சில மாதங்களுக்கு முன்பு அடுத்த கிங்பிஷர் தயாராகிவிட்டது என்று வர்ணிக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் இன்று பங்குச் சந்தையில் பரபரப்பான பங்காக உருவெடுத்திருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கு 300 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. புளும்பெர்க் தகவல்படி கடந்த ஒரு வருடத்தில் உலக அளவில் எந்த விமான நிறுவன பங்கும் இவ்வளவு வருமானம் கொடுத்ததில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 65.50 ரூபாயில் தன்னுடைய வர்த்தகத்தை முடித்தது. ஆனால் கடந்த வாரத்தில் அதிகபட்சமாக இந்த பங்கு 72.50 ரூபாய் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த பங்கு சுமார் 15 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. கடந்த பல காலாண்டுகளாக நஷ்டத்தில் இருந்த இந்த நிறுவனம் இப்போது லாப பாதைக்கு திரும்பி இருக்கிறது. செப்டம்பர் காலாண்டில் 23 கோடி ரூபாய் நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது.
ஸ்பைஸ்ஜெட் மட்டுமல்லாமல் ஜெட் ஏர்வேஸ் பங்கும் கடந்த ஒரு வருடத்தில் 80 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. புதிதாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட இண்டிகோ நிறுவன பங்கும் நன்றாக உயர்ந்திருக்கிறது. 765 ரூபாயில் சந்தையில் வர்த்தகத்தை தொடங்கிய இந்த பங்கு இப்போது 1,090 ரூபாயில் வர்த்தகமாகி வருகின்றது.
கடந்த சில வருடங்களாகவே விமான நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்திருந்த நிலையில் இப்போது உயர ஆரம்பித்திருக்கின்றன. இந்த நிலையில் தற்போது லாபம் ஈட்டும் இன்னொரு விமான நிறுவனமான கோ ஏர் நிறுவனமும் பொதுப்பங்கு (ஐபிஓ) வெளியிடப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிறுவனப் பங்குகள் உயர்வுக்கு பல காரணங்களை இந்த துறையின் வல்லுநர்கள் தெரிவிக் கிறார்கள்.
முதலாவது எரிபொருள். கடந்த வருடத்தில் விமான எரிபொருள் கட்டணம் 40 சதவீதத்துக்கு மேல் சரிந்திருக்கிறது. இதனால் இந்திய விமான நிறுவனங்களின் செலவுகள் 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை சரிந்திருக்கிறது. தவிர சில மாநிலங்கள் எரிபொருள் மீதான வரியை குறைத்திருக்கின்றன.
அடுத்து தேவை. விமான போக்குவரத்து துறையில் தேவை அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் பயணிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. தவிர விமானத்தில் காலியாக இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் விமான நிறுவனங்களுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக இந்த துறையின் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
1990-ம் ஆண்டுகளின் இறுதியில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், அப்போது தேவை குறைவாக இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பது மற்றும் தேவை உயர்வது உள்ளிட்ட சாதகமான சூழல் நிலவுகிறது. தவிர புதிய விமான போக்குவரத்து கொள்கை காரணமாக தேவை உயரும் என்ற கணிப்பும் உருவாகி இருக்கிறது.
பணம் இருக்கிறவர்கள் விமானத்தில் பயணிக்கலாம், ஆனால் விமானத்துறை நிறுவனங்கள் / முதலீட்டாளர்களிடம் பணம் இருக்காது என்று சந்தையில் சொல்வதுண்டு. இப்போது விமானப் போக்குவரத்து துறைக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. சாதமான சூழ்நிலையை பயன்படுத்தி ஏர் இந்தியாவை லாப பாதைக்கு கொண்டு வருவாரா அஷ்வனி லோஹனி?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago