1795-ம் ஆண்டு பிறந்த தாமஸ் கார்லைல் ஸ்காட்லாந்து நாட்டைச் ேசர்ந்த ஒரு தத்துவவாதி, எழுத்தாளர் மற்றும் ஆசிரியர். சிறந்த சமூக பார்வையாளராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் விளங்கினார். தன் வாழ்நாளில் இவர் வழங்கிய பல விரிவுரைகள் மிகவும் புகழ்பெற்றவை.
1837-ல் இவரது சிறந்த படைப்பான பிரெஞ்சு புரட்சி வெளியிடப்பட்டது, அதன் பின்னர் பிரபல எழுத்தாளராக அறியப்பட்டார். 19 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த படைப்புகளைக் கொடுத்த சார்லஸ் டிக்கென்ஸ் மற்றும் ஜான் ரஸ்கின் போன்ற எழுத்தாளர்களுக்கு தூண்டுகோலாக இவரது எழுத்துக்கள் அமைந்திருந்தன.
$ வாழ்க்கையின் சோகம் என்பது, மனிதன் எதனால் அதிகம் பாதிக்கப்படுகிறான் என்பதல்ல; எதனை அவன் இழக்கிறான் என்பதைப் பொருத்தது.
$ புத்திசாலித்தனமான மனிதர்கள் நல்லவர்களே; ஆனால் சிறந்தவர்கள் அல்ல.
$ அனைத்து வகையான அறிவுக்குமான ஆரம்பநிலை ஒரு அன்பான இதயமே.
$ சில விஷயங்கள் மீதான நம்பிக்கையினால் மனிதன் வாழ்கிறானே தவிர பல விஷயங்கள் பற்றிய விவாதங்களினால் அல்ல.
$ எதிரி இல்லையென்றால் சண்டை இல்லை; சண்டை இல்லையென்றால் வெற்றி இல்லை; வெற்றி இல்லையென்றால் மகுடம் இல்லை.
$ ஒவ்வொரு உன்னதமான பணியும் முதல் யோசனையில் சாத்தியமற்றதே.
$ வெற்றியை நோக்கிய விருப்பத்தைக் கொண்ட மனிதனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது.
$ ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர் நம்பிக்கையை பெற்றுள்ளார்; நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார்.
$ பயத்தை வெல்வதே மனிதனின் முதல் கடமை; அதை செய்யாத வரை அவனால் செயல்பட முடியாது.
$ நன்கு எழுதப்பட்ட ஒரு வாழ்க்கையானது கிட்டத்தட்ட அரிதாகவே நன்கு வாழப்பட்ட ஒன்றாகிறது.
$ இலக்கு இல்லாத மனிதன், சுக்கான் இல்லாத கப்பலைப் போன்றவன்.
$ நல்ல வழிகாட்டுதலாக மாறாதவரை தண்டனை என்பது மதிப்பற்றதே.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago