிறது.

$ மூன்று முதலீட்டாளர்களிடமிருந்து 6 சுற்றில் 11 கோடி டாலர் முதலீடுகளை திரட்டியுள்ளது. ஏப்ரல் 2015ல் இன்போஎட்ஜ் வென்ச்சர் நிறுவனத்திடமிருந்து 5 கோடி டாலர் முதலீடு திரட்டியுள்ளது.

$தற்போதைய சொத்து மதிப்பு 66 கோடி டாலர்கள்.

பேடிஎம்

நிறுவனர்: விஜய் சேகர் சர்மா

$ நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட ஒன்97 கம்யூனிகேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனம். 2010ல் தொடங்கப்பட்டது.

$ ஆன்லைன் மற்றும் மொபைல் போன் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மற்றும் சில்லரை வர்த்தக துறையில் உள்ளது. இதன் தாய் நிறுவனம் நான்கு வென்ச்சர் முதலீட்டாளர்களிடமிருந்து 61 கோடி முதலீடுகளை திரட்டியுள்ளது. சமீபத்தில் ரத்தன் டாடா இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

$ தற்போதைய சொத்து மதிப்பு 150 கோடி டாலர்கள்.

இன்மொபி

நிறுவனர்கள்: நவீன் திவாரி, மோஹித் சக்சேனா, அபய் சிங்கால், அமித் குப்தா

$ எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஆன்லைன் விளம்பர நிறுவனம்.

$ 4 முதலீட்டாளர்களிடமிருந்து 5 முறையாக 22 கோடி டாலர் முதலீடு திரட்டியுள்ளது. டிசம்பர் 2014ல் சாப்ட்பேங்க் வென்ச்சர் முதலீட்டாளரிடமிருந்து மேலும் 50 லட்சம் டாலர் முதலீடு திரட்டியது. சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனமான நெஸ்ட்அவே நிறுவனத்தில் 8 கோடி முதலீடு செய்துள்ளது.

$ தற்போதைய சொத்து மதிப்பு 250 கோடி டாலர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்