எது வளர்ச்சி?

By செய்திப்பிரிவு

சமீபத்தில் தேசியப் பங்குச் சந்தை நிறுவனம், இந்திய மாநிலங்களின் வளர்ச்சி நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் மாநிலங்களின் நிதி நிலைமை, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக்கொண்டு மாநிலங்களின் வளர்ச்சிப் போக்கு மதிப்பீடு செய்யப்பட்டது. அந்த அறிக்கை இந்தியா குறித்து நான்கு விசயங்களை நமக்கு உணர்த்துகிறது.

இந்தியாவில் ஏற்றத்தாழ்வு தொடர்ச்சியாக அதிகரித்தபடி இருக்கிறது.

மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுவதால் மாநிலங்களின் வளர்ச்சி தடைபட்டிருக்கிறது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கல்வி, சுகாதாரத்தில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

வளர்ச்சித் திட்டங்களில் வடகிழக்கு மாநிலங்கள் கடும் புறக்கணிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

ஏற்றத்தாழ்வு

இந்த அறிக்கை இந்திய மாநிலங்களிடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டுகிறது என்றாலும், ஏற்றத்தாழ்வை நாம் பொருளாதாரத்துடன் மட்டுமே சுருக்கிவிட முடியாது. இந்தியாவில் பொருளாதார ரீதியாக ஒருவர் மேம்பட்டு இருந்தாலும் அவரது ஜாதி, மதம், மொழி, பாலினம் அடிப்படையிலே சமூகத்தில் அவருக்கான இடம் தீர்மானிக்கப்படுகிறது. இந்த நிலை மாறும் வரை ஏற்றத்தாழ்வு என்பதும் அதிகரிக்கவே செய்யும்.

கூட்டாட்சியின் அவசியம்

மத்திய அரசு மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிப்பதில் தீவிரம் காட்டிவருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் மாநிலங்கள் தங்கள் நிதித் தேவைக்கு மத்திய அரசைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் அதிகரித்து இருக்கிறது. அதனால் மாநிலங்களின் வளர்ச்சி
தடைபட்டு இருக்கிறது. இந்த கரோனா காலத்தில் 17 மாநிலங்களில் நிதிப் பற்றாக்குறை அதிகரித்து இருக்கிறது. விளைவாக, அம்மாநிலங்கள் பொது செலவினங்களை 50 சதவீதம் அளவில் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் நிதி அமைச்சரான தமிழகத்தைச் சேர்ந்த சண்முகம் செட்டி, நிதிப் பகிர்வில் கூட்டாட்சி முறையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதை இங்கு நாம் நினைவு கூறலாம். கூட்டாட்சி முறையை வலுப்படுத்துவதன் மூலமே வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்பதைைத்தான் இவ்வறிக்கையும் உணர்த்துகிறது.

கல்வி, சுகாதாரம்

சென்ற ஆண்டு மனித வள மேம்பாடு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், இந்தியா 129-வது இடத்தில் உள்ளது. உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்கள் கல்வியிலும், சுகாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இம்மாநிலங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. கல்வி, சுகாதாரக் கட்டமைப்பில் இந்தியாவில் கேரளாவும், தமிழ்நாடும் முன்னிலையில் இருக்கின்றன. இவ்விரு மாநிலங்கள் சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தியதன் காரணமாகவே ஏனைய மாநிலங்களை விடவும் இம்மாநிலங்களில் வளர்ச்சி சீரானதாக இருக்கிறது என்பதை இவ்வறிக்கையின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சீரற்ற வளர்ச்சி

சுதந்திரத்துக்குப் பிறகான கடந்த 73 ஆண்டுகளில், நாடு குறிப்பிட்ட அளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அந்த வளர்ச்சி சீரானதாக இல்லை. பெருநகரங்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கின்றன. சிறு நகரங்கள் கிராமங்கள் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்கள் கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, வேளாண், உள்கட்டமைப்பு என
வளர்ச்சிக்கான காரணிகள் அனைத்திலும் பின்தங்கி இருக்கின்றன. குறிப்பிட்ட பெருநகரங்களில் நிகழும் வளர்ச்சியை நாம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியாக அடையாளப்படுத்துவதன் வழியே நாட்டின் ஏனைய பகுதிகள் புறக்கணிப்புக்கு உள்ளாக்
கப்படுகின்றன. வளர்ச்சி பரவலாக்கப்பட வேண்டியதின் அவசியத்தையும் இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

மகிழ்ச்சியற்ற மக்கள்

தற்போது இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. ஆனால் குடிமக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது? உலகில் மகிழ்ச்சியான மனிதர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 144 -வது இடத்தில் இருக்கிறது. மொத்தமாகவே 153 நாடுகள் உள்ளடங்கிய அந்தப் பட்டியலில் இந்தியாவை விட பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் நாடுகளான பாகிஸ்தான் (66), வங்கதேசம் (107), இலங்கை (130) ஆகியவை இந்தியாவை விடவும் முன்னிலையில் இருக்கின்றன.

காஷ்மீரை எடுத்துக்கொள்வோம். அங்கு நிகழும் அடக்குமுறையால் அங்குள்ள மக்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி திணறிவருகின்றனர். இதுபோன்ற சமூக அவலங்
களைப் பேசாமல் நாம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மட்டும் பேசிக்கொண்டிருக்க முடியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்