பெண்களின் பங்கு
பங்குச் சந்தை பட்டியலில் உள்ள பெரிய நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் (Board of Directors) குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் இருக்கவேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டது. இதனால் பல நிறுவனங்கள் பெண் இயக்குநர்களை தேட, வேறு பல நிறுவனங்களில் அவற்றை துவக்கியவரின் மனைவி, மகள், மருமகள் என பலரை இயக்குநர் குழுவில் சேர்த்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நிறுவனங்களில் பெண்கள்
பத்து வருடத்துக்கு முன், இந்திய நிறுவனங்களில் ஒன்றில் மட்டுமே தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பெண் இருந்துள்ளார். இன்று 22 நிறுவனங்களில் பெண் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளனர். இது தலைமைச் செயல் அதிகாரிகளின் எண்ணிக்கையில் 0.5% தான்.
வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்களில் 10% நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இது 2%விட குறைவு. சீனாவில் 550 நிறுவனங்களில் அதாவது 21% நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் உள்ளனர்.
அங்கு இரண்டு பெரிய நிறுவனங் கள் முழுவதும் பெண்களால் நடத்தப் படுகின்றன. உலக அளவில் Fortune 500 எனப்படும் மிகப் பெரிய நிறுவனங்களில் 5%விட குறைவானவற்றில் பெண் சிஇஓ-க்கள் உள்ளனர். 13% நிறுவனங்கள் பெண் இயக்குநர்களை கொண்டுள்ளது. நார்வே நாட்டில் 41% நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் உள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் பெண்களை நிறுவன குழுவில் வைப்பது கட்டாயமயமாக்கவில்லை, மாறாக அதனை தூண்டும் விதத்தில் 2015க்குள் நிறுவன குழு பொறுப்புகளில் 25% பெண்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தனர். இன்று இந்த இலக்கை நெருங்கிவிட்டனர். இங்கிலாந்தில் முதல் 100 பெரிய நிறுவன குழுவில் 23.5% பெண்கள் உள்ளனர். ஜெர்மனியில் அடுத்த ஆண்டிற்குள் 30% குழு பொறுப்புகள் பெண்களுக்கு கொடுக்கவேண்டும் என்ற கம்பெனி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏன் பெண் இயக்குநர்கள்
பெண்கல்வி வளர்ந்து வரும் இந்நேரத்தில் பெண்களை நிறுவன பொறுப்புகளில் வைப்பது மிக அவசியம். குறிப்பாக உயர் கல்வியில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. பல நாடுகளில் ஆண்களை விட பெண்கள் உயர் கல்வி நிறுவனங்களில் அதிகம் உள்ளனர். எனவே சமூக-பாரம்பரிய குடும்ப அமைப்புகளில் அவர்களை முடக்கிவிடாமல், வியாபார நிறுவன மேலாண்மையிலும் அவர்களுக்கு உரிய இடத்தை அளிப்பதும் அதன் மூலம் வியாபார பொருளாதாரத்தை மேலும் உயர்த்துவதும் அவசியமாகிறது.
பொதுவாக பெண்களிடம் பொறுமை யும், எல்லோரையும் அரவணைத்து செல்லும் பண்பும், தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை இல்லாமல் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதால், அவர்கள் நிறுவன மேலாண்மையில் சிறப்பாக பங்காற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
கிரெடிட் சூயிஸ் குழும நிறுவனம் செய்த ஆராய்ச்சியில், முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்களை கொண்ட நிறுவனங்களின் பங்கு விலை உயர்வதும், அந்நிறுவனங்களின் முதலீட்டின் மேல் கிடைக்கும் லாப விகித மும் அதிகம் என்று கூறுகிறது. ராய்டர்ஸ் செய்தி நிறுவன ஆராய்ச்சியில், ஆண்களும், பெண்களும் உள்ள நிறுவன குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் அந்நிறுவனத்தின் பங்கு சந்தை நிலையை உயர்த்தி உள்ளதாகத் தெரிகிறது.
பெண்களுக்கு உள்ள தடைகள்
நிறுவன குழுவில் பெண் இயக்கு நர்களை சேர்ப்பதை கட்டாயமாக்கிய தால், பல நிறுவனங்கள் அவர்களை தனிப்பொறுப்புடைய இயக்குநர்களாக்கி யுள்ளனர். இதனால் அவர்களின் பங்களிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. பல நிறுவனங்கள் சட்ட விதிமுறையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்காக அவ்வாறு செய்துள்ளன.
ஒரு நிறுவன இயக்கு நர் குழுவில் உள்ள பெண் உறுப்பினர்தான் செய்யவேண்டிய சேவை குறித்து தீவிரமாக தயாரித்துக் கொள்ள முயன்றபோது, மற்றொரு ஆண் உறுப்பினர், ‘சட்டத்தின் விதிமுறையை பின்பற்றவேண்டிய கட்டாயத்திற்காகத் தான் நீங்கள் இங்கு உறுப்பினராக உள்ளீர்கள், எனவே நீட்டுகின்ற இடத்தில் கையெழுத்திட்டால் போதும்’ என்று கூறியபோது, இச்சட்டத்தின் விளைவு எந்த அளவிற்கு நீர்த்து போய் இருக்கிறது என்று தெரியவருகிறது.
அண்மையில் ஒரு மது உற்பத்தி நிறுவனத்தில் இயக்குநர் குழு உறுப்பி னராக ஒரு பள்ளி தலைமை ஆசிரியரை நியமித்தது சர்ச்சையை உருவாக்கியது. அப்பெண்மணி மேலும் பல நிறுவனங்களில் இயக்குநர் குழு உறுப்பினராக உள்ளார். இதுபோல, ஒரு பெண் பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருப்பது, இத்துறையில் இன்னும் போதுமான எண்ணிக்கையில் பெண்கள் வரவில்லை என்பதையே காட்டுகிறது.
மேலாண்மையில் பெண்களின் பங்கேற்பு
பல நிறுவனங்கள் பெண்களின் பங்கேற்பை வளர்த்தெடுக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் பல நிலைகளில் உள்ள பெண்களின் வேலை, திறமை இவற்றைக் கண்காணித்து, அவர்கள் முன்னேறும் படிநிலைகளில் உள்ள தடை களை நீக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களின் தகுதியை வளர்க்க வேண்டும்.
தொழிலுக்கு தேவைப் படும் இடர்களிலிருந்து எழும் திறன், மன வலிமை, தங்கள் திறமை மீது உள்ள நம்பிக்கை, கடினமான சூழலை எதிர்கொள் ளும் திறன் என்பதை எல்லாம் அளிக்க கூடிய பயிற்சியும், வாய்ப்பும் வேண்டும். இவற்றை எல்லாம் ஒரு நிறுவனம் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுக் கான முன் மாதிரி உருவாக்கி அதன் மூலம் மற்ற பெண்களை மேலாண்மையின் உயர் நிலைக்கு எடுத்து செல்லவேண்டும். ஆண்-பெண் இன வேறுபாடின்றி நிறுவன அமைப்பு இயங்கவேண்டிய இயல்பான நிலைக்கு ஆண்களை தயார்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது.
seenu242@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago