அந்தக் கால தமிழ்படத்தின் தலைப்பாக இருக்கிறதே என நினைக்க வேண்டாம். தங்கத்தை விரும்பாத பெண்கள் உண்டா என வர்ணிக்காத கவிஞரும் கிடையாது. உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கியமாக இருப்பதும் தங்கம்தான். உலகம் முழுவதும் உள்ள தங்கச் சுரங்கங்கள் மூலம் 8,310 கோடி டாலர் அளவுக்கு ஆண்டுதோறும் தங்கம் வெட்டியெடுக்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி இல்லையெனில் வறுமை ஒழிப்பு சாத்தியமாகாது. வளர்ச்சியடையும் நாடுகளில் தங்கச் சுரங்கத்தின் பங்களிப்பு நிச்சயம் இருக்கிறது. அத்தகைய தங்கச் சுரங்கம் இல்லாத நாடுகள் வேறு வகையில் முன்னேற்றம் கண்டு வருகின்றன.
$ 2000-ம் முதல் 2013-ம் ஆண்டு வரையான காலத்தில் தங்கச் சுரங்கங்களின் மூலமான பொருளாதார பங்களிப்பு சர்வதேச அளவில் 7 மடங்கு அதிகரித்துள்ளது.
$ தான்சானியாவில் 2000-ம் ஆண்டு முதல் 2007 வரையான காலத்தில் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 84 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாகக் குறைந்துள்ளது.
$ கானாவில் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.
$ 2013-ம் ஆண்டு சர்வதேச அளவில் உற்பத்தி செய்த தங்கத்தின் அளவானது 17,160 கோடி டாலர். இது கானா, தான்சானியா மற்றும் ஈக்வேடார் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) விட அதிகம்.
$ நேரடி வரி வருவாயில் 60% சில நாடுகளுக்கு தங்கச் சுரங்கங்கள் மூலம் கிடைக்கிறது.
$ சில நாடுகளுக்கு தங்கச் சுரங்கத்திலிருந்து ராயல்டி தொகை 15% அளவுக்குக் கிடைக்கிறது.
$ உலகம் முழுவதும் உள்ள தங்கச் சுரங்கங்களில் 10,00,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
$ மறைமுக வேலைகளில் 30,00,000 பேர் ஈடுபட்டுள்ளனர்.
$ பொதுவாக சராசரி பணியாளர்களின் ஊதியத்தைவிட தங்கச் சுரங்க பணியாளர்களின் ஊதியம் அதிகமாகவே உள்ளது.
$ தங்கச் சுரங்கங்களில் பணியாற்றுவோரில் 90% பேர் உள்ளூர் பணியாளர்கள். இதனால் உள்ளூரில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது.
$ தங்க சுரங்கங்களில் வேலை வாய்ப்பு தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ள 30 நாடுகளில் பெரும்பாலானவை ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகள்தான்.
$ இந்நாடுகளிலிருந்து 90% அளவுக்கு உலக நாடுகளின் தங்கத்தின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
$ தங்கச் சுரங்க நிறுவனங்கள் அந்தப் பகுதியில் சுற்றுச் சூழல் சமூக பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
$ தங்கச் சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் சாலை வசதி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், அப்பகுதி மேம்பாடு என பல வகைகளில் சுரங்கத்தை சுற்றியுள்ள பகுதிகள் மேம்படுகின்றன.
$ சுகாதார நடவடிக்கைகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுரங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் விழிப்புணர்வு நடவடிக்கையால் ஹெச்ஐவி, காச நோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பெருமளவு குறைந்துள்ளது.
$ உலக வங்கி, அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பு (யுஎஸ்ஏஐடி), இங்கிலாந்தின் சர்வதேச மேம்பாட்டு அமைப்பு, கேர் எனப்படும் தரச்சான்று அமைப்புகள் உள்ளிட்டவையும் சமூக பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படுத்தும் தங்கச்சுரங்கத் தொழிலை அங்கீகரித்து அதற்கு முக்கியத்துவம் தந்துள்ளன. ஏழ்மை நிலையிலிருந்த நாடுகளை முன்னேற்றியதில் இந்த சுரங்கங்களுக்கு அதிக பங்கு இருப்பதை உணர்த்தியுள்ளன.
இந்தியாவில் தங்கச் சுரங்கம்
கர்நாடக மாநிலத்தில் கோலார் தங்கச் சுரங்கம் செயல்பட்டது. கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து பாரம்பரியமாக இங்கு தங்கம் வெட்டி எடுத்துள்ளனர். பலரது கட்டுப்பாடுகளுக்கு பிறகு 1956 ல் மைசூர் அரசாங்கத்திடம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு 1962ல் இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சக கட்டுப்பாட்டில் வந்தது.
மொராய்ஜி தேசாய் இதன் தலைவராக இருந்தார். தங்கத்தைவிட, வெட்டி எடுக்கும் செலவு அதிகமாக இருந்ததால் 2001-ல் இந்த சுரங்கம் கை விடப்பட்டது.
கிராஃபிக்ஸ் : தீ.சங்கர் கணேஷ்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago