முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in
சாலையில் கவனத்தை ஈர்க்கும் கார்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் டொயோட்டா ஃபார்சுனர் பெயர் இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு கம்பீரமான தோற்றத்துடன் எஸ்யுவிகளிலேயே தனித்துவமான அடையாளத்துடன் விளங்கும். ஆன் ரோடில் சிறந்து விளங்கும் இந்த ஃபார்சுனரை ஆஃப் ரோடில் ஓட்டினால் எப்படி இருக்கும்? அதற்கான சோதனை ஓட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
அன்று காலை முதலே மழை தூறிக்கொண்டிருந்தது. பழைய மகாபலிபுர சாலையில் அமைந்திருக்
கும் ‘தி ஃபார்ம்’ என்ற பண்ணையில்தான் ஃபார்சுனரின் ஆஃப்ரோடு சோதனை ஓட்டம் ஏற்பாடாகியிருந்தது. அந்தப் பண்ணையில் கூடி இருந்த மனிதர்கள், செழித்து வளர்ந்திருந்த மரங்கள், செடிகள் ஆகியவற்றோடு சேர்த்து மழையில் நனைந்தபடி லான்சன் டொயோட்டாவின் பார்ட்சுனர் கார்களும் வரிசை கட்டி நின்றிருந்தன. கேரள ஓணம் பண்டிகையின்போது யானைகள் வரிசையாக நிற்பதுபோல்.
சென்னை சத்தியபாமா கல்லூரிக்கு எதிரே அமைந்திருக்கும் ‘தி ஃபார்ம்’ என்ற பண்ணையில், வாகனங்களின் ஆஃப் ரோடு திறன்களை சோதனை செய்வதற்காகவும், ஆஃப் ரோட் ட்ரைவ் சாத்தியங்களை அனுபவிக்கவும் ஏற்ற வகையில் ஆழமான குழிகள், மிக உயரமான ஏற்றங்கள், சிக்கலான சரிவுகள், இரண்டு அடிக்கும் மேலான பள்ளத்தில் தேக்கப்பட்ட நீர் என செயற்கையாக அமைக்கப்பட்டிருந்தன. ஆரம்பகட்ட அறிமுகத்துக்குப் பிறகு, ஃபார்சுனரின் ஆஃப் ரோடு சாகசத்தை அனுபவிப்பதற்கான நிகழ்வு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு யானைகளும் ஒன்றன்பின் ஒன்றாக பயணிக்கத் தொடங்கின.
உள்ளே ஏறி அமர்ந்ததும், வெளிப்புறச் சூழல் அனைத்தும் நம் ஞாபகத்தில் இருந்து மறைந்து போகத் தொடங்குகின்றன. ஃபார்்சுனரே தனி உலகமாக உருப்பெறத் தொடங்கியது. அதன் உட்புற அமைப்பு மிகுந்த கலைநயத்துடன், நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டு உயர் தரத்திலும் உருவாக்கப்பட்டு இருந்தது. அதன் இருக்கை, உட்புறக் கூரை, டேஷ்போர்ட், ஸ்டியரிங், கியர் என ஒவ்வொன்றிலும் வெளிப்படும் கணக்கச்சிதமான துல்லியம், உட்புறத்துக்கு எலைட் தன்மையை அளிக்கிறது. ஆஃப் ரோடுக்கே உரிய பதட்டம் நெஞ்சில் இருந்தாலும், உட்கார்ந்திருப்பது டொயோட்டா ஃபார்சுனர் என்பதால் துணிந்து ஓட்டத் தயாரானோம்.
வாகனம் முன்நகரத் தொடங்குகிறது. ஏழு மலை ஏழு கடல் தாண்டி புதையலை அடைய வேண்டும் என்பது போல, முதல் சவாலாக, சேறும் சகதியுமாக நீர் தேங்கி இருந்த புதைகுழி எதிர்பட்டது. இந்த புதைகுழியில் காரை இறக்கினால் வெளியே எடுக்க முடியுமா என்று சிறு தயக்கம். தயக்கத்தை உணர்ந்த உடனிருந்த உதவியாளர், குழியை பார்த்து தயங்கினால் எப்படி தைரியமாக ஓட்டுங்கள், அதை சோதிக்கத்தானே வந்திருக்கிறோம் என்றார். கார் ஒருபக்கம் சாய்ந்தவாறே மெதுவாக உள்நுழைந்தது. பிறகு வேகத்தை சற்று கூட்டியதும், கார் எவ்வித சிரமமும் இன்றி மிக லாவகமாக புதைகுழியில் இருந்து வெளியேறியது. காரின் உள்ளிருந்த நாங்கள் யாரும் எவ்வித கடினமான அசைவுகளையும் உணரவில்லை.
அதன்பிறகு முட்புதர்கள், சிறு சிறு கற்களால் நிரப்பப்பட்ட கரடுமுரடான சாலை. அவை அனைத்தையும் ஃபார்்சுனர் எளிதாகக் கடந்து சென்றது. இவ்வகையான ஆஃப் ரோடு எஸ்யூவியில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நாம் பாதி உழைப்பை கொடுத்தால் போதும் மீதியை அவையே பார்த்துக்கொள்ளும். சிறு தூரத்திலேயே செங்குத்து என்று சொல்லக் கூடிய வகையில் மிக உயரமான மேடு ஒன்று எதிர்பட்டது. நான் கேட்டேன், லெஃப்டா இல்ல ரைட்டா
என்று. லெஃப்டும் இல்ல ரைட்டும் இல்ல, நேராகத்தான் போக வேண்டும் என்றார் உதவியாளர். என்னது சுவர் போன்று இருக்கும் இந்த மேட்டிலா ஏற்றுவது என்று கேட்டேன்.
ஆமா ராஜா ஆமா என்பது போல் இருந்தது அவருடைய பார்வை. மேட்டில் இருந்து சிறிது விலகினாலும், வாகனம் கீழே சரிந்து விடும் என்ற அளவில் இருந்தது அந்த மேடு. வானோக்கி பயணிப்பதுபோல், மேட்டில் ஏறும்போது எதிரே என்ன இருக்கிறது என்பதே தெரியவில்லை. கண்ணாடி வழியாக வானம்தான் தெரிந்தது. மெது மெதுவாக வேகத்தை உயர்த்த உயர்த்த வாகனம் நத்தை போல் ஊர்ந்து மேல் ஏறியது. பிறகு அதே நிதானத்தில் அந்த மேட்டு உச்சியில் இருந்து கீழ் இறங்கியது. இது போன்ற சிக்கலான பகுதிகளில் ஃபார்்சுனர் தானாகவே சில இயக்கங்களை மேற்கொள்ளத் துவங்கிவிடும்.
அதாவது உயராமன மேடுகளில் ஏறுகிறது என்றால், வாகனம் பின்னோக்கி நகரந்து விடாமல் இருப்பதற்காக, சக்கரத்துக்கு தேவையான அழுத்தம் தானாகவே கடத்தப்பட்டுவிடும். அதேபோல், பெரிய சரிவில் கீழே இறங்குகிறது என்றால், அதற்கேற்ற வகையில் சக்கரத்தின் சுழற்சி கட்டுப்படுத்தப்படும். இந்த அம்சங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்த சிறு நேரத்திலேயே குளம்போல் இருந்த நீர்த் தேக்கம் ஒன்று எதிர்பட்டது. கார் அந்த இரண்டடி ஆழ தண்ணீரில் மூழ்காமல் அப்படியே மிதந்தபடி சீராக முன்னேறிக்கொண்டே இருந்தது.
ஃபார்சுனர் காரின் ஆஃப் ரோடு அம்சங்களை முழுமையாக அனுபவித்து முடிக்கும்போது ஒன்று புரிந்தது, வாகனத்தை நாம் சரியாக கட்டுப்படுத்துகிறோமோ இல்லையோ, வாகனம் தன்னளவில் தன்னைதானே முறையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது முக்கியம். அதில் ஃபார்சுனர் சிறந்து விளங்குகிறது. சொல்
லப்போனால், ஃபார்சுனைரை ஆட்டோ மேடிக் கார் என்றுகூட அழைத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு அதன் செயல்பாடுகள் கட்டிப்பாட்டில் உள்ளன. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தாலும், ஃபார்சுனர் தன் கட்டுப்பாட்டை இழக்காது.
ஃபார்சுனர் சந்தைக்கு புதிதல்ல. பல ஆண்டுகளாக இவற்றை சாலைகளில் அதிகமாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், இது இவ்வளவு சவாலான கரடு முரடான பாதைகளிலும், செங்குத்தான சரிவிலும், இரண்டடி ஆழக் தண்ணீரிலும் பயணிக்கும் திறன் கொண்டது என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஃபார்சுனர் டீசல், பெட்ரோல் இரண்டு பிரிவுகளிலும் கிடைக்கிறது.
டீசல் என்றால் ஒரு லிட்டருக்கு 15 கிலோ மீட்டர் வரையிலும், பெட்ரோல் என்றால் லிட்டருக்கு 11 கிலோ மீட்டர் வரையிலும் மைலேஜ் கொடுக்கும். 2755 சிசி திறனைக் கொண்டிருக்கும் இதன் என்ஜின் 3400 ஆர்பிஎம்-ல் 174.5 பவரை உற்பத்தி செய்யக் கூடிய ஆற்றல் கொண்டது. மேலும் இது சிக்ஸ் ஸ்பீட் கியர் பாக்ஸைக் கொண்டிருக்கிறது. ஏழு நபர்கள் அமரக்கூடிய வகையில் விசாலமான இருக்கை வசதிகளைக் கொண்டிருக்கிறது.
ஒயிட் பேர்ல் கிரிஸ்டல் ஸைன், சூப்பர் ஒயிட், சில்வர் மெட்டாலிக், பேண்டோம் ப்ரோன், கிரே மெட்டலிக், கிரே ப்ரான்ஸ், ஆட்டியூட் பிளாக் என ஏழு வண்ணங்களில் இவை சந்தையில் கிடைக்கின்றன. இதன் விலை ரூ.27.8 லட்சம் முதலாக ஆரம்பமாகிறது. டொயோட்டோ நிறுவனத்தின் அடையாளங்களில் ஒன்றாக ஃபார்சுனர் திகழ்வதில் ஆச்சரியமில்லை என்பதை அதன் ஆஃப் ரோட் ட்ரைவிங் அனுபவத்தில் உணர முடிகிறது.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago