வெற்றி மொழி: தாமஸ் ஜெபர்சன்

By செய்திப்பிரிவு

1743- ஆம் ஆண்டு பிறந்த தாமஸ் ஜெபர்சன், அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர். சுதந்திர அமெரிக்காவிற்கான குறிப்பிடத்தக்க ஆதரவாளராக அறியப்பட்டவர். வரலாற்று அறிஞர் மற்றும் தத்துவவாதியான இவர், ஒன்றுபட்ட அமெரிக்காவை உருவாக்கியத் தலைவர்களில் முக்கியமானவர்.

இவரது ஆட்சி காலத்திலேயே இன்றைய அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க நிலப்பகுதிகள் பிரான்ஸிடமிருந்து வாங்கப்பட்டன. ஜனநாயகத்தின் கொள்கைகளில் அதிக பற்றுடையவராக விளங்கிய தாமஸ் ஜெபர்சன் 1826 ஆம் ஆண்டு இறந்தார்.

$ நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கேட்பதை விட்டுவிட்டு செயல்படுங்கள்; செயல்பாடு ஒன்றே உங்களை வரையறுக்கும்.

$ சுதந்திரம் என்ற மரமானது தேசப்பற்றுள்ளவர்கள் மற்றும் கொடுங்கோலர்களின் ரத்தத்தால் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றது.

$ தாமதம் என்பது தவறுக்கு முன்னுரிமைக்குரியதாக உள்ளது.

$ தனது இலக்கினை அடைவதற்கான சரியான அணுகுமுறை கொண்ட ஒருவனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது; தவறான அணுகுமுறை கொண்ட ஒருவனுக்கு இந்த பூமியில் எதுவும் உதவ முடியாது.

$ நான் கடந்தகால வரலாறு தொடர்பான கனவுகளைவிட எதிர்காலம் பற்றிய கனவுகளையே விரும்புகிறேன்.

$ ஒரு சிறந்த சிந்தனையின் ஒளியானது, எனக்கு பணத்தைவிட அதிக மதிப்பினை உடையது.

$ புத்தகங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது.

$ ஞானம் என்னும் புத்தகத்தின் முதல் அத்தியாயம் நேர்மை.

$ அரசியல், மதம் மற்றும் தத்துவம் போன்றவற்றில் எனக்கு ஒருபோதும் கருத்துவேறுபாடு கிடையாது; இவை நட்பினை பிரித்துவிடக்கூடியவை.

$ கோபமாக இருக்கின்றீர்களா? பேசுவதற்கு முன் பத்து வரை எண்ணுங்கள்; மிகவும் கோபமாக இருக்கின்றீர்களா? நூறு வரை எண்ணுங்கள்.

$ தைரியம் உடைய ஒரு மனிதன் பெரும்பான்மையான பலத்திற்கு சமமானவன்.

$ மற்றவருக்கு நன்மை செய்வதில் ஒவ்வொரு மனித மனமும் மகிழ்ச்சியை உணர்கின்றது என்று நம்புகிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE