வில்லியம் ஹாஸ்லிட், 1778 முதல் 1830 வரை வாழ்ந்த ஒரு ஆங்கில எழுத்தாளர். மேலும், இவர் ஒரு நாடக விமர்சகர், தத்துவ மற்றும் சமூக சீர்திருத்தவாதி. இவை மட்டுமல்லாமல், இவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. முதலில் ஓவியத் துறையில் விருப்பப்பட்டு, பின்னர் இலக்கியத் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
தன்னுடைய கட்டுரைகள் மற்றும் இலக்கியம் தொடர்பான விமர்சனங்களின் மூலம் புகழ் பெற்றார். ஆங்கில மொழியின் கட்டுரைகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பான எழுத்தாளர்களில் சிறந்தவராகக் கருதப்படுகிறார்.
$ ஒரு மென்மையான வார்த்தை, ஒரு கனிவான பார்வை, ஒரு நல்ல புன்னகை ஆகியவற்றால் அதிசயங்கள் மற்றும் அற்புதங்களை நிகழ்த்த முடியும்.
$ இதயம் மற்றும் புரிதலின் மூலம் இயற்கையினைப் பார்க்க வேண்டுமே தவிர நம்முடைய கண்களால் அல்ல.
$ அழுவதற்கும் சிரிப்பதற்கும் தெரிந்த ஒரே விலங்கு மனிதன் மட்டுமே.
$ மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதைப் பலரும் பார்த்தார்கள்; ஆனால் ஏன் என்று கேட்டவர் நியூட்டன் ஒருவரே.
$ விதிகள் மற்றும் மாதிரிகள் ஆகியவை அறிவாற்றல் மற்றும் கலை ஆகியவற்றை அழித்துவிடுகின்றன.
$ செழிப்பு ஒரு சிறந்த ஆசான்; வறுமை அதைவிட சிறந்த ஆசான்.
$ வாக்குறுதிகளை மீறுவதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே சிலர் அதனை மீறிவிடுகிறார்கள்.
$ எந்த அளவு நம்பிக்கை உள்ளதோ அந்த அளவிற்குத் திறமை உண்டு.
$ அறிவைவிட ஆர்வமே அதிக செயல்களைச் செய்ய வல்லது.
$ நீங்கள் வெல்ல முடியும் என்று நினைத்தால், கண்டிப்பாக உங்களால் வெல்ல முடியும்; வெற்றிக்கு அவசியம் நம்பிக்கையே.
$ அடுத்தவரை மகிழ்விக்கும் கலையானது, நம்மை மகிழ்ச்சியாய் வைத்திருக்கும் அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
$ தான் இறந்து விடுவோம் என்பதைப்பற்றி எந்த இளைஞனும் ஒருபோதும் நினைப்பதில்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago