$ வைபர் சிஸ்டத்தில் முதலில் கவனிக்க வேண்டியது வைபர் பிளேடு. இதுதான் முகப்பு கண்ணாடியை துடைக்க பயன்படுகிறது. வைபர் பிளேடு ரப்பரால் ஆனது. அதன் ஷார்ப் பகுதிதான் கண்ணாடியை சுத்தமாக துடைக்கிறது. இந்த ஷார்ப் பகுதி தேய்ந்தாலோஅல்லது கிழிந்தாலோ வைபர் பிளேடை மாற்றி விடவேண்டும். தவிர நெடு நாட்கள் வைபர் பிளேடு மாற்றாமல் இருந்தால் அது கடினமானதாக மாறிவிடும்.
அவ்வாறு ஆகும் போது கண்ணாடியை சரியாக துடைக்காது. எனவே வைபர் பிளேடு நன்றாக இருந்தாலும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை மாற்றி விடுவது நல்லது. அதிக நாட்கள் கார் உபயோகிக்காமல் நிறுத்தி வைக்கும் போது வைபர் ஆர்ம்- ஐ நிமிர்த்தி வைப்பதன் மூலம் வைபர் பிளேடு அழுத்தமாகாமல் அதிக நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
$ இரண்டாவது வைபர் ஆர்ம். இதன் மூலம்தான் வைபர் பிளேடு சுத்தம் செய்கிறது. இதன்மீதுதான் வைபர் பிளேடு பொருத்தப்பட்டுள்ளது. இதன் அசைவுக்கு எற்ற மாதிரி வைபர் பிளேடு மேலும் கீழும் சென்று கண்ணாடியை சுத்தம் செய்கிறது. இந்த வைபர் ஆர்ம் வளைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வளைந்து விட்டால் வைபர் பிளேடுக்கு அழுத்தம் சரியாக கிடைக்காமல் கண்ணாடியை சரியாக துடைக்காது.
$ வைபர் பிளேடு மற்றும் வைபர் ஆர்ம் வேலை செய்ய உதவி செய்வது வைபர் மோட்டார். இதன் உதவியால் தான் வைபர் ஆர்ம் இயங்குகிறது. இந்த வைபர் மோட்டாரில் தண்ணீர் போகாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். வைபர் மோட்டாருக்கு வரும் வயரை சரியாக பராமரிக்க வேண்டும்.
$ வைபர் சிஸ்டமை இயக்க பயன்படுவது ஸ்ட்ரீங் வீல்-க்கு கீழே இருக்கும் காம்பினேஷன் சுவிட்ச். இதை ஆன் செய்வதன் மூலமாகத்தான் வைபர் மோட்டார் இயங்குகிறது. இந்த சுவிட்சை சரியாகப் பராமரிக்க வேண்டும்.
$ வைபர் சிஸ்டத்தில் வைபர் ஸ்பிரே ஒன்றும் உள்ளது. இது எதற்கு என்றால் மழை இல்லாத நேரங்களில் கண்ணாடியை துடைக்க தேவையான தண்ணீரை வைபர் டேங்கில் இருந்து உறிஞ்சி பைப் வழியாக கண்ணாடியின் மீது பீய்ச்சி அடிக்கும். இந்த வைபர் டேங்கில் உப்பு தண்ணீரை பயன்படுத்தக் கூடாது ஏனென்றால் உப்பு நீரின் உப்பானது கட்டியாகி ஸ்பிரே ஜெட்டை அடைத்து விடும். இதனால் கண்ணாடியின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பது தடுக்கப்படும். வைபரில் உள்ள தண்ணீருடன் வைபர் ஷாம்பு கலந்து பயன்படுத்தினால் கண்ணாடியை நன்றாக துடைக்க முடியும்.
$ வைபர் சிஸ்டம் வேலை செய்யவில்லை என்றால் முதலில் வைபர் பியூஸை பார்க்க வேண்டும். இது பெரும்பாலான கார்களில் டிரைவர் சைடு டாஸ் போர்டு பியூஸ் பாக்ஸில் இருக்கும். இதை பரிசோதித்த பின்பு தான் மற்றவைகளை ஒன்றன்பின் ஒன்றாக பரிசோதிக்க வேண்டும்.
தகவல் உதவி: கே.ஸ்ரீனிவாசன்,
உதவி துணைத் தலைவர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago