சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளி யிட்ட ஐஐஎம் வரைவு (2015) மசோதாவினால் பெரும் சர்ச்சை உருவாகியிருக்கிறது. இந்த வரைவு மசோதாவுக்கு எதிராக பெரும்பாலான ஐஐஎம்-கள் கருத்து தெரிவித்திருக் கின்றன.
ஐஐஎம்களின் இயக்குநர் குழுவை மத்திய அரசு வழிநடத்தும். இயக்கு நர்களை நியமிக்கும் முன்பு மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். இயக்குநர்களுக்கான விதிமுறைகள் அவர்களின் பதவிக் காலம் உள்ளிட்ட வற்றை மத்திய அரசு முடிவு செய்யும். மேலும் கட்டணம், பணியாளர்கள் நியமனம், நிர்வாகம் உள்ளிட்டவற்றையும் முடிவு செய்யும் அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துள்ளது.
அதேபோல இதுவரை ஐஐஎம்களில் எம்பிஏ பட்டம் வழங்கப்படவில்லை. மேலாண்மை பட்டயத்தை (டிப்ளமோ) வழங்கி வந்தது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், பட்டம் கொடுக்க முடியும். அதேபோல பிஹெச்டியும் வழங்க முடியும் என்பது உள்ளிட்ட பல ஷரத்துகள் உள்ளன.
ஆனால் இந்த மசோதா ஐஐஎம்களின் சுதந்திரத்தை பாதிக்கும் என்று ஐஐஎம் அகமதாபாத்தின் தலைவர் நாயக் தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச தரத்தில் உள்ள ஐஐஎம்களில் மத்திய அரசு தலையிடும் போது கல்வியின் தரம் குறையும். மேலும் ஒவ்வொரு நியமனத்துக்கும் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருக்க முடியாது.
வெளிநாடுகளில் உள்ள பேராசிரியர்களை இங்கு அழைக்கும்போது அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது உள்ளிட்டவற்றில் அரசு முடிவெடுத்தால் தரமான பேராசிரியர்கள் ஐஐஎம்க்கு வருகைதர மாட்டார்கள் என்பது இந்த மசோதாவை எதிர்ப்பவர்களின் கருத்து.
ஆனால் ஐஐஎம் ராய்பூரின் இயக்குநர் Sahay இதில் என்ன தவறு இருக்கிறது. அரசாங்கம் கல்விக்கான பணத்தை ஒதுக்கீடு செய்கிறது. மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுகிறது. அதனால் அரசாங்கத்துக்கு நாம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும், இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.
இப்போதைக்கு ஐஐஎம் ஒரு சமுதாய அமைப்பாக (society) இருந்து இயக்குநர் குழு மூலம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வரும்போது அரசாங்கத்தின் முழு கட்டுப்பாட்டில் ஐஐஎம் வந்துவிடும்.
சட்ட ரீதியாக பார்த்தால், மக்களின் வரிப்பணம் இந்த கல்வி நிறுவனங் களுக்குச் செல்கிறது, அதனால் அரசாங்கம் தலையிடலாம் என்பது சரிதான். ஆனால் ஒவ்வொரு விஷயத்துக்கும் அரசாங்க முடிவுக்காக காத்திருக்க முடியுமா? தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் எப்படி ஐஐஎம்-க்கு வருவார்கள்.
தற்போது இயக்குநர் குழுவில் முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர் களின் ஆலோசனையுடன் ஐஐஎம் செயல்படுகிறது. இயக்குநர்களை நியமிக்கும் பொறுப்பை அரசாங்கம் எடுத்துக் கொண்டால் யாரை நியமிக்குமோ? என்றார் நம்மிடம் பேசிய முன்னாள் ஐஐஎம் மாணவர் ஒருவர்.
இந்த நிலையில் ஐஐஎம் அகமதாபாத்தின் (ஐஐஎம்-ஏ) இயக்குநர் ஆஷிஷ் நந்தா, இந்த மசோதாவில் இருந்து ஐஐஎம் ஏ-க்கு விலக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 2002-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசின் நிதி இல்லாமலேயே செயல்படுகிறது. ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது. இதனால் இந்த மசோதாவில் இருந்து தப்பிக்க பார்க்கிறார்.
தற்போது நாட்டில் 13 ஐஐஎம்கள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு நிதி ஆண்டில் 6 ஐஐஎம்கள் திறக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 2 லட்சம் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு படிப்பதற்கு போட்டி போடுகின்றனர். இவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago