துணிவே தொழில்: வெற்றியை நிர்ணயிப்பது எது?

By அஸ்பயர் கே.சுவாமிநாதன்

வெற்றிகரமான தொழிலதிபர்களாக வலம் வருவோரின் பின்னணியில் அவர்களுடைய வெற்றியின் சூத்திரங்களாக விளங்கியவை இலக்கும், திட்டமிடலும்தான். இலக்கை நிர்ணயிப்பது திட்டமிடுவது ஆகிய வற்றின் முக்கியத்துவத்தை கடந்த வாரம் பார்த்தோம்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கருத்தரங்குகளில் பேசும்போது அவர்கள் தாங்கள் காலாண்டு அல்லது முதல் செமஸ்டரில் எந்தெந்த பாடங்களை எவ்வளவு நாளில் படிக்க வேண்டும், தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்து கொள்ள வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறுவர்.

ஆனால் புத்தகத்தின் புது மணம் போகப் போக மாணவர்களின் இலக்கும் குறைந்துகொண்டே போகும். இதனால் தேர்வின் போது பெரும்பாலான மாணவர்கள் சோபிக்காமல் போவதை சுட்டிக் காட்டியுள்ளேன்.

தொழில் முனைவோராக தொழில் தொடங்குவோர் ஆரம்ப காலத்தில் இலக்கை நிர்ணயித்து செயல்படுவர். ஆனால் காலம் போகப் போக அவர்களது ஆவேசம் குறைந்துபோகும். இதனால் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் பின்னடைவைச் சந்திக்க நேரும்.

இலக்கு, திட்டமிடுதல் மட்டுமே வெற்றிகரமான தொழில் முனைவோராக உருவாக போதுமா? என்றால் அது போதாது. அதற்கு மேல் செயல்படுத்துதல் (Execution) அதாவது திட்டமிட்ட இலக்கை நோக்கி நமது செயல்பாடுகள் அமைந்துள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தொழில் முனைவோராக தொழில் தொடங்குவோர் ஆரம்ப காலத்தில் இலக்கை நிர்ணயித்து செயல்படுவர். ஆனால் காலம் போகப் போக அவர்களது ஆவேசம் குறைந்துபோகும். இதனால் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் பின்னடைவைச் சந்திக்க நேரும். இலக்கு, திட்டமிடுதல் மட்டுமே வெற்றிகரமான தொழில் முனைவோராக உருவாக போதுமா? என்றால் அது போதாது. அதற்கு மேல் செயல்படுத்துதல் (Execution) அதாவது திட்டமிட்ட இலக்கை நோக்கி நமது செயல்பாடுகள் அமைந்துள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தொழில் முனைவோராகத் தொடங்கி இலக்கை நிர்ணயித்து அதைத் திட்டமிட்டு செயல்படுகிறவர்கள் நிச்சயம் வெற்றியை எட்டியுள்ளனர். தோல்வியைச் சந்தித்த பெரும்பாலானோர் நிர்ணயித்த இலக்கிற்கு உரிய செயல்வடிவம் கொடுக்கவில்லை என்பதுதான் ஆராய்ச்சி பூர்வமான உண்மை. இலக்கை நிர்ணயித்து, அதற்காக திட்டமிடலை உருவாக்க அதிக நேரம் செலவிடுகிறோம்.

ஆனால் அதை செயல்படுத்த உரிய நேரம் அளிக்கிறோமா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்ச்சியான கண்காணிப்பு மிக மிக அவசியம். தினசரி, வாரந்தோறும், மாதந்தோறும் கண்காணித்து திட்டப் பணிகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை உடனுக்குடன் மேற் கொள்ள வேண்டும். செயல்வடிவம் கொடுப்பதில் சுணக்கமாக சோர்ந்து போனால் இலக்குகளை எட்ட முடியாது. தலைசிறந்த தொழிலதிபர்களின் வெற்றி ரகசியம் நிர்ணயித்த இலக்கை, நிர்ணயித்த காலத்தில் எட்டியதுதான்.

இலக்கை நிர்ணயித்து அதை உரிய காலத்தில் உரிய நேரத்தில் சென்றடைய தேவையான திருத்தங்களை அவ்வப்போது மேற்கொண்டு செயல்படுத்தாவிட்டால் வெற்றியாளராகும் வாய்ப்பை இழந்து விடுவோம். தொழில் முனைவோருக்கு இலக்கு, திட்டமிடுதல் ஆகியவற்றோடு அதை செயல்படுத்துவதற்கான செயல் திட்டம், கண்காணிப்பது மிக அவசியம்.

வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் அல்லது துறைகளில் சாதனை புரிந்தவர்கள் குறிப்பாக விளையாட்டு வீரர்கள் என அனைவருமே தங்கள் துறைகளில் எட்ட வேண்டிய இலக்கை நிர்ணயித்து அதை செயல்படுத்தி வெற்றி கண்டவர்களாக இருக்கின்றனர். இலக்கு, திட்டமிடுதல், செயல்படுத்துதல் இவற்றையெல்லாம் மீறி கூடுதலாக ஒரு விஷயமும் அவசியம். அதாவது எந்தத் தொழிலில் இறங்கியுள்ளோமே அத்தொழில் துறை வல்லுநர்களை நமது ஆலோசகர்களாகக் கொண்டு செயல்படுவது அவசியம்.

நமது வியாபாரம், நமக்குத் தெரியாதா? இதில் எதற்கு அடுத்த நபரின் ஆலோசனை என்று தோன்றக் கூடும்.

ஆனால் இத்தகைய ஆலோசகர் இருந்தால், அவர்களது அறிவுரை நமது தொழிலை சீர்படுத்த உதவும். நாம் நிர்ணயித்த இலக்கை நோக்கி செல்கிறோமா, நிர்ணயித்த இலக்கு சாத்தியமானதா என்பதையெல்லாம் இத்தகைய ஆலோசகர்கள் மிகத் துல்லியமாகக் கூறிவிடுவர். எனவே தொழிலில் வெற்றி பெற நிபுணர்களின் அறிவுரை, ஆலோசனை மிகவும் அவசியம்.

எனது சொந்த அனுபவத்தில் இதுவரை 12 நிறுவனங்களைத் தொடங்கி அதில் 7 நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி அவற்றி மற்றவர்களுக்கு விற்றுள்ளேன். 2 நிறுவனங்களில் படு தோல்வியைச் சந்தித்தேன். தெரிந்த தொழிலைத்தான் தொடங்கினேன். இதில் வெற்றி, தோல்வி இரண்டுக்கும் யார் காரணம். நான்தான். எனவே எந்தத் தொழில் தொடங்கினானும் அதில் வெற்றி பெறுவதற்கு ஆலோசகர்கள் மிகவும் அவசியமாகிறார்கள்.

நீங்கள் ஒரு தொழிலை நடத்திக் கொண்டிருக்கும்போது அது சரியானபடி நடக்கிறதா அல்லது இலக்கு மாறிச் செல்கிறதா என்று உங்களால் எளிதில் உணர முடியாது. ஏனெனில் தொழிலின் ஒரு அங்கமாக நீங்கள் மாறிவிடுவீர்கள். உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு உங்களுக்கு ஏற்பட்டுவிடும்.

ஆனால் வெளியிலிருந்து அதாவது மூன்றாம் நபராக பார்ப்பவர்களுக்கு இதில் உள்ள நல்லது, கெட்டது தெளிவாகப் புரியும். ஆலோசனை கூறுவதோடு, மாற்றுத் தீர்வுகளையும் அளிப்பர்.

நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்களா இந்த திசையில் சென்றால் இலக்கை எட்ட முடியுமா என்று கூறுவர். இலக்கு மாறும்போது அதை உணர்த்தி சரியான பாதைக்கு திருப்புவதில் வெற்றியாளர்களின் பங்கு மகத்தானதாக உள்ளது.

நீங்கள் யாராக உருவாக வேண்டும் என்பதில் உங்களுக்கு ரோல் மாடல் எனப்படும் முன்னோடிகள் இருக்கலாம். ஆனால் அவ்விதம் உருவாவதற்கு உங்க ளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் உங்களது ஆலோசகர்கள்தான்.

இலக்கு, திட்டமிடுதல், செயல் படுத்துதல் ஆகிய மூன்றும் செயல்படுத்தினால் கிடைப்பது ரிசல்ட். அது எவ்வாறு இருக்கும் என்பது வரும் வாரங்களில் பார்க்கலாம்.

aspireswaminathan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்