என்ஜிஓ-க்கள் மீதான தடை விலகுமா?

By செய்திப்பிரிவு

லாப நோக்கில்லாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) இப்போது பெரும் சிக்கலில் உள்ளன. இதுவரையில் மொத்தம் 13 ஆயிரம் என்ஜிஓக்களின் லைசென்ஸ்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

இவை அனைத்துமே 2009-ம் நிதி ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வெளிநாட்டிலிருந்து திரட்டிய நிதிக்கு உரிய கணக்கு காட்டவில்லை என்பதால் இவற்றுக்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

இது தவிர, வெளிநாட்டிலிருந்து முதலீடுகளை திரட்டி செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக கிரீன் பீஸ் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதன் வங்கிக் கணக்குகளையும் 6 மாதத்துக்கு முடக்கி வைத்துள்ளது. மேலும் அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு அறக்கட்டளை செயல்பாடுகளையும் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கியுள்ளது மத்திய அரசு.

அதிரடி முடிவுக்கு என்ன காரணம்?

கடந்த ஜூன் மாதம் மத்திய அரசின் மின் திட்டங்கள், நிலக்கரி சுரங்கம் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் குறித்து அரசுக்கு எதிரான பிரசாரத்தை சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு நிதியைப் பெற்று செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வதை ஏற்க முடியாது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற போது நாட்டை நிர்மாணிக்கும் பணிகளில் அதிக கவனம் உருவானது.1950களில் தொடங்கிய இந்தப் பயணம் 1960 வரை நீடித்தது.

1970களில் அரசியல்வாதிகளின் கை மேலோங்கியதால் நாட்டு மக்களைப் பற்றிய அக்கறை குறையத் தொடங்கியது. இந்த காலகட்டத்தில்தான் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு அவசியமானது.

வெள்ளம், வறட்சி, பஞ்சம் போன்ற காலங்களில் அரசின் உதவிகள் போதுமான அளவுக்கு இல்லாதபோது அல்லது பெரும்பாலான மக்களைச் சென்றடையாதபோது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செயலாற்றும் தன்னார்வ நிறுவனங்களின் தேவை அதிகரித்தது.

1980-களுக்குப் பிறகு இவை ஆலமரமாக வேரூன்றி விருட்சமாக வளர்ந்து கிளைபரப்பியது. தொற்றுநோய் பரவல் தடுப்பு, எய்ட்ஸ் தடுப்பு, பெண் கல்வி விழிப்புணர்வு உள் ளிட்ட பலதரப்பு பிரசாரங்கள், தேவைப் படும் ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி ஆகியவற்றுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேவைப்பட்டன.

இந்தியா முழுவதும் 20 லட்சம் என்ஜிஓக்கள் செயல்படுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவற்றில் 10 சதவீத என்ஜிஓக்கள்தான் தாங்கள் திரட்டும் நிதி விவரத்தை ஆண்டுதோறும் சரியாக தாக்கல் செய்வதாக நிதி அமைச்சகம் கூறுகிறது.

இதுபோல கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால் பெரும்பாலான என்ஜிஓ-க்களை மூட வேண்டியிருக்கும். ஏனெனில் இவற்றில் பெரும்பாலனவை முறையாக பதிவு பெறாதவை.

இவற்றின் செயல்பாடுகள் வெளிப் படையானதாக இருப்பதில்லை. முறையற்ற அல்லது வெளியில் சொல்ல முடியாத வகையில் நிதி திரட்டி அதை செலவிடுபவை. இவற்றில் சில மத அமைப்புகளாக, மத பிரசாரத்துக் காக நிதி திரட்டி அதை மட்டுமே மேற்கொள்கின்றன.

இதுபோன்ற மத அமைப்பு சார்ந்த என்ஜிஓக்கள் அனைத்து மதங்களிலும் உள்ளன. சமூக நல மேம்பாட்டுத் திட்டங்களுக்காக செயல் படும் என்ஜிஓ-க்களுக்கு கிடைக்கும் நிதியை விட மிக அதிக அளவில் இது போன்ற மதம் சார்ந்த என்ஜிஓக்களுக்கு அதிக நிதி கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற ஏழை நாடுகளில் என்ஜிஓக்கள் சமூக மேம்பாட்டுக்கு செலவிடும் தொகை யோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் சமூக மேம்பாட்டுக்கு என்ஜிஓக்கள் செல விடும் தொகை மிக மிகக் குறைவு என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்டும் என்ஜிஓக்கள் அடிப்படையில் 31 கேள்வி களுக்கு பதில் அளித்தாக வேண்டும். எப்சிஆர்ஏ சட்டத்தின்படி எந்த நாட்டி லிருந்து எந்த வங்கி மூலமாக நிதி பெறப் படுகிறது, நிதியின் அளவு உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

10 ஆண்டுகளாக செயல்படும் என்ஜிஓ-வாக இருந்தால் இந்த கேள்விகளுக்கு பதில் அனுப்பினாலே அது ஆயிரம் பக்கங்களைத் தாண்டும் என்று என்ஜிஓ-க்கள் தெரிவிக்கின்றனர்.

சில பல சமயங்களில் மக்களுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுப்பதும் இத்தகைய என்ஜிஓக்கள்தான். வளரும் நாடுகளிலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் மருந்துப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதில் என்ஜிஓ-க்களுக்கு பெரும் பங்குண்டு.

வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்டு கிறது என்பதாலேயே இவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது அவசிய மல்ல. ஜனநாயக அமைப்பில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என் பதற்காக இதுபோன்ற சில என்ஜிஓக் களுக்கு பன்னாட்டு நிதி கிடைக்கின்றன. அதை தடுக்கவும் முடியாது.

பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசுகளுக்கு கடிவாளம் போடுவதில் இதுபோன்ற என்ஜிஓக்கள் சிறப்பாக செயல்பட்டதாக வரலாறு உள்ளது. முதலாளித்துவ நாடுகள் என்ஜிஓக்களை கம்யூனிச சித்தாந்தம் கொண்டவையாக செயல்படுகின்றன என்றும், கம்யூனிச நாடுகள் இவற்றை முதலாளித்துவ ஆதரவு போக்குடை யவை என்றும் விமர்சிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி ஒரு மனித சமுதாயம் என்பது சுதந்திரமான, அறிவுசார்ந்த, திறன் மிகு, மனித உரிமைகள் மதிக்கப்படும் சமுதாயமாக இருக்க வேண்டும் என்கிறது.

என்ஜிஓக்கள் விஷயத்தில் மத்திய அரசு விதித்துள்ள தடை, ஒரே அளவீட்டில் அனைத்தையும் பொறுத்திப் பார்ப்பதை போலுள்ளது என்கிறது. அரசும் பரிசீலிக்கட்டும். என்ஜிஓக்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்படட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்