பரிசுப் பொருட்களில் புழங்கும் கோடிகள்

By செய்திப்பிரிவு

பரிசுகள் கொடுக்கும் பழக்கம் நமது பண்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்று. பொருளாகவோ பணமாகவோ அளித்து மகிழ்வதும், பெற்றுக்கொள்வதும் காலங்காலமாக நமது பழக்க வழக்கங்களில் இருந்து வருகிறது. ஆனால் கால மாற்றத்தில் அந்த பண்பாட்டு பழக்கங்கள் நவீன வடிவம் எடுத்து தனி சந்தையாகவே உருவாகி வருகிறது. அப்படியாக நவீன வடிவம் எடுத்துள்ள பரிசுப் பொருள்களுக்கான சந்தையில் பல ஆயிரம் கோடிகள் புழங்குகிறது என்பதுதான் ஆச்சர்யம்.

வழக்கமாக பரிசு கொடுக்க வேண்டும் என்றால் நமக்கு விருப்பமான பொருளை வாங்கிக் கொடுப்போம். அல்லது கொடுக்கப்பட வேண்டியவருக்கு தேவையான அல்லது விருப்பமான பொருளை வாங்கிக் கொடுப்போம். இதுதான் நடைமுறை. பொருட்களாக இல்லையென்றால் ரொக்கமாக அளிக்கும் பழக்கமும் நம்மிடையே இருந்து வருகிறது. ஆனால் ரொக்கமாக அளிப்பது பரிசுப் பொருள் கொடுக்கும் திருப்தியை கொடுப்பதில்லை.

இந்த பண்பாட்டு நடவடிக்கை நவீனமாக மாறியதில் பரிசு கொடுப்பவருக்கும் வாங்குபவருக்குமான தேவையும், விருப்பமும் ஒரே கோட்டில் இணைகிறது.

அதாவது பொருளாகவும் கொடுக்கப்படுவதில்லை, பணமாகவும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் பரிசு கொடுத்த திருப்தி கொடுப்பவரும், வாங்கிய திருப்தியில் பெறுபவரும் அடைந்து விடுகின்றனர்.

நவீனம் எடுத்துள்ள வடிவம்.

பொருளாகவும் இல்லை, பணமாகவும் இல்லை. அப்படி என்னதான் பரிசுப் பொருள் என்கிறீர்களா.... அதுதான் கிப்ட் கார்டு, கிப்ட் வவுச்சர், இ-கார்டு, இ-வவுச்சர் என பல வடிவங்களில் புதிய சந்தையாக உருவாகி வருகிறது. வளர்ந்து வரும் இந்த பரிசுப் பொருள்களுக்கான புதிய சந்தை கோடிகளில் புழங்குகிறது. எதிர்காலத்தில் பரிசுப் பொருள்கள் சந்தையை இதுதான் ஆக்கிரமிக்க உள்ளது என்கின்றர்.

தனிநபர்களது கொண்டாட்டங்களை மட்டுமல்ல, பெரு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை ஊக்குவிக்கவும், மகிழ்விக்கவும் இந்த முறையைத்தான் இப்போது கையாண்டு வருகின்றன.

உலக அளவில் பரிசுப் பொருட்களுக்கான சந்தையில் 30 கோடி டாலர்கள் ஒரு ஆண்டுக்கு புழங்குகிறது என்று அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பிரீபெய்ட் கார்டு பிரிவு தலைவர் கூறியுள்ளார். இந்தியாவில் 2011ல் காலகட்டத்தில் 4 கோடி டாலர் அளவுக்கு பரிசுப் பொருட்களை சந்தை இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டது. இது ஆண்டுக்காண்டு 30 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது என்றும் அந்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.

எந்த கொண்டாட்டத்துக்கும் பரிசுப் பொருட்களை தூக்கிக் கொண்டு அலைய தேவையில்லை. இணையத்திலேயே கிப்ட் கார்டுகள் அல்லது வவுச்சர்களை அனுப்பி விடலாம்.

எவ்வளவு தொகைக்கு பரிசு கொடுக்க விரும்புகிறோமோ அந்த தொகைக்கு இந்த கிப்ட் கார்டுகள், வவுச்சர்கள் மற்றும் பிரீபெய்ட் கார்டுகளைக் கொடுக்கலாம்.

அன்பளிப்பு பெறுபவர்களுக்கு முழு நிறைவான சந்தோஷம் தரக்கூடியது இது. தங்களது தேவைக்கு ஏற்ப இதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பலரும் ஒரே மாதிரியான பரிசுப் பொருட்கள் வாங்கி வரக்கூடிய அசௌகர்யங்களை இதன் மூலம் தவிர்க்க முடியும். ஒரே மாதிரியான பரிசுப்பொருட்கள் சேர்வதையும் இது குறைத்து விடுகிறது என்பதுதான் இதன் சிறப்பு. தற்போது எல்லா வகையான நிகழ்ச்சிகள் அல்லது கொண்டாட்ங்களுக்கும் இந்த முறையில் பரிசுப் பொருட்கள் நடைமுறை வந்துவிட்டது.

தங்க நகைகள், ஆபரணங்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா, மருத்துவமனை செலவுகளுக்குகூட பரிசுக் கூப்பன்கள் கொடுக்கும் புதிய நடைமுறை உருவாகியுள்ளது. இதன் மூலம் பெறுபவர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப இதை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எந்த இடங்களுக்கும் அலையாமல் இணையதளத்திலேயே கிப்ட் வவுச்சர்களை வாங்கிக், இணையம் மூலமாகவே அனுப்பும் வசதியும் கிடைக்கிறது. இதற்கென்று கிப்ட் கார்ட்ஸ் இந்தியா, கிப்ட் பிக் டாட் காம் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் உள்ளன.

பல விற்பனையாளர்களின் பரிசுக் கூப்பன்களை ஒரே இணையதளத்தில் வாங்கி விடலாம் என்பதும் கவனிக்க வேண்டியது. இதன் தொடர்ச்சியாக இ கிப்ட் கார்டு முறைகளும் உருவாகி வருகிறது.

பிரீபெய்ட் கார்ட்

கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் நமக்கு தெரியும். ஆனால் பிரீபெய்ட் கார்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. இது கிட்டத்தட்ட பிளாஸ்டிக் பணம். இருப்பு இருக்கும் வரை செலவு செய்து கொள்ளலாம். மால்கள் மற்றும் புட் கோர்டுகளில் இந்த வகையில் பிரீபெய்ட் கார்டுகள் புழகத்தில் வந்துவிட்டன.

எவ்வளவு தொகைக்கு பரிசு கொடுக்க நினைக்கிறீர்களோ அவ்வளவு ரூபாயை கட்டி இந்த கார்டை வாங்கி கொடுத்துவிடலாம். குறிப்பிட்ட மாலில் உள்ள கடைகளில் எந்த பொருள் வாங்கினாலும் இந்த கார்டில் உள்ள பணத்தைக் கொண்டு வாங்கிக்கொள்ளலாம். இதனால் பரிசுப் பொருட்களை தேர்ந்தெடுக்க ஒதுக்கும் நேரம் மற்றும் அலைச்சல்கள் குறையும்.

கிப்ட் வவுச்சர்கள்

குறிப்பிட்ட கடையில் மட்டும் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு ஏற்ப கிப்ட் வவுச்சர்கள் கொடுக்கப்படுகிறது. ஊழியர்களை ஊக்குவிக்க கார்பரேட் நிறுவனக்கள் இதைக் கடை பிடிக்கின்றன.

அன்பளிப்பு கொடுக்கப்பட வேண்டியவர் பெயரைக் குறிப்பிடப்படும் என்பதால் அந்த நபர் மட்டுமே இந்த வவுச்சரை பயன்படுத்த முடியும். இதனால் வேறு நபர்கள் கையில் இந்த வவுச்சர் சென்றாலும் பயன்படுத்த முடியாது. ஸ்டாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற பெரிய அங்காடிகள் இது போன்ற வவுச்சர்களை வழங்குகின்றன.

உணவக கூப்பன்கள்

கார்பரேட் மற்றும் ஐடி நிறுவனங்கள் இந்த வகையில் உணவுக் கூப்பன்களை வழங்குகின்றன. முன்னணி உணவகங்களில் இதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்கின்றன. குறிப்பிட்ட உணவங்களில் இந்த கூப்பன் செல்லும் என்று அறிவிப்பதால் தங்களுக்கு ஏதுவான நேரத்தில் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். அல்லது குடும்பத்துடன் நேரம் செலவிட இந்த கூப்பன்களை பயன்படுத்தலாம். நேரடியாக பண பரிசுகளை கொடுப்பதைவிட இதுபோன்ற கூப்பன்களை அளிப்பதன் மூலம் ஊழியர்களுக்கு கூடுதல் உற்சாகம் கொடுக்கின்றன கார்பரேட் நிறுவனக்கள்.

இ-கிப்ட் கார்ட்ஸ்

சில இ-காமர்ஸ் நிறுவனங்கள் இ-கிப்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளன. இவற்றை வாங்கி யாருக்கு பரிசுக் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு இமெயில் மூலமாகவே அனுப்பி விடலாம். இந்த முறையில் எல்லாமெ விர்ச்சுவல்தான். ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வரும் இந்த நாட்களில் இந்த விர்ச்சுவல் கிப்ட் வவுச்சர்களின் வர்த்தகமும் அதிகரித்து வருகிறது.

இனி என்ன? உனக்கு பரிசுப் பொருள் வாங்க ஊரெல்லாம் அலைந்து திரிந்தேன் என கதையெல்லாம் அளக்க முடியாது. சிம்பிளாக, எளிமையாக அன்பை வெளிப்படுத்த வந்துவிட்டது இந்த கிப்ட் கார்டு சந்தை. கொடுப்பவருக்கும், பெறுபவருக்குமாக இரண்டு தரப்புக்குமே மகிழ்ச்சியை கொடுக்க இனி கிப்ட் கார்டுகளே சிறந்த பொருத்தம் எனலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்